சர்க்கரை கொல்லி யானது சர்க்கரைக்கு எதிரான ஒரு முக்கிய மூலிகையாகும். இவை இனிப்பு உண்ண வேண்டும் என்ற உணர்வை கட்டுப்படுத்துகிறது.
இவை பரவலாக ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் மலேஷியாவில் வளர்கிறது.
இந்தியாவில் கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் பீகார் காடுகளில் காணப்படுகிறது. தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பரவலாக காணப்படுகிறது.
சர்க்கரை கொல்லி எப்படி பயிரிடுவது…?
இரகங்கள் :
இதன் இரகங்கள் ஆனது இலையின் அளவைப் பொருத்து இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்.
சிறிய இலை வகை: 1.0-3.5 செ.மீ நீளம் மற்றும் 1.5-2.5 செ.மீ அகலமும் கொண்டது. மென்மையான இப்பயிரானது வறண்ட பகுதிகளில் காணப்படும்.
அடர்ந்த மற்றும் மெல்லிய ரோமங்களை கொண்ட வகை: 3-6 செ.மீ நீளம் மற்றும் 3.5 -5 செ.மீ அகலமும் கொண்டது. இவை கரும் பச்சை நிறத்திலும், மெல்லிய ரோமங்களையும் கொண்டது.
பருவம்
ஜீன் மற்றும் ஜீலை மாதங்கள் சாகுடி செய்ய ஏற்ற மாதங்கள் ஆகும்.
மண்
செம்மண் மற்றும் களிமண் நிலங்களில் நன்கு வளரும் தன்மை கொண்டது. நீர் தேங்கி நிற்கும் பகுதிகளில் சாகுபடி செய்வதை தவிர்க்க வேண்டும்.
நிலம் தயாரித்தல்
நிலத்தை இரண்டு அல்லது மூன்று முறை உழவு செய்ய வேண்டும். கடைசி உழவின் போது 5 டன் தொழு உரம் இட்டு மண்ணுடன் கலக்க வேண்டும். பின்னர் 45x45x45மீ அளவுள்ள குழிகளை 2.5 மீ வரிசை இடைவெளி விட்டு எடுக்க வேண்டும்.
தயார் செய்துள்ள குழிகளை இலைகளால் நிரப்ப வேண்டும் மற்றும் மண்ணின் மேற்பரப்பில் குழிக்கு 2கிகி நன்கு மக்கிய உரம் இட வேண்டும். குழிகளில் பாசனம் செய்து ஒரு வாரம் ஆற விட வேண்டும்.
விதையளவு
விதைகள் அல்லது தாவரத் துண்டுகள் மூலம் நடவிற்கு பயன்படுத்தப்படுகின்றன. ஒரு எக்டருக்கு 2-3 கிகி விதைகள் தேவைப்படும்.
இனப்பெருக்க முறைகள்
நவம்பர் – டிசம்பர் மாதங்களில் புதிதாக அறுவடை செய்யப்பட்ட பழங்களிலிருந்து விதைகளை சேகரிக்க வேண்டும். இரவு முழுவதும் விதைகளை நீரில் ஊற வைக்க வேண்டும். பின்னர் மணலுடன் கலந்த மண்ணில் தொட்டியில் நடவு செய்து தினமும் நீர்ப்பாய்ச்ச வேண்டும். விதைகள் 15 நாட்களில் முளைத்து விடும். 40-50 நாட்களுக்குப் பிறகு விதைகளை மணல், மண் மற்றும் தொழுவுரத்தை சமமான அளவு கலந்து வைக்கப்பட்ட பாலித்தீன் பையில் நடவு செய்ய வேண்டும். 90 நாட்கள் ஆன பின் வயலில் நடவு செய்ய வேண்டும். இது விதைகள் மூலம் இனப்பெருக்கம் செய்யும் முறையாகும்.
தண்டுகள் மூலம் இனப்பெருக்கம் செய்வதற்கு முதிர்ந்த தண்டுகளில் 15 செ.மீ நீளத்திற்கு வெட்டி அவற்றை 500 பிபிஎம் இன்டோல் ப்யூரிக் அமிலத்தில் 18 மணி நேரம் நேர்த்தி செய்ய வேண்டும். பிறகு இவற்றை மணல், மண் மற்றும் தொழுவுரத்தை சமமான அளவு கலந்து வைக்கப்பட்ட பாலித்தீன் பையில் நடவு செய்ய வேண்டும். தினமும் பாசனம் செய்ய வேண்டும். 90 நாட்களில் வேர்கள் உருவாகும்.
விதைத்தல்
90 நாட்கள் ஆன நாற்றுகளை நடவு செய்ய பயன்படுத்த வேண்டும். தாவரங்களுக்கு இடையே 1.75 மீ இடைவெளி இருக்குமாறு தயார் செய்துள்ள குழிகளில் நடவு செய்ய வேண்டும்.
