• About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Disclaimer

Agriculture Trip

Best Agriculture Blog in Tamil

  • Home
  • வேளாண்மை
      • காய்கறிகள்
      • கீரைகள்
      • பழங்கள்
      • தானியங்கள்
      • மரங்கள்
      • பூக்கள்
      • கிழங்கு வகைகள்
      • எண்ணெய் வித்துக்கள்
      • மலைத்தோட்டப் பயிர்கள்
      • மூலிகைப் பயிர்கள்
      • இதர சாகுபடி
  • மாடித் தோட்டம்
  • பயிர் பாதுகாப்பு
    • உரங்கள்
    • அரசு மானியம் / திட்டங்கள்
    • மண்
  • கால்நடைகள்
  • இயற்கை மருத்துவம்
    • மருத்துவ பயன்கள்
    • அழகு குறிப்புகள்
    • ஆண்கள்
    • பெண்கள்
    • குழந்தைகள்
  • மற்றவை
    • நெல்
    • விவசாய புகைப்படங்கள்
    • சாதனையாளர்கள் - விவசாயிகள்
சக்கரைவள்ளி கிழங்கு சாகுபடி முறை & பயன்கள் Agriculture Trip

சக்கரைவள்ளி கிழங்கு சாகுபடி முறை மற்றும் பயன்கள்

June 21, 2018 By Navinkumar V 2 Comments


0 Shares
Share
Tweet
Share

சக்கரைவள்ளி கிழங்கு நிலத்தில் படரும் கொடிவகை தாவரங்களில் ஒன்று.

சக்கரைவள்ளி செடியின் வேர் பகுதியே சக்கரவள்ளிக்கிழங்காகும். வேர்ப் பகுதிகளில் விளையும் இந்த கிழங்குகள் பெரிதாகவும், அடர்த்தியாகவும், பல சத்துக்கள் நிறைந்தும் காணப்படுகிறது.

இது வெப்பமண்டலத்தில் விளையும் தாவர வகையாகும்.

உலகெங்கும் விளையும் பயிர்களில் அதிகளவில் விளைந்து ஏழாவது முக்கிய உணவுப் பொருளாகத் திகழ்கிறது.

எப்படி பயிரிடுவது…?

இரகங்கள்

கோ 1, கோ 2, கோ 3 மற்றும் கோ – சிஐபி 1, ஐ ஜி எஸ் பி – 14, வி 6, வி 8, வி 12, எச் 1 மற்றும் தமிழ் நாட்டு இரகங்கள் – எஸ்பி உள்ளூர், முசிறி தண்டல், எஸ்பி 4, எஸ்பி 13, எஸ்பி 18 ஆகிய இரகங்கள் உள்ளன.

பருவம்

நீர்ப்பாசன வசதியுள்ள இடங்களில் ஜூன் – ஜூலை மாதங்களிலும், மற்ற இடங்களில் செப்டம்பர் – அக்டோபர் மாதங்களிலும் சாகுபடி செய்யலாம்.

மண்

நல்ல வடிகால் வசதியுள்ள மணல் கலந்துள்ள செம்மண், கரிசல் மண் நிலங்களில் நன்கு வளரும் தன்மை கொண்டது. களிமண் பூமி ஏற்றதல்ல. மண்ணின் கார அமிலத்தன்மை 5.6 முதல் 6.7 வரை இருக்க வேண்டும்.

நிலம் தயாரித்தல்

நிலத்தை இரண்டு அல்லது மூன்று முறை நன்றாக உழுது பண்படுத்திய பிறகு எக்டருக்கு 25 டன் என்ற அளவில் தொழு உரம் இட்டு 60 செ.மீ இடைவெளியில் பார்கள் அமைக்கவேண்டும்.

விதையளவு

ஒரு எக்டர் நடவு செய்ய 80,000 தண்டுகள் தேவைப்படும்.

