• About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Disclaimer

Agriculture Trip

Best Agriculture Blog in Tamil

  • Home
  • வேளாண்மை
      • காய்கறிகள்
      • கீரைகள்
      • பழங்கள்
      • தானியங்கள்
      • மரங்கள்
      • பூக்கள்
      • கிழங்கு வகைகள்
      • எண்ணெய் வித்துக்கள்
      • மலைத்தோட்டப் பயிர்கள்
      • மூலிகைப் பயிர்கள்
      • இதர சாகுபடி
  • மாடித் தோட்டம்
  • பயிர் பாதுகாப்பு
    • உரங்கள்
    • அரசு மானியம் / திட்டங்கள்
    • மண்
  • கால்நடைகள்
  • இயற்கை மருத்துவம்
    • மருத்துவ பயன்கள்
    • அழகு குறிப்புகள்
    • ஆண்கள்
    • பெண்கள்
    • குழந்தைகள்
  • மற்றவை
    • நெல்
    • விவசாய புகைப்படங்கள்
    • சாதனையாளர்கள் - விவசாயிகள்
உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கு பயிரிடும் முறை மற்றும் பயன்கள்

November 18, 2017 By Navinkumar V 1 Comment


0 Shares
Share
Tweet
Share
  • உருளைக்கிழங்கு செடியின் வேரில் இருந்து பெறப்படும் இக்கிழங்கு, மாவுப்பொருள் நிறைந்தது.
  • அரிசி, கோதுமை, சோளம் ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக உலகில் நான்காவதாக அதிகம் பயிர் செய்யப்படும் செடியினமாகும்.
  • இன்றைய பெரு நாட்டுப் பகுதியே உருளைக் கிழங்கின் தாயகமாகும்.
  • அங்கிருந்து 1536 இல் ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தப்பட்டு, ஐரோப்பிய கடல் பயணிகள் வழியாக ஆசியா மற்றும் பிற பகுதிகளுக்கும் சென்றது.
  • முதலில் பெரு நாட்டில் உருளைக்கிழங்கு உற்பத்தி தொடங்கி இருந்தாலும் இன்று பயிராகும் உருளைக்கிழங்கில் 99% சிலி நாட்டின் தெற்கு நடுப்பகுதிகளில் இருந்து வந்த வகையே ஆகும்.
உருளைக் கிழங்கு எப்படி பயிரிடுவது…?
  • குப்ரி ஜோதி, குப்ரி முத்து, குப்ரி சொர்ணா, குப்ரி தங்கம், குப்ரி மலர், குப்ரி சோகா மற்றும் குப்ரி கிரிராஜ் ஆகிய இரகங்கள் சாகுபடிக்கு ஏற்றவை.
  • மலைப்பகுதிகளுக்கு மார்ச் – ஏப்ரல், ஆகஸ்ட் – செப்டம்பர், ஜனவரி – பிப்ரவரி மாதங்கள் சாகுபடிக்கு ஏற்றவை.
  • சமவெளிப்பகுதிகளுக்கு அக்டோபர்-நவம்பர் மாதங்கள் ஏற்ற பருவம் ஆகும்.
  • மண் கெட்டியாக இல்லாமல், நன்கு நீர் வடியக் கூடிய செம்மண் நிலங்கள் ஏற்றவை. மண்ணின் கார அமிலத் தன்மை 4.8 முதல் 5.4 ஆக இருக்க வேண்டும். இது ஒரு குளிர்காலப் பயிராகும். பொதுவாக உருளைக்கிழங்கு மானாவாரி பயிராக சாகுபடி செய்யப்படுகிறது. வருடத்திற்கு 1200-2000 மி.மீ மழை பொழியும் பகுதியில் சாகுபடி செய்யலாம்.
  • நிலத்தை நன்றாகக் கொத்தி, பண்படுத்தி 45 செ.மீ இடைவெளியில் பார் பிடிக்கவேண்டும். மலைப் பகுதிகளில் 1.4 மீட்டர் அளவில் உள்நோக்கி சாய்ந்தவாறு சாய்வுத்தளம் அமைக்க வேண்டும். வடிகாலுக்கு வாய்க்கால்கள் அமைக்க வேண்டும்.
