நாம் அனைவரும் அன்றாட காய்கறிகளை நமது வீட்டு மாடியில் பயிர் செய்யலாம். இவ்வாறு பயிர் செய்வதினால் நமக்கு உடல் நலத்தை காப்பதுடன் இயற்கை முறையில் விளைந்த காய்கறிகளை உண்ட திருப்தியும் ஏற்படும். எனவே நம்மால் முடிந்த அளவுக்கு மாடித்தோட்டங்களை ஏற்படுத்தலாம். மாடித் தோட்டம் மரிக்கொழுந்து பயிரிடும் முறை யை இங்கு காணலாம்.
தேவையான பொருட்கள்
- Grow Bags அல்லது Thotti
- அடியுரமாக இட மணல், தென்னை நார்க்கழிவு, மண்புழு உரம், செம்மண், பஞ்சகாவ்யா, வேப்பந்தூள்.
- விதைகள் அல்லது செடிகள்
- பூவாளி தெளிப்பான்
தொட்டிகள்
இச்செடி வளர்வதற்கு அளவு, வடிவம் என்று எதுவும் தேவைப்படாது. செடிகள் வளர்ப்பதற்காக பைகளில் நிரப்பும்போது, பையின் நீளத்தில் ஒரு அங்குலத்துக்குக் கீழ் இருக்குமாறு நிரப்ப வேண்டும், முழுமையாக நிரப்பக் கூடாது.
இதில் அடியுரமாக ஒரு பங்கு மண், ஒரு பங்கு தென்னை நார்க்கழிவு, ஒரு பங்கு இயற்கை உரம் என இந்த மூன்றையும் கலந்து வைக்க வேண்டும். இந்த கலவை தயாரானதும் 10 நாட்கள் கழித்து, கலவை நன்கு மக்கியதும் விதைப்பை மேற்கொள்ள வேண்டும்.
விதைத்தல்
விதைகளை சிறிய பைகளில் விதைக்க வேண்டும். தினமும் தண்ணீர் தெளிக்க வேண்டும். 20 நாட்கள் ஆன நாற்றுகளை தொட்டியின் அல்லது பைகளின் மையத்தில் நடவு செய்ய வேண்டும். நடும் இடைவெளியானது பைகளின் அளவை பொறுத்து மாறுபடும்.
செடிகளாக இருந்தால் நேரடியாகவே பைகளில் நடவு செய்யலாம்.
நீர் நிர்வாகம்
நாற்று நட்டவுடன் பூவாளியால் நீர் தெளிக்க வேண்டும். பின்னர் ஒருநாள் விட்டு ஒருநாள் தண்ணீர் தெளிக்க வேண்டும்.
பைகளை உபயோகிப்படுத்தினால் அதன் அடியில் இரு துளைகளை இட வேண்டும். ஏனெனில் அதிகப்படியான தண்ணீர் இருந்தால் துளை வழியே வெளியேறி விடும்.
உரங்கள்
செடிகளைக் காக்கும் இயற்கை பூச்சிக் கொல்லியான வேப்ப எண்ணையை மாதம் ஒரு முறை தெளிக்க வேண்டும். மண்புழு உரத்தை அடியுரமாக இடுவதால் வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.
சமையலறை கழிவுகளை மட்கச்செய்து உரமாக போடலாம்.
வேப்ப இலைகளை நன்கு காய வைத்துத் தூள் செய்துகொள்ள வேண்டும். இந்தத் தூளைச் செடி ஒன்றுக்கு ஒரு பிடி வீதம் செடியின் வேர் பகுதியில் போட்டு நன்கு கொத்திவிட வேண்டும். இதுவே அடி உரமாகவும், பூச்சிக் கொல்லியாகவும் செயல்படும்.
பாதுகாப்பு முறைகள்
வாரம் ஒரு முறையாவது செடியைச் சுற்றி அடி மண்ணைக் கொத்தி விட வேண்டும். மண்ணை கொத்தி விடாமல் தொடர்ந்து தண்ணீர் ஊற்றுவது பயன் அளிக்காது.
தென்னை நார்க்கழிவு இடுவதால் ஈரப்பதத்தைக் கண்காணித்து தண்ணீர் தெளிக்க வேண்டும். அதிகளவில் தண்ணீர் ஊற்றுவதால் வேர் அழுகி விட வாய்ப்பு உள்ளது.
அறுவடை
இச்செடி வளர்ப்பதன் மூலம் இதன் வாசனை நாள் முழுவதும் இருக்கும். இதன் தளிர்களை கிள்ளி எடுக்க வேண்டும். அப்பொழுது தான் மறுபடியும் தழைத்து வரும்.
மரிக்கொழுந்து பயன்கள்:
- மரிக்கொழுந்து இலையையும் நிலாவரை இலையையும் சம அளவு எடுத்து அரைத்து தலைக்கு தடவினால் செம்பட்டை முடியின் நிறம் மாறும்.
- மாலை, கதம்பம் இவற்றில் வாசனைக்காக மரிக்கொழுந்து சேர்க்கப்படுகிறது.
- மரிக்கொழுந்துகள் அழகு சாதனைகள், நறுமணபொருட்கள், புகையிலை மற்றும் வாசனை திரவியங்கள் தயாரிக்க பயன்படுகின்றன.
வீட்டு தோட்டத்தில் மரிக்கொழுந்து பயிரிடும் முறையை தெரிந்துகொள்ள விரும்புபவர்கள் இங்கே தெரிந்துகொள்ளுங்கள்

Good day sir,
Want to learn more info regarding agriculture