விதைத்தல்

மேலை நாடுகளில் இதை கிழங்குகளிலிருந்து விதைப்பயிராகப் பயிரிடுகிறார்கள். இந்தியாவில் நுனிக்கொடிகள் மூலம் பயிரிடப்படுகிறது. நடவு செய்ய நுனிக் கொடிகளைத் தேர்ந்தெடுத்து அதை 20 செ.மீ நீளத்திற்குத் துண்டுகளாக்கி நடவு செய்ய வேண்டும். கொடியின் மத்தியிலுள்ள பாகத்தையும் உபயோகிக்கலாம். நடுவதற்கு முன்னர் தண்ணீர் கட்டி நுனிக்கொடித் துண்டுகளை 20 செ.மீ நீளத்திற்குத் தயார் செய்து பாரின் பக்கவாட்டில் 15 முதல் 30 செ.மீ இடைவெளியில் வரிசையாக நடவேண்டும். மத்தியில் உள்ள கொடித் துண்டுகளை உபயோகித்தால் நுனி, அடி இரண்டும் வெளியே இருக்கும்படி மத்தியில் மட்டும் மண்ணில் புதைத்து நடவேண்டும்.

நீர் நிர்வாகம்

நட்ட பின் மூன்றாம் நாள் உயிர்த் தண்ணீர் விட வேண்டும். பின்பு மண்ணின் ஈரப்பதத்திற்கு ஏற்ப நீர் பாய்ச்ச வேண்டும்.

உரங்கள்

நடுவதற்கு முன், எக்டருக்கு 20 கிலோ தழைச்சத்து, 40 கிலோ மணிச்சத்து, 60 கிலோ சாம்பல் சத்தை அடியுரமாக இட வேண்டும். முப்பது நாட்கள் கழித்து மறுபடியும் அதே அளவு தழை, மணி, சாம்பல் சத்துக்களை இட்டு மண் அணைக்கவேண்டும். எக்டருக்கு 20 கிலோ அசோஸ்பைரில்லம் நுண்ணுயிர் உரத்தை அளித்தால் பரிந்துரைக்கப்படும் தழைச்சத்தில் மூன்றில் இரண்டு பங்கைக் குறைத்து இட வேண்டும்.

வளர்ச்சி ஊக்கிகள்

கிழங்குகள் நல்ல முறையில் உருவாக நட்ட 15 நாட்கள் கழித்து எத்ரல் என்ற பயிர் ஊக்கியை 15 நாட்கள் இடைவெளியில் ஐந்து முறை தெளிக்கவேண்டும்.

பாதுகாப்பு முறைகள்,

களை நிர்வாகம்

களைகளை மாதத்திற்கு ஒரு முறையாக இரண்டு மூன்று தடவைகள் எடுக்கவேண்டும். செடிகள் நட்ட 60 நாட்கள் கழித்து கொடிகளை அடிக்கடி தூக்கிப் புரட்டிப் போட்டு நல்ல வேர்க்கிழங்குகள் உண்டாகும்படி செய்யவேண்டும்.

பயிர் பாதுகாப்பு
கூன்வண்டு தாக்குதல்

கூன்வண்டு தாக்குதலை கட்டுப்படுத்த ஒரு எக்டருக்கு பென்தியான் 625 மில்லி, கிழங்குகள் எடுக்க ஆரம்பிக்கும் போது 21 நாட்களுக்கு ஒரு முறை தெளிக்கவேண்டும்.

அழுகல் நோய்

அழுகல் நோயை கட்டுப்படுத்த ஒரு கிராம் கார்பன்டாசிம் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கரைத்து ஊற்றவேண்டும்.

அறுவடை

பொதுவாக 100லிருந்து 130 நாட்களில் கிழங்குகளை அறுவடை செய்யலாம். அறுவடைக்குத் தயாராக உள்ள கொடிகளின் அடிப்பாகம் பழுப்பு நிறமாக மாறும். கொடிகளின் அடிப்பாகத்தில் நிலத்தில் விரிசல் ஏற்படும். சில கொடிகளை அகற்றி விட்டுக் கிழங்குகள் நன்கு முற்றிவிட்டனவா என்று பார்த்துப் பின்னர் அறுவடை செய்யவேண்டும். கிழங்கை வெட்டிப்பார்த்தால் பால் போன்ற திரவம் வரும். அது விரைவில் முதிர்ச்சி அடைவதற்கான அறிகுறியாகும். அறுவடைக்கு மூன்று நாட்களுக்கு முன் தண்ணீர் பாய்ச்சினால் கிழங்குகளை சேதப்படாமல் அறுவடை செய்ய முடியும்.

