இலந்தை என்பது மூவடுக்கிதழிகளைச் சேர்ந்த ஒரு தாவரம். இலந்தையின் தாயகம் சீனா ஆகும்.
இது சுமார் 30 அடி உயரம் வரை வளரக் கூடிய, வெப்பமண்டல மரமாகும். அமெரிக்க, நியூயார்க்கில் அதிகமாக இலந்தை காணப்படுகிறது.
தமிழகத்தின் வறட்சியான பகுதிகளில் இலந்தைமரம் அதிகம் வளர்கிறது.
பயிரிடும் முறை:
- பனரசி, உம்ரான், கோலா, கைத்தளி, முண்டியா, மற்றும் கோமா கீர்த்தி ஆகிய இரகங்கள் சாகுபடிக்கு ஏற்றவை.
- அனைத்து மாதத்திலும் பயிர் செய்யலாம். ஆனால் மார்கழி மாதம் சிறந்த பருவம் ஆகும்.
- இலந்தையை உவர் நிலங்களில் வறட்சிப் பகுதிகளில் பயிரிடலாம். இருமண்பாட்டு செம்மண் நிலங்களில் மிகவும் உகந்தவை.
- நிலத்தை நன்கு உழுது 8 மிட்டர் இடைவெளியில் 1 மிட்டர் ஆழ, அகல மற்றும் நீளத்தில் குழிகள் எடுக்க வேண்டும். பின்பு 2 கிலோ நன்கு மக்கிய தொழு உரம் மற்றும் மேல் மண் கொண்டு குழிகளை நிரப்பி நீர் பாய்ச்சி குழிகளை ஆறவிட வேண்டும்.
- மொட்டு கட்டப்பட்ட செடிகள் நடவிற்கு பயன்படுகிறது.
- இலந்தையில் ஆணிவேர் விரைவாகத் தோன்றுவதால் வேர்ச்செடி விதைகளை குழிக்கு இரண்டு அல்லது மூன்று வீதம், 3 செ.மீ ஆழத்தில் நேரடியாக ஊன்றவேண்டும். விதைத்த 90 நாட்களில் நாற்றுகள் மொட்டுக் கட்டுவதற்கு தயாராகிவிடும். விருப்பமான இரகங்களில் ஒரு ஆண்டு முதிர்ச்சியுள்ள குச்சியிலிருந்து திரட்சியான மொக்குகளைத் தேர்வு செய்து வேர்ச்செடிகளில் மூடி மொட்டுக்கட்டும் முறை முலம் மொட்டுக்கட்ட வேண்டும். இவ்வாறு மொட்டுக் கட்டப்பட்ட செடிகளில் ஒரு வாரம் காலத்தில் முளைகள் தோன்ற ஆரம்பிக்கும். இவ்வாறில்லாமல் நாற்றங்காலிலேயே மொட்டுக்கட்டி, அந்தச் செடிகளை குழிகளில் நடவு செய்யலாம்.
- இளஞ்செடிகளும் வாரம் ஒரு முறை நீர் பாய்ச்சவேண்டும். மானாவாரியாகப் பயிரிடப்பட்டு இலந்தை மரங்களுக்குத் தேவையான நிரைத் தேக்குவதற்கு சாய்வுப் பாத்திகளை பெரிதாக அமைக்கவேண்டும். எனினும், காய்ப்பிடிப்பு நேரத்தில் நீர் பாய்ச்சினால் அதிகமான காய்ப்பிடிப்பு ஏற்படும். காய்க்கத் தொடங்கி இலந்தை மரங்களுக்கு குறைவான நீர் போதுமானது.
- ஒரு வருட வளர்ச்சியுள்ள மரத்திற்கு ஒரு வருடத்திற்கு 20 கிலோ தொழு உரம், 1 கிலோ அளவுக்கு தழை, சாம்பல், மனிசத்துள்ள உரம் இட வேண்டும். இரண்டு வருடத்திற்கு பின் 30 கிலோ அளவுள்ள உரங்களை இட வேண்டும்.
- பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் கவாத்து செய்ய வேண்டும். பழங்கள் நன்கு காய்க்க நோய்வாய்ப்பட்ட, நலிந்துபோன, குறுக்காக வளரும் கிளைகளை வெட்டிவிட வேண்டும். நான்கு திசைகளிலும், பக்க கிளைகள் தரையிலிருந்து ஒரு மீட்டர் உயரத்திற்கு மேல் தோன்றுமாறு கவாத்து செய்ய வேண்டும். கவாத்து என்பது தேவையற்ற கிளைகளை நீக்கும் முறை ஆகும். செடி நேராக வளர்வதற்கு குச்சிகளை நட்டு அதனுடன் செடியை இணைத்து கட்ட வேண்டும். ஒரு ஆண்டு வளர்ந்த மரங்களின் நுனியை வெட்ட வேண்டும். பின்பு ஆறு முதல் எட்டு முதன்மை கிளைகள் 30 செ.மீ இடைவெளியில் தோன்ற அனுமதிக்க வேண்டும்.
- பழங்கள் பழுத்தவுடன் அறுவடை செய்ய வேண்டும். காய்கள் பச்சை நிறத்தில் இருந்து மஞ்சள் கலந்த சிவப்பு நிறத்தில் இருக்கும்பொழுது அறுவடை செய்ய வேண்டும். ஒரு மரத்தில் இருந்து ஆண்டு ஒன்றிற்கு 70 – 80 கிலோ பழங்கள் வரை கிடைக்கும்.
பயன்கள்:
- வைட்டமின் சத்துகள் அதிகம் கொண்ட இலந்தை பழம், உடல் சூட்டை தனித்து குளிர்ச்சி தரக்கூடியது. இந்த பழத்தில் வைட்டமின் ஏ, பி, சி, டி இரும்புசத்து , புரதம் மற்றும் தாது உப்புகள் அதிகமாக உள்ளது.
- உடலில் சுண்ணாம்புச் சத்து (கால்சியம்) குறைவதால் எலும்புகள் பலமிழந்து காணப்படும். அதனால் இலந்தைப் பழம் கிடைக்கும் காலங்களில் வாங்கி சாப்பிட்டு வந்தால் எலும்புகள், பற்கள் வலுப்பெறும்.
- உடல்வலியைப் போக்க உடலைத் தெம்பாக்க இலந்தைப் பழம் நல்ல மருந்தாகும்.
- இதன் இலைகளை மை போல் அரைத்து வெட்டுக்காயம் மீது கட்டினால் விரைவில் நலம் பெற முடிவும். உடலில் மேற்பகுதில் ஏற்படும் கோடைக்காலக் கட்டிகள் மீது கட்டி வர விரைவில் கட்டிகள் பழுத்து உடைவும்.
- இலந்தை பழம் அடிகடி சாப்பிட்டு வந்தால் பித்தம் சமநிலையில் இருக்கும்.
தயவு செய்து உங்களுடைய கருத்துக்களை கீழே உள்ள கமெண்ட் ஏரியாவில் பதிவிடவும். தவறுகளை சுட்டிக்காட்டி, உங்கள் கருத்துக்களை பரிமாறி இவ்வலைத்தளத்தை திறன்பட நடத்த உதவவும்.
Sharmadha Banu says
எங்கள் வீட்டில் உள்ள இலந்தை மரம் ஒரு காய் கூட காய்க வில்லை. மிகவும் பெரிய மரம் ஆனால் ஒரு பூ காய் என எதுவும் இல்லை. அதை க்காய்க வைக என்ன செய்யலாம்.
Anvar says
இலந்தை பழம் சீசன் எப்பொழுது?