கம்பானது பச்சை மற்றும் வெண்மை கலந்த ஒரு புன்செய் நில சிறுதானிய பயிராகும். பொதுவாக ஆப்ரிக்கக் கண்டத்தில் இது தோன்றியதாக கருதப்படுகிறது. ஏறத்தாழ 40 – க்கும் மேற்பட்ட நாடுகளில் கம்பு உணவுப் பொருளாக பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக ஆசிய,ஆப்ரிக்க நாடுகளில் கம்பு மனிதர்களுக்கு உணவாகவும், கால்நடைத் தீவனமாகவும், எரிபொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது . இது ௦.5 – 4 மீட்டர் வரை வளரும்.
இந்தியாவில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சிகளில், கம்பு 2000 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது தெரியவருகிறது. கம்பு வறட்சியையும் தாங்கிக்கொண்டு வளரும் சிறுதானிய பயிராகும். எனவேதான் நீர்வளர்ச்சி இல்லாத பெரும்பாலான கிராமப்புறங்களில் கம்பு பிரதான பயிராக வளர்க்கப்படுகிறது. அதிக தட்பவெப்ப சூழலிலும், குறைவான ஊட்டமுள்ள நிலங்களிலும் கூட வளரும் தன்மை உடையது.
உலகம் முழுவதும் 260,000 கி.மீ. பரப்பளவில் பயிரிடப்பட்டு வருகிறது. இது உலகின் மொத்த உற்பத்தியில் சுமார் 50% பங்கைக் கொண்டுள்ளது. கம்பு உற்பத்தியில் இந்தியா உலகளவில் முதலிடத்தில் உள்ளது. ராஜஸ்தான் இந்தியாவில் அதிக உற்பத்தி செய்யும் மாநிலமாக உள்ளது. இந்தியாவில் உருவாக்கப்பட்ட முதல் கலப்பு கம்பு 1965 இல் பயிரிடப்பட்டது.
இந்தியாவிற்கு அடுத்தபடியாக அதிக அளவு கம்பு உற்பத்தி செய்யும் இடமாக ஆப்பிரிக்கா உள்ளது. இந்த இழந்த பயிர் மீண்டும் கொண்டு வருவதில் ஆப்பிரிக்கா உண்மையில் வெற்றி பெற்றுள்ளது. வடக்கு நைஜீரியாவில் பால் மற்றும் அரைக்கப்பட்ட கம்பு பயன்படுத்தி தயாரிக்கப்படும் பானம் அதிக அளவில் பயன்படுத்த படுகிறது.
தமிழகத்தில் நெல்,கோதுமை,சோளத்துக்கு அடுத்தபடியாக பயிடப்படும் உணவு பயிர் கம்பு ஆகும். நம் முன்னோர்கள் அதிகப்படியாக பயிரிட்டு, உண்ட உணவு தானியம் கம்பு ஆகும். மற்ற தானியங்களை காட்டிலும் உடலுக்கு அதிக ஊட்டச்சத்து அளிக்க கூடிய உணவுப்பொருள் இது. தற்காலத்தில் கம்பை உணவு பொருளாக பயன்படுத்தாதற்கு காரணம் கம்பை உணவாக்குவதற்கு நிறைய நேரமும் உழைப்பும் செலவிடவேண்டிவரும் என்பதுதான் காரணம்.
எனவே இன்றைய தலைமுறையின் உடல்வளத்தை பேணிக்காப்பதற்காக கோவையிலுள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் உடனடி கம்புசாதக் கலவை (ரெடிமேட் பேக்) உருவாக்கி அதற்கு காப்புரிமை பெற்றுள்ளது.
கம்பு – ன் மருத்துவ குணங்கள் :
- தென் இந்தியாவில் இன்றளவும் கிராமங்களில் அதிக அளவு பயிரிடப்படுகிறது. நம் முன்னோர்களால் அதிகமாக பயிரிடப்பட்ட உணவு தானியங்களில் கம்பு க்கு பிரதான இடம் உண்டு, வெயில் காலங்களில் கம்பினால் செய்யப்பட்ட கூழ் இன்றளவும் சிறு நகர்ப்புறங்களில் விற்பனை செய்யப்படுகிறது. வெயிலுக்கு இதமாகவும் நன்கு ஜீரண சக்தியையும் அளிக்கிறது.
- சர்க்கரை நோயாளிகளுக்கு கம்பு மிகசிறந்த உணவு பொருளாகும். ரத்தத்தில் சக்கரையின் அளவை கட்டுக்குள் வைப்பதில் கம்பு முக்கிய பங்காற்றுகிறது.
- அதிக அளவு கனிமங்கள்,சுண்ணாம்பு சத்து, புரதம் நிறைந்த உணவு பொருளாகும், அரிசியை விட 8 % இரும்புசத்து நிறைந்து காணப்படுகிறது.
- குடல்புண், வயிற்றுப்புண், வாய்ப்புண் நீக்கும் தன்மை உடையது.
- கம்பு கண் நரம்புகளுக்கு புத்துணர்வு தந்து சீரான கண்பார்வை கிடைக்க உதவுகிறது.
- உடலுக்கு நன்கு வலிமை தரும் சத்துக்கள் இதில் காணப்படுகிறது. இதனால் வலிமை குறைந்த குழந்தைகளுக்கு இந்த கம்பு உணவு கொடுக்கும் பொழுது அவர்கள் நன்கு உடல் வளர்ச்சி அடைய உதவுகிறது.
தயவு செய்து உங்களுடைய கருத்துக்களை கீழே உள்ள கமெண்ட் ஏரியாவில் பதிவிடவும். தவறுகளை சுட்டிக்காட்டி, உங்கள் கருத்துக்களை பரிமாறி இவ்வலைத்தளத்தை திறன்பட நடத்த உதவவும்.
ஏழுமலை says
கம்பு சாப்பிடுவதால் என்ன தீமைகள் உள்ளது