நீர் நிர்வாகம்
நடவு செய்தவுடன் நீர் பாய்ச்ச வேண்டும். பின் 5-6 நாட்களுக்கு ஒரு முறை பாசனம் செய்ய வேண்டும். வெயில் காலங்களில், நீர்ப் பாய்ச்சுவதை அதிகரிக்க வேண்டும்.
சர்க்கரை கொல்லி உரங்கள்:
ஒரு ஏக்கருக்கு தழைச்சத்து 95 கிகி, மணிச்சத்து 45 கிகி மற்றும் சாம்பல் சத்து 35 கிகி கொடுக்கக்கூடிய இரசாயன உரங்களை அளிக்க வேண்டும். இந்த உரங்களை இரண்டாக பிரித்தும் அளிக்கலாம். அடியுரமாக ஒரு பங்கும், நடவு செய்த முப்பது நாட்கள் கழித்து ஒரு பங்கு உரத்தை மேலுரமாகவும் இட வேண்டும்.
சர்க்கரை கொல்லி பாதுகாப்பு முறைகள்:
களை நிர்வாகம்
நடவு செய்த ஒரு மாதத்திற்குள் ஒரு களை எடுக்க வேண்டும். அதன் பின் களைகளின் வளர்ச்சியை பொறுத்து கைக்களை எடுக்க வேண்டும்.
பயிர் பாதுகாப்பு
இலைப்பேன்
இலைப்பேன் தாக்குதலைக் கட்டுப்படுத்த டைமெத்தோயேட் 2 மிலி மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
பச்சை ஈ
இதனை கட்டுப்படுத்த மோனோகுரோடோபாஸ் 1மிலி மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
சாம்பல் நோய் மற்றும் இலைப்புள்ளி நோய்
இதனைக் கட்டுப்படுத்த நனையும் கந்தகம் 3கி அல்லது மேன்கோசேப் 2கி மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து, 10-15 நாட்கள் இடைவெளியில் தெளிக்க வேண்டும்.
அறுவடை
சர்க்கரைக்கொல்லியானது நடவு செய்த இரண்டு வருடத்தில் அறுவடைக்குத் வந்துவிடும். இலைகள் ஜீன் கடைசி வாரம் அல்லது ஜீலை முதல் வாரத்தில் பூக்க ஆரம்பித்தவுடன் அறுவடை செய்ய வேண்டும். இலைகளை பூக்களுடன் சேர்த்து கைகளால் அல்லது கத்தியால் அறுவடை செய்ய வேண்டும். அறுவடை செய்யப்பட்ட இலைகளை நிழலில் 7-8 நாட்கள் உலர்த்த வேண்டும். சூரிய ஒளியில் உலர வைப்பதை தவிர்க்க வேண்டும்.
மகசூல்
ஒரு ஏக்கரில் 3-4 வருட பயிரில் இருந்து 10,000-15,000 உலர் இலைகளை அறுவடை செய்யலாம். நல்ல முறையில் பராமரிக்கப்படும் பயிரிலிருந்து ஒரு வருடத்திற்கு 10-15 டன் மகசூல் கிடைக்கும்.
சர்க்கரை கொல்லி பயன்கள்:
- வாரம் இருமுறை குறிஞ்சாக் கீரையை உணவில் சேர்த்து உண்டு வந்தால் உடல் சூடு தணியும்.
- உடல் மேல் வரும் தடிப்பு, பத்து, படை, இவைகளுக்கு இதன் இலையை அரைத்து பூசி வர அவை மறைந்துவிடும்.
- எத்தகைய விஷக்கடியாக இருந்தாலும் குறிஞ்சாக் கீரையை கடிபட்ட இடத்தில் வைத்து கட்டியும், கீரையை கஷாயம் செய்து சாப்பிட்டால் விஷம் விரைவில் முறியும்.
- சிறுகுறிஞ்சான் இலையை நிழலில் காயவைத்து இடித்து தூள் செய்து சர்க்கரை வியாதி உள்ளவர்கள் நெய்யில் குழைத்து சாப்பிட்டால் சிறுநீரில் சர்க்கரையின் அளவு குறைந்து நாளடைவில் நோய் முற்றிலும் குணமடைந்து விடும்.
- குறிஞ்சாக் கீரையை நிழலில் உலர்த்தி பொடி செய்து தினமும் காலையில் கஷாயம் செய்து சாப்பிட்டு வந்தால் உடலில் நோயின் தாக்குதல் இருக்காது.
- இக்கீரையை ஆமணக்கு எண்ணெய் விட்டு வதக்கி நெறிகட்டிய இடத்தில் வைத்து கட்டினால் வலி குறையும்.
Narayanaswamy says
very useful tips.
Navinkumar V says
இது நம்முடைய குழு. இங்கு உங்கள் சந்தேகங்களை கேட்கலாம்
https://www.facebook.com/groups/agriculturetripiyarkaivivasayam