பயிர்களின் வளர்ச்சி மற்றும் நல்ல மகசூல் பெற ஊக்கசத்துவாக ஜீவாமிர்தம் பயன்படுகிறது. எவ்வாறு தயார்செய்வது என்று இங்கு காணலாம்
தேவையான பொருட்கள்
நாட்டு பசுஞ்சாணம் – 10 கிலோ
நாட்டு பசுங்கோமியம் – 5 முதல் 10 லிட்டர்
வெல்லம் – 2 கிலோ (அ) கரும்புச்சாறு – 4 லிட்டர்
தானிய மாவு – 2 கிலோ (தட்டைப்பயறு (அ) துவரை (அ) கொள்ளு (அ) கொண்டைக் கடலை (அ) உளுந்து)
காட்டின் மண் – கையளவு
தண்ணீர் – 200 லிட்டர் (குளோரின் கலக்காதது)
தயாரிக்கும் முறை
200 லிட்டர் தண்ணீரில் சாணம், கோமியம், வெல்லம் அல்லது கரும்புச்சாறு, தானியமாவு ஆகியவற்றுடன் கையளவு மண் சேர்த்து ஒரு தொட்டியில் இட்டு கலக்க வேண்டும்.
தினமும் 3 முறை 3 நாட்களுக்கு தவறாமல் கலக்கி விடவேண்டும். ஒரு கிராம் மண்ணில் 5 லட்சம் கோடிக்கும் அதிகமான நுண்ணுயிரிகள் இருக்கின்றன. ஒவ்வொரு 20 நிமிடத்துக்கும் இந்த நுண்ணுயிரிகள் இரட்டிப்பு அடைகின்றன.
இவ்வாறு கலக்கப்பட்ட இந்த நுண்ணுயிர் கலவைதான் ஜீவாமிர்தம்.
தெளிப்புக்காக எடுக்கும்போது கரைசலின் மேற்புறத்தில் இருக்கும் தெளிவை மட்டும் எடுத்து வடிகட்டிப் பயன்படுத்த வேண்டும்.
ஒவ்வொரு பயிருக்கும் குறிப்பிட்ட அளவு வடிகட்டிய ஜீவாமிர்தத்தை, குறிப்பிட்ட அளவு நீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
கன ஜீவாமிர்தம்
பசுஞ்சாணம் 100 கிலோ, 2 கிலோ வெல்லம், 2 கிலோ பயறு மாவு ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து கொள்ள வேண்டும். உப்புமா பதம் வருவதற்கு எவ்வளவு தேவையோ அந்த அளவிற்கு நாட்டு மாட்டுச் சிறுநீரை கலக்க வேண்டும். பின்பு உருட்டி நிழலில் காயவைத்து தேவைப்படும் போது உதிர்த்துப் பயன்படுத்தலாம்.
நன்மைகள்
- விதைநேர்த்தி செய்ய ஜீவாமிர்தம் மிகவும் உகந்ததாகும். விதைநேர்த்தி செய்ய விதைகளை இந்த கரைசலில் 2 மணி நேரம் ஊற விட வேண்டும். நாற்றுகளாக இருந்தால் அதன் வேர்களை நன்றாக நனையவிட்டு பிறகு நடவு செய்ய வேண்டும்.
- ஜீவாமிர்தம் பாய்ச்சப்படும் பயிர்களை எந்த நோயும் தாக்காது.
- ஜீவாமிர்தம் நீரில் கலந்து பயன்படுத்தும் போது மண்புழுக்கள் வரவு அதிகரிக்கிறது .
- வேர் அழுகல், வேர்க்கரையான், வேர்ப்புழு நோய்கள் தடுக்கப்படும்.
- ஜீவாமிர்தம் அனைத்து வகை மண்ணையும் சத்துநிறைந்த மண்ணாக மாற்றிவிடுகின்றது.
- ஜீவாமிர்தம் தெளிப்பதால் நுண்ணுயிர்களின் வளர்ச்சி பல மடங்கு அதிகரிக்கிறது.
Balakrishnan says
நாற்றுக்களை ஜீவாமிர்தம் கரைசலில் அப்படியே நனைத்து விடலாமா
தண்ணீர் சேர்த்து நனைக்க வேண்டுமா
Murugan says
சீம மாட்டு சாணம் உபயோக படுத்த லாமா?
Navinkumar V says
உங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை எங்களின் முகப்புத்தக குழுவில் எங்களிடம் கேட்கலாம். நாங்கள் உங்கள் சந்தேகங்களுக்கு உடனுக்குடன் பதில் அளிக்கிறோம்.
இது நம்முடைய முகப்புத்தக குழு. இங்கு உங்கள் சந்தேகங்களை கேட்கலாம்
https://www.facebook.com/groups/agriculturetripiyarkaivivasayam
N.CHITHIRAISAMY says
NO
கிருபாகரன் says
அருமை 👌
L Jaishankar Iyer says
15 லி தண்ணீரில் எவ்வளவு ஜீவாமிர்தம் கலக்கவேண்டும் ?
L Jaishankar Iyer Bhilai
Chhqttisgarh