மகசூல்

ஒரு எக்டருக்கு 25-30 டன் கிழங்குகள் வரை கிடைக்கும்.

பயன்கள்
  • சர்க்கரை வள்ளிக் கிழங்கில் மிகமிகக் குறைந்த அளவே கொழுப்பும், நிறைய அளவு நார்ச்சத்தும் உள்ளது.
  • ஆன்டி-ஆக்சிடென்டுகளும், வைட்டமின்கள் மற்றும் தாது உப்புக்களும் அதிகம் உள்ளது. மாவுச்சத்தில் கார்போஹைட்ரேட் மூலக்கூறுகளாக உள்ளது. இது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை மெதுவாகவே உயர்த்தும்.
  • மற்ற கிழங்கு வகைகளைவிட இதில் அதிக அளவில் பீட்டா கரோட்டின் மூலக்கூறுகள் உள்ளது. இவை இயற்கை நோய் எதிர் பொருட்களாகும்.
  • இதில் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் அதிகம் இருப்பதால், இன்சுலின் சுரப்பை சீராக வைக்கும்.
  • நுரையீரல் மற்றும் தொண்டை புற்றுநோய்க்கு எதிர்ப்புத் தன்மை கொண்டது. இரும்பு, கால்சியம், மக்னீசியம், மாங்கனீசு, பொட்டாசியம் போன்ற உடலுக்கு அவசியமான தாது உப்புக்களும் ஏராளமாக உள்ளன.

Filed Under: கிழங்கு வகைகள்

About Navinkumar V

ஹலோ நண்பர்களே,
AgricultureTrip வலைத்தளத்திற்கு உங்களை வரவேற்கிறேன். நான் கணினி பொறியாளராகவும் பகுதி நேர வலைதள நிர்வாகமும் செய்துகொண்டிருக்கிறேன். நான் இங்கு எனக்கு தெரிந்த விவசாய செய்திகளும், இயற்கை விவசாய சாகுபடி முறைகளையும் விவசாய குறிப்புகளையும் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். மேலும் தொடர்புக்கு என்னுடைய சமூகவலைத்தளங்களான முகநூல் மற்றும் ட்விட்டர் வலைதங்களை பார்க்கவும். உடனடி தொடர்புக்கு கிளிக் செய்யவும்

Comments

  1. Praveen says

    April 6, 2021 at 3:40 pm

    மிக அருமையான பதிவு. மிக்க நன்றி. ஓர் சிறு சந்தேகம், சர்க்கரை வள்ளி கீரையை சமையலுக்கு பயன் படுத்தலாமா? கீரையில் உள்ள பயன்கள் என்ன? தெளிவு படுத்தவும். நன்றி.
    Praveen

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

உங்களின் சந்தேகங்களை இங்கு தேடுங்கள்

உங்களின் சந்தேகங்களை இங்கு தேடுங்கள்

Search Articles

Recent Articles
Tamil Keyboard
Start typing to find articles.

Categories

  • அரசு மானியம் / திட்டங்கள் (5)
  • அழகு குறிப்புகள் (6)
  • ஆண்கள் (3)
  • இதர சாகுபடி (8)
  • உரங்கள் (10)
  • எண்ணெய் வித்துக்கள் (4)
  • காய்கறிகள் (29)
  • கால்நடைகள் (9)
  • கிழங்கு வகைகள் (6)
  • கீரைகள் (18)
  • குழந்தைகள் (3)
  • சாதனையாளர்கள் – விவசாயிகள் (1)
  • தானியங்கள் (10)
  • நெல் (4)
  • நோய்களும் அதன் தீர்வும் (3)
  • பயிர் பாதுகாப்பு (1)
  • பழங்கள் (25)
  • பூக்கள் (12)
  • பெண்கள் (4)
  • மண் (2)
  • மரங்கள் (7)
  • மருத்துவ பயன்கள் (48)
  • மலைத்தோட்டப் பயிர்கள் (4)
  • மாடித் தோட்டம் (70)
  • மூலிகைப் பயிர்கள் (16)
  • விவசாய புகைப்படங்கள் (4)

