தோடம்பழம் அல்லது ஆரஞ்சுப்பழம் என்பது சிட்ரஸ் மற்றும் சிநேசிஸ்பேரினத்தைச் சேர்ந்த ஒருவகை பழம் ஆகும். செம்மஞ்சள் நிறக் கோள வடிவ, சாறுள்ள இதன் மரங்கள் 10 மீ உயரம் வரை வளரக்கூடியன.
ராஜஸ்தான், மகராஷ்டிரா, கர்நாடக, ஆந்திரா, உள்ளிட்ட மாநிலங்களில் ஆரஞ்சு பழம் அதிகளவில் விளைகிறது. தமிழகத்தில் நீலகரி, திண்டுக்கல் , மாவட்டத்தில் ஆரஞ்சு விளைவிக்கப்படுகிறது.
பயிரிடும் முறை
- அதிக சீதோஷ்ணத்துடன் கூடிய சமவெளிப் பகுதிகளிலும், நீர்பாசன வசதிகளுடன் கூடிய செம்மண் கலந்த பகுதிகளிலும் நன்கு வளரும். மண்ணின் கார அமிலத் தன்மை 6.5 முதல் 7.5 வரை இருக்க வேண்டும்.
- ஜூலை முதல் ஆகஸ்ட் மாதம் வரை நடவு செய்யலாம்.
- நிலத்தை நன்கு உழுத பின்பு 7 மிட்டர் இடைவெளியல் 75 செ.மீ நிளம், அகலம், ஆழம் என்ற அளவில் குழிகள் எடுக்க வேண்டும். குழிகளில் தொழு உரம் 2 கிலோவுடன் மேல்மண் கலந்து ஒரு வாரம் ஆறவிட வேண்டும்.
- குருத்து ஒட்டு செய்த செடிகள் தான் நடவுக்கு பயன்படுகிறது.
- நடவுக்கு தேர்வு செய்த ஓட்டுச் செடிகளை தயார் செய்துள்ள குழிகளில் மத்தியில் நடவு செய்ய வேண்டும். அதன் அருகே இரண்டு காய்ந்த குச்சிகளை நட்டு, செடியைவும் குச்சியையும் பிணைத்து கட்ட வேண்டும்.
- நட்டவுடன் நீர்ப் பாய்ச்ச வேண்டும். பின்பு 10 நாட்களுக்கு ஒரு முறை நீர் கட்ட வேண்டும். செடியின் அருகில் தண்ணிர் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும்.
- ஆண்டு ஒன்றிற்கு 10 கிலோ தொழுஉரம் இட வேண்டும். ஆறாம் ஆண்டு முதல் 30 கிலோ இட வேண்டும். தழைச்சத்து கொடுக்க கூடிய உரங்களை இரண்டாகப் பிரித்து மார்ச் மாதத்திலும், அக்டோபர் மாதத்திலும் இட வேண்டும். தொழு உரம் மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்து கொடுக்கக்கூடிய உரங்களை அக்டோபர் மாதத்தில் இடவேண்டும்.
- செடிகள் வளரும் வரை களை இல்லாமல் பராமரிக்க வேண்டும். காய்ந்த தண்டுகள், பக்க கிளைகளை அவ்வப்போது நீக்கி பராமரிக்க வேண்டும்.
- 5 முதல் 6 ஆண்டுகளில் அறுவடைக்கு வந்து விடும். திரண்ட பழங்களை இரு நாட்களுக்கு ஒரு முறை அறுவடை செய்ய வேண்டும்.
- ஒரு எக்டருக்கு 30 டன் பழங்கள் வரை மகசூல் கிடைக்கும்.

பயன்கள் :
- தூக்கம் இல்லாமல் அவதிபடுபவர்கள் இரவு படுக்கைக்கு செல்லும் முன் ஆரஞ்சு பழச்சாற்றில் தேன் கலந்து சாப்பிட்டால் நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.
- ஆரஞ்சு பழச்சாற்றை ஒரு மண்டல தேன் கலந்து அருந்தி வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சத்தி அதிகரித்து உடல் பலமடையும். நரம்புகள் பலம் பெரும்.
- ஆரஞ்சு பழத்தின் தோலை உலர்த்தி, ஓமம், சுக்கு சேர்த்து இடித்து பல் பொடியாக்கி தினமும் அதில் பல் தேய்த்து வந்தால் பற்கள் பளிச்சிடும்.
- தினமும் ஆரஞ்சு பழம் சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள தேவையற்ற அசுத்த நீர் வியர்வையிலும் சிறுநீரிலும் வெளியேறும். இதனால் சருமம் பளபளப்புடன் நோயின் தாக்குதலின்றியும் இருக்கும்.
தயவு செய்து உங்களுடைய கருத்துக்களை கீழே உள்ள கமெண்ட் ஏரியாவில் பதிவிடவும். தவறுகளை சுட்டிக்காட்டி, உங்கள் கருத்துக்களை பரிமாறி இவ்வலைத்தளத்தை திறன்பட நடத்த உதவவும்.
Tips are so informative navin.
Orange plant kidaikum idam sollunga pls
ஐயா நான் ஆரஞ்சு செடி வளத்திட்டு இருக்கேன் பயிரிட்டூ 4 வருசம் ஆச்சு ஆனா இன்னும் பூ எடுக்கல எதனாலனு சொல்ல முடியுமா உங்களால