மெக்ஸிகோ நாட்டில் உள்ள கல்வில்லோ நகரம் தான் கொய்யாவின் பிறப்பிடமாக கருதப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் கல்வில்லோ நகரில் நடக்கும் கொய்யா கண்காட்சி உலகப்புகழ் பெற்றதாகும்.
இந்தியா, இலங்கை,சீனா ,தாய்லாந்து,மியான்மர் நாடுகளில் அதிகம் வளர்க்கப்படுகிறது.
தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆயக்குடி என்னும் கிராமத்தில்தான் அதிக அளவு கொய்யா பயிரிடப்படுகிறது. பழனி மாவட்டத்தில் பயிரிடப்படும் கொய்யா அதிக அளவு வட ஆசிய கண்டங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
கொய்யாசெடியானது வீடு தோட்டங்களிலும், வயலின் வரப்புகளிலும் வளர்க்கப்படும் மர வகையாகும்.
பயிரிடும் முறை:
- அலகாபாத்,லக்னோ – 46 , லக்னோ – 49 , பனாரஸ், ரெட் பிளஷ் , அர்கா அமுல்யா , அர்கா மிருதுளா, ஆகிய ரகங்கள் உள்ளன.
- ஜூன்,ஜூலை,ஆகஸ்ட் மாதங்கள் கொய்யா நடவு ஏற்ற மாதங்கள் ஆகும்.
- செம்மண்,கரிசல்மன்,களிமண் நிலங்களில் நன்கு வளரும் தன்மை கொண்டது.
- பயிரிட தேர்வு செய்யப்பட்ட நிலத்தை நன்கு உழவு செய்ய வேண்டும். பின்பு இருபது அடி இடைவெளியில் ஒன்றரை அடி நீள,அகல,ஆழம் உள்ள குழிகளை எடுக்க வேண்டும். பின்பு ஒவ்வொரு குழிக்கும் 10 கிலோ தொழுஉரம், ஒரு கிலோ வேப்பம் புண்ணாக்கு இட்டு மேல்மண் கலந்த கலவை கொண்டு குழியை மூட வேண்டும்.
- பாலிதீன் பையில் அல்லது தொட்டியில் உள்ள செடிக்கு எவ்வித சேதமும் ஆகாமல் எடுத்து குழியின் மத்தியில் நடவேண்டும். மிக உயரமான நாற்றுகளாக இருந்தால், அதன் அருகே இரண்டு காய்ந்த குச்சிகளை நட்டு, கொய்யா செடியையும் குச்சியையும் இணைத்து கட்ட வேண்டும்.
- நாற்று நடவு செய்தவுடன் குழி முழுவதும் நனைந்து, மண் இறங்கி இறுக்கம் அடையும் அளவுக்கு தண்ணீர் விட வேண்டும். பின்பு மூன்றாம் நாள் உயிர்த் தண்ணீர் விட வேண்டும். அதன்பின் மண்ணின் தன்மையை பொறுத்து ஏழு முதல் பத்து நாட்களுக்கு ஒருமுறை நீர் பாய்ச்ச வேண்டும்.
உரங்கள் இடும் முறை :
- மார்ச்,அக்டோபர் மாதங்களில் ஒவ்வொரு மரத்திற்கும் தொழுஉரம் மற்றும் ஆட்டு உரம் கலந்து 50 கிலோ, மண்புழு உரம் 2 கிலோ , வேப்பம் புண்ணாக்கு 2 கிலோ சேர்த்து போட்டு நீர் பாய்ச்ச வேண்டும்.
- ரசாயன உரம் போட விரும்புபவர்கள் அரை கிலோ தழை,மணி, சாம்பல் சாது உள்ள ரசாயன உரங்களை கலந்து மரத்தின் வெளி வட்டத்தில் குழி எடுத்து ஒரு கூடை தொழு எருவுடன் கலந்து போட்டு மண் மூடி தண்ணீர் பாய்ச்ச வேண்டும். இதே போல் வருடத்திற்கு இரண்டு முறை செய்ய வேண்டும்.

களை நிர்வாகம்:
- செடியை சுற்றி களைகள் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். களைகளின் வளர்ச்சிக்கு ஏற்றவாறு அதனை நீக்க வேண்டும்.
- செடியின் அடிபாகத்தில் குறுக்கும் நெடுக்குமாக தோன்றும் கிளைகளை நீக்க வேண்டும். மேல்நோக்கி நீண்டு வளரும் கிளைகளின் நுனியை கிள்ளி எடுத்து பக்கவாட்டு கிளை வளர்ச்சியை அதிகப்படுத்த வேண்டும். இல்லையெனில் கிளைகள் இல்லாமல் செங்குத்தாக வளரும்.
- செடிகள் நட்ட 2 ஆம் வருடத்திலிருந்தே காய்க்க ஆரம்பித்து விடும். பூதத்திலிருந்து 5 மாதங்கள் களைத்து கனிகளை அறுவடை செய்யலாம்.
- ஒரு எக்டருக்கு 25 டன் வரை மகசூல் கிடைக்கும்.
- ஊடுபயிராக குறைந்த வயதுடைய அவரை, கத்தரி ஆகியவற்றை கொய்யா காப்பு வரும் வரை வளர்க்கலாம்.
பயன்கள்:
- வைட்டமின் பி மற்றும் வைட்டமின் சி ஆகிய உயிர்சத்துக்கள் கொய்யாப்பழத்தில் அடங்கியுள்ளன. கால்சியம், பாஸ்பரஸ், இரும்புசத்து போன்ற தாது உப்புகளும் இதில் உள்ளது.