Recent Posts

  • தாவர வளர்ச்சிக்கு NPK ஏன் அவசியம்? நைட்ரஜன்–பாஸ்பரஸ்–பொட்டாசியம் முழுமையான விளக்கம்
  • விவசாயத்தின் முக்கிய & இணைத் துறைகள் – முழுமையான வழிகாட்டி 2025
  • 🥭 அயல்நாட்டு பழங்கள் அவசியமா? அல்லது நம் நாட்டு பழங்களே போதுமா?
  • நித்தியகல்யாணி (Catharanthus roseus) – நீரிழிவு, புற்றுநோய், இதய நலம் மற்றும் ஆரோக்கிய நன்மைகள்
  • சுண்டைக்காய் (Turkey Berry / Solanum torvum) – ரத்தசோகை, நீரிழிவு, இதய நலம் மற்றும் மருத்துவ நன்மைகள்
  • அருகம்புல் (Cynodon dactylon) – உடல் சுத்தம், குளிர்ச்சி மற்றும் ஆரோக்கிய நன்மைகள்
  • முடக்கத்தான் கீரை (Cardiospermum halicacabum) – மூட்டு வாதம், வலி நிவாரணம் மற்றும் ஆரோக்கிய நன்மைகள்
  • மருதாணி (Lawsonia inermis) – அழகு, ஆரோக்கியம் மற்றும் இயற்கை மருத்துவ நன்மைகள்
  • தூதுவளை (Thuthuvalai) – சளி, இருமல், ஆஸ்துமா, புற்றுநோய் வரை குணமாக்கும் இயற்கை மூலிகை
  • துளசி (Tulsi) – வகைகள், சாகுபடி, மற்றும் நன்மைகள்

Tags

NPK (1) Paddy Variety (1) pappali (1) Tulsi (1) அருகம்புல் (1) ஆடிப்பட்டம் (1) ஆடிப்பட்டம் தேடி விதை (1) இஞ்சி (1) இயற்கை விவசாயம் (9) உயிர் உரங்கள் (1) உரங்கள் (1) உளுந்து (1) கிஸ்மிஸ்பழம் (1) கேரட் (1) கொத்தமல்லி (1) சவுக்கு மரம் (1) சித்தரத்தை (1) சுண்டைக்காய் (1) செம்பருத்தி (1) சோற்று கற்றாழை (1) தர்பூசணி (1) திருநீற்றுப் பச்சிலை (1) துளசி (2) துவரை (1) தூதுவளை (1) தேக்கு மரம் (1) நாவல்பழம் (1) நித்தியகல்யாணி (1) நெல் (3) நெல் ஜெயராமன் (1) பச்சைப்பயறு (1) பருத்தி (1) பாகற்காய் (1) பீட்ரூட் (1) புதினா (1) மஞ்சள் (1) மண்புழு உரம் (1) மருதாணி (1) மருத்துவ பயன்கள் (2) மாடித் தோட்டம் (6) மாதுளைப்பழம் (1) முடக்கத்தான் (1) முள்ளங்கி (1) வல்லாரை (1) விவசாயத்தின் இணைத் துறைகள் (1)

About Agriculturetrip

AgricultureTrip வலைத்தளத்திற்கு உங்களை வரவேற்கிறேன். நான் நவீன்குமார் கணினி பொறியாளராக பணியாற்றி கொண்டிருக்கிறேன். பகுதி நேர வலைதள நிர்வாகமும் செய்துகொண்டிருக்கிறேன். இந்த வலைத்தளத்தில் விவசாய உற்பத்தி முறைகள் மற்றும் விவசாய பயன்பாடு முறைகள் பற்றி தகவல்களை திரட்டி இங்கு பதிவிட்டுள்ளேன். மேலும் படிக்க…

Contact

Mahindra service station opp
Behind CSI Church
Chikkathogur
Bangalore – 560100

blogbynavin@gmail.com

Subscribe Our Newsletter

Join Our Newsletter
  Thank you for Signing Up
Please correct the marked field(s) below.
1,true,6,Contact Email,2 1,false,1,First Name,2 1,false,1,Last Name,2

Copyright © 2026 by Agriculture Trip. Developed by Navinblog