  • ஒரு எக்டருக்கு 3000-3500 கிலோ விதைக்கிழங்குகள் தேவைப்படும்.
  • உருளைக்கிழங்கு சாகுபடியில் விதைத்தயாரிப்பு முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்றாகும். புதிய கிழங்குகளின் முளைப்புத் திறன் சீராக இருக்காது. ஆகவே முளைப்புத் தன்மையை ஏற்படுத்த கார்பன்-டை-சல்பைடு என்னும் மருந்தை 100 கிலோ கிழங்குக்கு 30 கிராம் என்ற அளவில் பயன்படுத்த வேண்டும். கிழங்குகளை குவியலாக்கி குவியலின் மேல் ஒரு அகன்ற தட்டில் மருந்தை ஊற்றி பாலித்தீன் தாளினால் மூடிவிடவேண்டும். கிழங்குகளில் முளை வந்தவுடன், நடவுக்குப் பயன்படுத்த வேண்டும். நிலத்தின் சாய்தளத்தைப் பொறுத்து செடிக்கு செடி 15-20 செ.மீ இடைவெளியில் முளைவந்த கிழங்குகளை நடவு செய்ய வேண்டும்.
  • நடவுக்குப் பின்னர் வாரம் ஒரு முறை நீர்ப்பாய்ச்ச வேண்டும்.
  • ஒரு எக்டருக்கு அடியுரமாக 15 டன் மக்கிய தொழு உரம், 2 கிலோ அசோஸ்பைரில்லம் அல்லது பாஸ்போபாக்டீரியம், 60 கிலோ தழைச்சத்து, 120 கிலோ மணிச்சத்து, 60 கிலோ சாம்பல் சத்து கொடுக்கக் கூடிய உரங்களை அடியுரமாக இடவேண்டும். இதனுடன் எக்டருக்கு 60 கிலோ மக்னீசியம் சல்பேட்டையும் அடியுரமாக இடவேண்டும்.
  • விதைத்த 30 நாட்கள் கழித்து 60 கிலோ தழைச்சத்து, 120 கிலோ மணிச்சத்து, 60 கிலோ சாம்பல் சத்து கொடுக்கக்கூடிய உரங்களை மேலுரமாக இட்டு மண் அணைக்கவேண்டும்.
  • முதல் களை எடுப்பு 45வது நாளில் செய்ய வேண்டும். இரண்டாவது களை எடுப்பு மற்றும் மண் அணைத்தல் பயிரிட்ட 60 நாட்களில் செய்ய வேண்டும். விதை விதைத்த 60 நாட்களுக்கு களைகள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
  • விதைத்த 120 நாட்களில் அறுவடை செய்யலாம். எக்டருக்கு 15-20 டன் மகசூல் கிடைக்கும்.
உருளைக் கிழங்கு பயன்கள்:
  • உருளைக்கிழங்கில் கலோரிகள், பொட்டாசியம், விட்டமின் சி, தாது உப்புகள், மாவுச்சத்துகள், நார்ச்சத்துக்கள் போன்ற சத்துகள் அதிகம் காணப்படுகின்றன.
  • காலையில் வெறும் வயிற்றில் உருளைக்கிழங்கை பச்சையாக அரைத்து சாறு எடுத்து சாப்பிட்டு வர வயிற்றுப்புண் குணமாகும்.
  • உருளைக்கிழங்கைத் தோலுடன் சமைத்து சாப்பிட்டால் மலச்சிக்கல் பிரச்சனைகள் தீரும்.
  • தீப்புண்களுக்கு உருளைக்கிழங்கை அரைத்து குழைத்து தீக்காயம் பட்ட இடத்தில் பூசினால் உடனே புண் ஆறும், மேலும் அந்த தடமும் விரைவில் மறைந்துவிடும்.
  • கீழ்வாதம், இரைப்பைக் கோளாறுகள் உள்ளவர்கள் இந்த உருளைக் கிழங்கை தோலுடன் பச்சையாக அரைத்து சாறு எடுத்து சாப்பிட்டால் முற்றிலும் குணமாகும்.
  • முகம் புத்துணர்ச்சியாக இருக்க பச்சை உருளைக்கிழங்கை நசுக்கி முகத்திலும் மற்ற பகுதிகளிலும் தேய்த்துக்கொண்டு உறங்கினால் அதிகாலை எழும் போது முகம் புத்துணர்வுடன் காணப்படும்.

