திராட்சை என்பது திராட்சை பேரினத்திலுள்ள இனங்களில் ஒன்றாகும். இது மொராக்கோ, வாடா போர்ச்சுக்கல் முதல் தென் ஜெர்மனி மற்றும் கிழக்கில் வட ஈரான் ஆகிய பகுதிகளுக்கு உட்பட்ட மத்திய தரைப்பகுதி, மத்திய ஐரோப்பா,ஆசியா இடங்களை தாயகமாக கொண்டது. தமிழ்நாட்டிலும் அனைத்து இடங்களிலும் பரவலாக திராட்சை பயிரிடப்படுகிறது.
பயிரிடும் முறை:
- ஜூன் – ஜூலை மாதத்தில் திராட்சை நடவு செய்ய ஏற்ற பருவம் ஆகும்.
- நல்ல வடிகால் வசதி உள்ள வண்டல் மண் பூமி திராட்சை சாகுபடிக்கு ஏற்ற மண் வகை ஆகும். மண்ணின் கார அமிலத் தன்மை 6 .5 முதல் 7 .5 ஆக இருக்க வேண்டும். மண்ணின் உப்பு நிலை 1 க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
- தேர்வு செய்த நிலத்தினை நன்கு உழுது சமன் படுத்த வேண்டும். பின் அதில் பன்னீர் ரகங்களுக்கு குழிகளை ௦.6 மீட்டர் அகலம், ௦.6 மீட்டர் ஆழம், 3 மீட்டர் இடைவெளியில் தோண்ட வேண்டும். மற்ற ரகங்களுக்கு 1 x 1 x 1 மீட்டர் அளவுள்ள குழிகளை எடுக்க வேண்டும். குழிகளில் நன்கு மக்கிய உரம் அல்லது குப்பைகள் அல்லது பசுந்தழை உரம் கொண்டு நிரப்பி ஆற விட வேண்டும்.
- வேர் வந்த முற்றிய குச்சிகள் தான் நடவுக்கு பயன்படுகின்றன. தயார் செய்துள்ள குழிகளில் வேர் வந்த முற்றிய குச்சிகளை குழியின் மையப்பகுதியில் நடவு செய்யவேண்டும். பன்னீர் திராட்சையை 3 x 2 மீட்டர் இடைவெளியிலும், மற்ற ரகங்களை 4 x 3 மீட்டர் இடைவெளியிலும் நடவு செய்ய வேண்டும்.
- செடிகளை நட்ட உடனே நீர் பாய்ச்ச வேண்டும். பின்பு மூன்றாவது நாள் உயிர் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். அதன் பின் வாரத்திற்கு ஒரு முறை நீர் பாய்ச்ச வேண்டும். அறுவடை செய்வதற்கு இரண்டு வாரத்திற்கு முன் நீர் பாய்ச்சுவதை நிறுத்த வேண்டும்.
- செடிகள் வளரும் வரை களை இல்லாமல் பராமரிக்க வேண்டும். வளரும் செடியை ஒரே தண்டாக பந்தல் உயரத்திற்கு கொண்டு வந்து பின்பு நுனியை கிள்ளிவிட வேண்டும். பின்பு வளரும் பக்கக் கிளைகள் எதிர் எதிர் திசையில் வளரவிட்டு மென்மேலும் நுனிகளை கிள்ளி, கிளைகளை பந்தல் முழுவதும் படர செய்ய வேண்டும்.
- மாதமொருமுறை ஒவ்வொரு குழிக்கும் 5 கிலோ தொழுஉரம் வைத்து தண்ணீர் பாய்ச்சி பராமரிப்பதினால் நல்ல விளைச்சல் பெறலாம். ஒரு வருடத்திற்கு ஒரு ஏக்டரில் இருந்து விதையில்லா ரகங்கள் 15 டன், பன்னீர் திராட்சை 30 டன் வரை மகசூல் கிடைக்கும்.
திராட்சையின் பயன்கள்:
- திராட்சையில் உள்ள குளுக்கோஸ் உயர்ந்த தரம் கொண்டது. இது சக்கரை நோயாளிகள் எடுத்துக்கொள்ளும்பொழுது நல்ல சக்கரையாக மாறி உடலுக்கு புத்துணர்ச்சி கொடுக்கிறது.
- கர்பப்பை கோளாறு உள்ள பெண்கள் திராட்சை பலத்தை எடுத்துக்கொண்டால் கர்பப்பை சம்மந்தப்பட்ட நோய்கள் அனைத்தும் நீங்கும்.
- இதயத்தை பாதுகாக்கும் தன்மை கொண்டது. இதய ரத்த குலை அடைப்பு நோயாளிகள் கண்டிப்பாக சாப்பிட வேண்டும்.
- புற்றுநோய் செல்களை கரைத்து வெளியேற்றும் தன்மை கொண்டது.
- உடலில் உள்ள கெட்ட நீர்,வாயு,சளி,குடல் கழிவுகள்,உப்புகள் ஆகியவற்றை கரைத்து வெளியேற்றும் தன்மை உடையது.
- உலர்ந்த திராட்சையும் பல நன்மைகளை கொண்டுள்ளது. ஆகவே எக்காலத்திலும் திராட்சையை தவிர்க்காமல் சாப்பிட வேண்டும்.
தயவு செய்து உங்களுடைய கருத்துக்களை கீழே உள்ள கமெண்ட் ஏரியாவில் பதிவிடவும். தவறுகளை சுட்டிக்காட்டி, உங்கள் கருத்துக்களை பரிமாறி இவ்வலைத்தளத்தை திறன்பட நடத்த உதவவும்.
Isaac Vijayan says
Super
Navinkumar V says
நன்றி. தொடர்ந்து எனக்கு ஆதரவு தாருங்கள் ….
R. Kandasamy, 9678585143 says
Madiveddu thottathil evaru payir seivathu enpathai therriyappaduthavum
பழனி says
திராட்சை செடிகள் கடலூர் பாண்டிச்சேரி பகுதிகளில் விளைவிக்க முடியுமா (20-40°C)
செடி நட்டு எத்தனை நாட்களில் பலன் கொடுக்கும்
Kutty says
More than 20 years
குரு says
நன்றி!
PRABU says
Tiratchai seti engu kidaikum