கலப்பு உரம் தயாரிக்கும் முறை பற்றி இங்கு விரிவாக காணலாம்.
தேவையான பொருட்கள்
நாட்டு மாட்டு சாணம் – தேவையான அளவு
ஆட்டுப்புழுக்கை – தேவையான அளவு
எரு – தேவையான அளவு
இலை தலைகள் – தேவையான அளவு
தயாரிக்கும் முறை
மாட்டுச் சாணம், இழை தலைகள், ஆட்டுப்புழுக்கை, எரு ஆகியவற்றை சம விகிதத்தில் கலந்து கொள்ள வேண்டும். இதுவே கலப்பு உரம் ஆகும்.
சரியான முறையில் பாக்டீரியாக்களால் சிதைவு ஏற்படும்போது மிகையான வெப்பம் வெளிவரும். வெப்பநிலை 65o வரையில் உயரும். இவ்வெப்பத்தால் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் மடிந்து நல்ல மக்கிய கம்போஸ்ட்டு கிடைக்கும். அதிக அளவு காற்றும் வெயிலும் இருந்தால் கம்போஸ்ட்டு உலர்ந்து விடும். போதிய காற்றில்லாவிடில் வெப்பநிலை உயராது. தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் பெருகி நைட்ரஜன் சத்தை சேதமடைய செய்யும். ஆகையால் கம்போஸ்ட்டை போதுமான காற்றோட்டமுள்ள குழியில் தயாரிப்பது நல்லது. வெப்பத்தை வெளிச்செல்லாமல் தடுக்க மேலடுக்கைக் குழைத்த மண்ணால் மூடுவது வழக்கம். வெப்ப நிலை உயர்ந்த பிறகு பல நாட்கள் விட்டு வைத்தால் கறுப்பாகிக் குழைந்து மக்கி நல்ல எருவாகிவிடும்.
இவற்றை கலந்தவுடன் வயல்களில் பயன்படுத்தலாம்.
இதில் சமையலறை கழிவுகள், குப்பைகள் என மக்கக்கூடிய அனைத்து கழிவுகளையும் பயன்படுத்தலாம்.
பயன்கள்
கலப்பு உரம் இடுவதால் மண்ணிற்கு தேவையான அனைத்து சத்துகளும் கிடைக்கின்றன.
இதில் அனைத்து இயற்கை இடுபொருட்களும் சம அளவில் இருப்பதால் பயிர்களுக்கு அனைத்து விதமான சத்துக்களும் கிடைக்கின்றன.
இதனால் பயிர்கள் நன்கு வளரும். பூச்சி மற்றும் நோய் தாக்குதல் குறைவு.
ஐய்யா வணக்கம். பருத்தி பயிர்கள் விவசாயம் செய்யதுள்ளேன். பருத்தி விதையித்து ஓரு மாதம் ஆகும்.செடிகள் வளர்ச்சியில்லை 4 இஞ்சி செடிகள் ஊள்ளைது நான் என்ன உரம் வைக்கவேண்டும் என்ன மருந்து தெளிக்கவேண்டும் ஐய்யா. எனக்கு உதவுங்கள் ஐய்யா
கீழுள்ள லின்கில் பஞ்சகவ்யா மற்றும் அமிர்த கரைசல் பற்றி சொல்லி உள்ளேன். அதனை தயார்செய்து நீரில் கலந்து பாய்ச்சுங்கள் .செடியின் வளர்ச்சி நன்றாக இருக்கும்
https://agriculturetrip.com/category/%E0%AE%89%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/