- சொறி சிரங்கு,ரத்த சோகை இருப்பவர்கள் கொய்யாப்பழத்தினை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
- ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் சக்தியும் வயிற்றுப்போக்கு, மூட்டுவலி, அரிப்பு, மூலநோய், சிறுநீரக பல நோய்களை கட்டுப்படுத்தும் ஆற்றல் இதற்கு உண்டு.
- கொய்யாவின் தொழில் அதிக சத்துக்கள் உள்ளன. இதனால் தோலை நீக்கி சாப்பிடக்கூடாது. நமது தோலின் வறட்சியை நீக்கி முகத்திற்கு பொலிவையும் அழகையும் தருகிறது. முதுமை தோற்றத்தை குறைத்து இளமையானவராக மாற்றுகிறது.
- விஷக்கிருமிகளை கொள்ளும் சக்தி கொய்யா பலத்திற்கு இருப்பதால் வியாதிகளை உண்டு பண்ணும் விஷ கிருமிகள் ரத்தத்தில் கலந்தால் அவற்றை உடனே கொன்றுவிடும்.
தயவு செய்து உங்களுடைய கருத்துக்களை கீழே உள்ள கமெண்ட் ஏரியாவில் பதிவிடவும். தவறுகளை சுட்டிக்காட்டி, உங்கள் கருத்துக்களை பரிமாறி இவ்வலைத்தளத்தை திறன்பட நடத்த உதவவும்.
மிகவும் பயனுள்ள தகவல்கள் எந்த ரகம் அதிக லாபம் கொடுக்கும். ?
VNR-Bihi என்கின்ற ரகம் தான் அதிக அளவு லாபத்தை கொடுக்கும் ரகம். ஒரு பழத்தின் அளவு 350 முதல் 800 கிராம் வரை இருக்கும். தமிழ்நாட்டில் பழனி,திண்டுக்கல் தான் அதிக அளவு கொய்யா விளைவிக்கப்படும் நகரங்கள்.
I also want to see where is VNR-Bihi can you pls help me to get it
thanks
Ramanathan
9940409993
Very useful information…
Thank you… Keep watch my blog for further updates.
அய்யா திருவாரூர் அருகில் கொய்யா செடிகள் எங்கே கிடைக்கும் என்பதை தெரிவித்தால் நன்றாக இருக்கும்
pls whatsup me 9940409993 i will help you.
it will be available near Panruti
i will be there after March 3 rd 2019.
குட் ரிசல்ட்
நன்றி. தொடர்ந்து படியுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் பரிந்துரை செய்யுங்கள்
Hi sir useful information …..give me ur no I wish to plant guava and coconut trees my no is 9171521653
https://bit.ly/2uAjCB6 நன்றி. தொடர்ந்து படியுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் பரிந்துரை செய்யுங்கள்
நான் வீட்டில் வளா்த்த இரண்டு மாத கொய்யா செடி முழுவதுமாக காய்ந்து கொண்டிருக்கிறது .டிப்ஸ் தரவும்
4 மாத செடிக்கு என்ன உரம் இடவேண்டும் ஐயா
களை இல்லாமல் பராமரித்து ஆட்டு எரு அல்லது மண்புழு உரம் இட்டு நீர் பாய்ச்சுங்கள். முடிந்தால் மாதம் ஒருமுறை பஞ்சகவ்யா தயார்செய்து ஊற்றுங்கள்.
சிகப்பு ரக கொய்யா செடி திருவண்ணாமலை வட்டாரத்தில் எங்கு கிடைக்கும்?
இது நம்முடைய குழு. இங்கு உங்கள் சந்தேகங்களை கேட்கலாம்
https://www.facebook.com/groups/agriculturetripiyarkaivivasayam
Koiya fruit black Tat…what solution
உங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை எங்களின் முகப்புத்தக குழுவில் எங்களிடம் கேட்கலாம். நாங்கள் உங்கள் சந்தேகங்களுக்கு உடனுக்குடன் பதில் அளிக்கிறோம்.
இது நம்முடைய முகப்புத்தக குழு. இங்கு உங்கள் சந்தேகங்களை கேட்கலாம்
https://www.facebook.com/groups/agriculturetripiyarkaivivasayam
நன்று………… பயனுள்ள தகவல்கலளை பதிவிடுகிறீகள் செந்நாய் அருகில் எங்கு கொய்யா கன்றுகள் கிடைக்கும் என்று கூற இயலுமா?
மண்ணிக்கவும்.. சென்னை அருகில் எங்கு கொய்யா கன்றுகள் கிடைக்கும் என்று கூற இயலுமா?
7,வருடம் ஆகின்றது மேலும் நிறைய காய் பிடிக்க என்ன ரசாயண உரம் மற்றும் இயற்கை உரம் வைக்கலாம்
கொய்யாப்பழம் மொத்தமாக வாங்குபவர் எனக்கு தேவை அவர்களை எப்படி தொடர்புகொள்வது
கொய்யா சாகுபடியில் குறைந்த அளவு செடிகள் வைத்துள்ளேன். இலைகள் கிள்ளிவிட்டுள்ளேன். நல்ல உயரம் வளர்ந்துள்ளது இருப்பினும் பூ அதிகம் வைக்கவில்லை என்ன தரலாம்? மாட்டு எரு வைத்துள்ளேன். வேறு என்ன வைக்கலாம்? பரிந்துரை செய்யவும்.