Filed Under: காய்கறிகள்

About Navinkumar V

ஹலோ நண்பர்களே,
AgricultureTrip வலைத்தளத்திற்கு உங்களை வரவேற்கிறேன். நான் கணினி பொறியாளராகவும் பகுதி நேர வலைதள நிர்வாகமும் செய்துகொண்டிருக்கிறேன். நான் இங்கு எனக்கு தெரிந்த விவசாய செய்திகளும், இயற்கை விவசாய சாகுபடி முறைகளையும் விவசாய குறிப்புகளையும் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். மேலும் தொடர்புக்கு என்னுடைய சமூகவலைத்தளங்களான முகநூல் மற்றும் ட்விட்டர் வலைதங்களை பார்க்கவும். உடனடி தொடர்புக்கு கிளிக் செய்யவும்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

உங்களின் சந்தேகங்களை இங்கு தேடுங்கள்

உங்களின் சந்தேகங்களை இங்கு தேடுங்கள்

Search Articles

Recent Articles
Tamil Keyboard
Start typing to find articles.

Categories

  • அரசு மானியம் / திட்டங்கள் (5)
  • அழகு குறிப்புகள் (6)
  • ஆண்கள் (3)
  • இதர சாகுபடி (8)
  • உரங்கள் (10)
  • எண்ணெய் வித்துக்கள் (4)
  • காய்கறிகள் (29)
  • கால்நடைகள் (9)
  • கிழங்கு வகைகள் (6)
  • கீரைகள் (18)
  • குழந்தைகள் (3)
  • சாதனையாளர்கள் – விவசாயிகள் (1)
  • தானியங்கள் (10)
  • நெல் (4)
  • நோய்களும் அதன் தீர்வும் (3)
  • பயிர் பாதுகாப்பு (1)
  • பழங்கள் (25)
  • பூக்கள் (12)
  • பெண்கள் (4)
  • மண் (2)
  • மரங்கள் (7)
  • மருத்துவ பயன்கள் (48)
  • மலைத்தோட்டப் பயிர்கள் (4)
  • மாடித் தோட்டம் (70)
  • மூலிகைப் பயிர்கள் (16)
  • விவசாய புகைப்படங்கள் (4)

Recent Posts

  • தாவர வளர்ச்சிக்கு NPK ஏன் அவசியம்? நைட்ரஜன்–பாஸ்பரஸ்–பொட்டாசியம் முழுமையான விளக்கம்
  • விவசாயத்தின் முக்கிய & இணைத் துறைகள் – முழுமையான வழிகாட்டி 2025
  • 🥭 அயல்நாட்டு பழங்கள் அவசியமா? அல்லது நம் நாட்டு பழங்களே போதுமா?
  • நித்தியகல்யாணி (Catharanthus roseus) – நீரிழிவு, புற்றுநோய், இதய நலம் மற்றும் ஆரோக்கிய நன்மைகள்
  • சுண்டைக்காய் (Turkey Berry / Solanum torvum) – ரத்தசோகை, நீரிழிவு, இதய நலம் மற்றும் மருத்துவ நன்மைகள்
  • அருகம்புல் (Cynodon dactylon) – உடல் சுத்தம், குளிர்ச்சி மற்றும் ஆரோக்கிய நன்மைகள்
  • முடக்கத்தான் கீரை (Cardiospermum halicacabum) – மூட்டு வாதம், வலி நிவாரணம் மற்றும் ஆரோக்கிய நன்மைகள்
  • மருதாணி (Lawsonia inermis) – அழகு, ஆரோக்கியம் மற்றும் இயற்கை மருத்துவ நன்மைகள்
  • தூதுவளை (Thuthuvalai) – சளி, இருமல், ஆஸ்துமா, புற்றுநோய் வரை குணமாக்கும் இயற்கை மூலிகை
  • துளசி (Tulsi) – வகைகள், சாகுபடி, மற்றும் நன்மைகள்

Tags

NPK (1) Paddy Variety (1) pappali (1) Tulsi (1) அருகம்புல் (1) ஆடிப்பட்டம் (1) ஆடிப்பட்டம் தேடி விதை (1) இஞ்சி (1) இயற்கை விவசாயம் (9) உயிர் உரங்கள் (1) உரங்கள் (1) உளுந்து (1) கிஸ்மிஸ்பழம் (1) கேரட் (1) கொத்தமல்லி (1) சவுக்கு மரம் (1) சித்தரத்தை (1) சுண்டைக்காய் (1) செம்பருத்தி (1) சோற்று கற்றாழை (1) தர்பூசணி (1) திருநீற்றுப் பச்சிலை (1) துளசி (2) துவரை (1) தூதுவளை (1) தேக்கு மரம் (1) நாவல்பழம் (1) நித்தியகல்யாணி (1) நெல் (3) நெல் ஜெயராமன் (1) பச்சைப்பயறு (1) பருத்தி (1) பாகற்காய் (1) பீட்ரூட் (1) புதினா (1) மஞ்சள் (1) மண்புழு உரம் (1) மருதாணி (1) மருத்துவ பயன்கள் (2) மாடித் தோட்டம் (6) மாதுளைப்பழம் (1) முடக்கத்தான் (1) முள்ளங்கி (1) வல்லாரை (1) விவசாயத்தின் இணைத் துறைகள் (1)

About Agriculturetrip

AgricultureTrip வலைத்தளத்திற்கு உங்களை வரவேற்கிறேன். நான் நவீன்குமார் கணினி பொறியாளராக பணியாற்றி கொண்டிருக்கிறேன். பகுதி நேர வலைதள நிர்வாகமும் செய்துகொண்டிருக்கிறேன். இந்த வலைத்தளத்தில் விவசாய உற்பத்தி முறைகள் மற்றும் விவசாய பயன்பாடு முறைகள் பற்றி தகவல்களை திரட்டி இங்கு பதிவிட்டுள்ளேன். மேலும் படிக்க…

Contact

Mahindra service station opp
Behind CSI Church
Chikkathogur
Bangalore – 560100

blogbynavin@gmail.com

Subscribe Our Newsletter

Join Our Newsletter
  Thank you for Signing Up
Please correct the marked field(s) below.
1,true,6,Contact Email,2 1,false,1,First Name,2 1,false,1,Last Name,2

Copyright © 2026 by Agriculture Trip. Developed by Navinblog