தக்காளி செடியினத்தை சேர்ந்த தாவரமாகும். அமெரிக்க கண்டத்திலிருந்து பிற கண்டங்களுக்கு பரவியதாக ஆராச்சியாளர்கள் கருதுகின்றனர். ஏனெனில் 16 -ம் நூற்றான்றுகளில் அமெரிக்க உணவுகளில் தக்காளியின் பயன்பாடு குறித்து அவர்களில் வரலாற்று பதிவுகளில் குறிப்பிட்டுள்ளனர்.
இன்றளவும் தக்காளி உற்பத்தியில் அமெரிக்கா தான் முதலிடம் வகிக்கிறது. தென் இந்தியாவில் அதிக அளவு இன்றளவும் பயிரிடப்படுகிறது. தென் இந்தியர்களின் அன்றாட உணவு பொருட்களில் தக்காளியின் பங்கு அதிகம்.
பயிரிடும் முறை :
- ஜூன் – ஜூலை, நவம்பர் – டிசம்பர், பிப்ரவரி – மார்ச், மாதங்கள் தக்காளி சாகுபடிக்கு ஏற்ற பருவங்கள் ஆகும்.
- வண்டல் மண்ணில் நல்ல மகசூலை தரும். மண்ணின் கார அமில தன்மை 6 – 7 ஆக இருக்க வேண்டும்.
- ஒரு ஹெக்டரில் பயிரிட 400 கிராம் அளவுள்ள விதை போதுமானது.
- நிலத்தை நன்கு உழுது பாத்திகளை உருவாக்க வேண்டும் அதில் தேவையான அளவு தொழுஉரம் இட்டு நிரவிக்கொள்ள வேண்டும். அதில் தக்காளி விதைகளை தூவி நீர் பாய்ச்ச வேண்டும். 30 நாட்களில் நாற்றுகள் வளர்ந்துவிடும்.
- பின்பு 100 செ.மீ தொலைவுகளில் பாத்திகள் அமைத்து நீர் பாய்த்து அதில் 1 அடி இடைவெளியில் நாற்றுகளை நட வேண்டும்.
- நாற்று நட்ட இரண்டாம் நாள் நீர் பாய்ச்ச வேண்டும். அதன்பின்பு மண்ணின் ஈரத்தன்மையை பார்த்து வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.
- நாற்று நட்ட ஒரு மாதத்திற்கு பின்பு அதில் வளர்ந்துள்ள தேவையற்ற களைகளை நீக்கி வேர்களுக்கு தொழு உரம் வைத்தால் நல்ல மகசூல் பெறலாம்.
- அறுவடைக்கு தயாரான காய்களை மட்டும் பறிக்க வேண்டும், காய்கள் கரும்பச்சை நிறத்தில் இருந்து வெளிர் மஞ்சள் நிறத்திற்கு மாறும்பொழுது அதனை அறுவடை செய்ய வேண்டும்.
- 135 நாட்களில் ஒரு ஏக்கருக்கு 35 டன் பழங்கள் அறுவடை செய்யலாம். வரப்பு பயிராக ஆமணக்கு அல்லது மக்காசோளம் அல்லது மிளகாய் பயிரிடலாம்.
- நாற்று நட்ட 30 ஆம் நாள் ஒரு கைக்களை எடுக்கவேண்டும். அதன்பிறகு களை எடுக்கவேண்டியது இல்லை
- பயிர் நடவு செய்த 25 நாட்களுக்கு மேல் செடி ஆங்காங்கே வாடி காய்ந்து விடும். இதை இயற்கை முறையில் கட்டுப்படுத்த நடவு செய்த ஒரு வாரத்திற்கு பிறகு 50 கிலோ மக்கிய தொழு எரு தூவி விட வேண்டும்.
பயன்கள்:
- ரத்த ஓட்டத்தை சீராக வைத்துக்கொள்ளவும், ரத்த உற்பத்திக்கும் தக்காளி உதவுகிறது. ரத்தத்தை சுத்திகரிக்கும் பணியையும் செய்கிறது.
- தக்காளி ஜூஸை காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதால் தோல் சம்மந்தமான அனைத்து நோய்களும் குணமாகும். சருமத்தை பளபளப்பாகவும் ஆரோகியமாகவும் வைத்துக்கொள்ள தக்காளி உதவுகிறது.
- தக்காளி ஜூஸை முகத்தில் தடவி 30 நிமிடங்கள் கழித்து சுத்தமான நீரில் கழுவும்போது முகம் பளபளப்பாகவும் முகத்தில் உள்ள கரும்புள்ளிகளும் மறைய தொடங்கும்.
- தினமும் இரண்டு பழுத்த தக்காளி பழங்களை சாப்பிடுவதால் உடல்பருமனை குறைக்கலாம். உடலுக்கு வளத்தையும், பலத்தையும் தரும் ஆற்றல் உடையது.
தயவு செய்து உங்களுடைய கருத்துக்களை கீழே உள்ள கமெண்ட் ஏரியாவில் பதிவிடவும். தவறுகளை சுட்டிக்காட்டி, உங்கள் கருத்துக்களை பரிமாறி இவ்வலைத்தளத்தை திறன்பட நடத்த உதவவும்.
Lipisan says
ஒரு குளியில் எத்தனை நாற்று நாட்ட வேண்டும்
Nathiya says
Na vètla maadila thotila tomato vachirken,ena oram poda sir
Ks Krishnan says
Sir
Headline in home garden but your measurements in hector ,so please kindly give solutions for real home garden ,basically we need daily, Tomato, chilly, coriander leaves, brinjal, lady’s finger,etc
Your article is very beautiful,I am a chennaties,but a 4 years before I take 2 hector agriculture land in salem area ,the neighbour farmers not given hints ,but without proper guidence I got yield in Tomato,sago,and coconut.
So your web site details article and any one became a former with your guidance.
All the best keep it up