சோளம் என்பது புல்வகையை சேர்ந்த சிறிய தானிய பயிராகும். சோளத்தில் பல வகைகள் உள்ளது. முற்காலத்தில் காட்டுசோளம் மற்றும் செஞ்சோளத்தை பயிர் விளைச்சலுக்கு பயன்படுத்தினர். தற்போது காலநிலை மாற்றத்தின் காரணமாக கலப்பின ரக சோளங்களையே அதிகம் பயன்படுத்துகின்றனர். தென்மேற்கு பசிபிக் மற்றும் ஆஸ்திரேலிய கண்டங்களில் இருந்து தான் இது மற்ற கண்டங்களுக்கு பரவியதாக கருதப்படுகிறது.
இந்தியாவில் நெல் மற்றும் கோதுமைக்கு பின்பு பிரதான அளவில் பயன்படுத்தப்படும் உணவு தானியம் சோளம் ஆகும். சிலவகை சோளங்களை நாம் உணவு பயன்பாட்டுக்கும் சிலவகை சோளங்களை நாம் கால்நடைகளின் தீவனமாகவும் பயன்படுத்துகிறோம். கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுத்தப்படும் சோளம் குறைந்த நாட்களிலே வளரும் தன்மை உடையது. நொதித்தல் தொழிற்சாலை மற்றும் எரிசாராயம் மற்றும் கரைப்பான் தொழிற்சாலைகளில் சோளம் அதிக அளவு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
வெள்ளைச் சோளம் அரிசியை காட்டிலும் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவு பொருளாகும். நமது ஆரோக்கியத்துக்கு தேவையான புரதம், இரும்பு, கால்சியம், கொழுப்பு, மற்றும் நார் சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. இதில் குறைந்த அளவிலான குளுக்கோஸ் இருப்பதினால் சக்கரை நோயாளிகளுக்கு மிகசிறந்த உணவாக இது விளங்குகிறது.
சோளத்தின் பயன்கள்
- வடஅமெரிக்க மற்றும் தென்அமெரிக்க நாடுகளில் அதிக அளவில் பயிரிடப்படும் பயிராகும். ஆற்றல்-349 கி.கலோரி மற்றும் புரதம்-10.4 கிராம் மற்றும் கொழுப்பு-1.9 கி மற்றும் மாவுச்சத்து – 72.6 கி மற்றும் கால்சியம் – 25 மி.லி இருப்பதினால் மேலை நாடுகளில் காலை சிற்றுண்டிக்கு அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
- சோளத்தின் அடிப்பகுதி கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுத்தப்படுகிறது.
- சோளத்தின் கரைசல் தொழிற்சாலைகளில் நொதிப்பான் ஆகவும், ஆல்கஹால் தொழிற்சாலையில் ஆல்கஹால் தயாரிக்கவும் சோளக்கரைசல் பயன்படுத்தப்படுகிறது.
பயிரிடும் முறை:
- பரவலான தட்பவெட்ப சூழ்நிலையிலும், நச்சு மண்ணிலும் நன்கு விளையும் தன்மையுடையது
- குறைந்த அளவு மழை பெய்தாலும் வளரும் தன்மை உடையது.
- சித்திரை மாதத்தில் உழவு செய்து நன்கு மண்ணை காய விட வேண்டும்.
- ஆடி மாதம் சோளம் பயிரிடுவதற்கு சிறந்த காலம் ஆகும்.
- ஆடி மாதத்தில் மழை கிடைத்த உடன் மண்ணை உழவு செய்து, சோளத்தை விதைக்க வேண்டும்.
- ஒரு மாதம் கழித்து அதில் வளர்ந்திருக்கும் தேவையற்ற களைகளை நீக்க வேண்டும். வேறு எந்தவிதமான பராமரிப்பும் செய்ய வேண்டியதில்லை.
- 6 – 7 மாதங்களில் நன்கு வளர்ந்து சோளம் முற்றியவுடன் அறுவடை செய்யவேண்டும்.
தயவு செய்து உங்களுடைய கருத்துக்களை கீழே உள்ள கமெண்ட் ஏரியாவில் பதிவிடவும். தவறுகளை சுட்டிக்காட்டி, உங்கள் கருத்துக்களை பரிமாறி இவ்வலைத்தளத்தை திறன்பட நடத்த உதவவும்.
Pkr says
சிறப்பு நன்றி நான் இலங்கை வாழ் இந்திய வம்சாவளி தமிழர் மலையக தமிழர்கள் என்றால் தெரியும் எனக்கு மஞ்சள் கொண்டகடலை (பனி கடலை) சோலம் பயர் வளர்ப்பு பற்றிய விபங்களையும் அதுப்பற்றிய புத்தகங்கள் Ptf. முறையில் தர முடியுமா அண்ணா