நெல் என்பது புல்வகையை சேர்ந்த ஒருவகை தாவரமாகும். தென்கிழக்கு ஆசிய நாடுகள் தான் இதன் பூர்விகம் ஆகும். இது ஈர நிலங்களில் வளரும் தாவரமாகும். இன்றளவும் இந்தியாவில் பயிரிடப்படும் தானியங்களில் நெல் முதலிடத்தில் உள்ளது. தென் இந்தியர்களின் அன்றாட உணவுகளில் அரிசியின் பங்கு அதிகம்.
உலக அளவில் தானிய உற்பத்தியில் நெல் மூன்றாம் இடம் வகிக்கிறது. சோளம்,கோதுமைக்கு அடுத்து அதிகம் பயிராகும் தானியம் நெல் ஆகும்.
நெல்லின் மேலுள்ள தோல் உமி என்று அழைக்கப்படுகிறது. இது கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுத்தப்படுகிறது. நெல்லின் உமி ஆல்கஹால் தொழிற்ச்சாலைகளில் பதப்படுத்தப்பட்ட பானமாக பயன்படுத்தப்படுகிறது. கோழி பண்ணைகளில் கோழி தீவனமானாகும் பயன்படுகிறது.
மேலுறை நீக்கப்பட்ட நெல்லானது அரிசி என்று அழைக்கப்படுகிறது. அரிசியைத்தான் உணவு பொருளாக பயன்படுத்தப்படுகிறது.
ரகங்களுக்கு ஏற்றவாறு நெல்லின் விளைச்சல் காலம் மாறுபடும். 30 நாட்கள் முதல் 180 நாட்கள் வரை வளரும் ரகங்கள் உள்ளன. நெல் உற்பத்திக்கு வண்டல் மண் சிறந்தது.
நாற்றங்கால் தயாரிக்கும் முறை:
- 1 ஏக்கர் நிலத்திற்கு 30 – 40 கிலோ விதை நெல் போதுமானதாகும். ரகங்களுக்கு ஏற்றவாறு தரமான விதைகளை அரசாங்க களஞ்சியத்தில் வாங்கியோ அல்லது முந்தய சாகுபடி நெல்லையோ பயன்படுத்தலாம்.
- 1 சென்ட் நிலத்தை நன்கு ஏர் உழுது நீர் பாய்த்து அதில் இலை சத்துக்கள் மற்றும் தொழுவுரம் போட்டு இரண்டு நாட்கள் ஊற வைக்க வேண்டும்.
- விதை நெல்லை சுமார் 8 – 10 மணி நேரம் ஊறவைத்து அதை ஒரு ஈரமான கோணிப்பையில் போட்டு முளைப்போட வேண்டும்.
- அடுத்த நாள், மறுபடியும் அந்த நிலத்தை உழுது நீர் பாய்த்து சமன்படுத்தி சிறிது நேரம் தெளியவிட வேண்டும். பின்பு முளைகட்டிய விதையை அந்த நிலத்தில் சீராக தூவ வேண்டும்.
- முதல் ஒரு வாரத்திற்கு அதிகப்படியான நீர் விடாமல் தேவையான அளவு நீர் விட்டு ஈரமாக பராமரிக்க வேண்டும். நாற்றுகள் முளைக்க ஆரம்பித்தவுடன் அதன் அளவுக்கு ஏற்ப நீர் பாய்ச்சலாம்.
- 30 நாட்களுக்கு பின் நாற்றுகள் 10 செ.மீ நீளம் வளர்ந்த பின்பு அதனை பிடுங்கி பயிரிடப்போகும் நிலத்தில் நடலாம்.
பயிரிடும் முறை:
- நாற்றுகள் 20 நாட்கள் வளர்ந்த பின்பு பயிரிட போகும் நிலத்தை உழுது அதில் தேவையான அளவு தழை சத்து மற்றும் தொழுவுரம் போட்டு நீர் பாய்ச்சி ஒரு வாரம் நன்கு மக்கும் வரை நீர் பாய்ச்ச வேண்டும்.
- நாற்றுகள் 30 நாட்கள் ஆனா பின்பு மறுபடியும் நிலத்தை நன்கு உழுது நீர் பாய்ச்சி சமன்படுத்தி கொள்ள வேண்டும். பின்பு நாற்றுகளை பிடுங்கி வைத்துக்கொள்ள வேண்டும்.
- பிடுங்கி வைத்துள்ள நாற்றுகளை ஒன்றுக்கொன்று 10 செ.மீ இடைவெளிகளில் இரண்டு அல்லது மூன்று நாற்றுகளை ஒன்றாக சேர்த்து 3 செ.மீ ஆழத்திற்கு நடவேண்டும்.
- பின்பு 30 நாட்கள் வாரத்திற்கு மூன்று முறை நீர் பாய்ச்ச வேண்டும். அதிலுள்ள தேவையற்ற களைகளை நீக்க வேண்டும்.
- சீராக நீர் பாய்த்து பராமரித்தால் 180 நாட்களில் அறுவடைக்கு தயாராகும்.
நெற்பயிரின் நோய்கள்:
1) குலை நோய்: (பைரிகுலேரியா ஒரைசா)
அறிகுறிகள்:
பயிரின் எல்லா வளரும் நிலைகளிலும், எல்லாக் காற்றுவெளி பாகங்களையும் தாக்கும் தன்மையுடையது.
இலை மற்றும் கழுத்துப் பகுதிகளிலும் (கதிர் காம்பு) தாக்கம் அதிகமாக இருக்கும்.
இலைகளில் ஆங்காங்கே மேலெழுந்த புள்ளிகள் உருவாகும். அவை நாளடைவில் நூற்புக்கதிர் வடிவம் (மனிதனின் கண்போன்ற வடிவம்) பெறும்.
சிறுசிறு புள்ளிகள் தோன்றும் பின்னர் அவை ஒன்றிணைந்து வடிவம் பெறும்.
அதிகப்படியாக தண்டு சாய்தல் ஏற்படலாம்.
2) கதிர்க்காம்பு குலை நோய்:
கழுத்து (கதிர்க்காம்பு) கருமையடைந்து, சுருங்கிவிடும் கதிரின் காம்பு உடைந்து தொங்கும்.
கட்டுப்படுத்தும் வழிமுறைகள்:
எதிர்ப்பு சக்தி கொண்ட பயிர்களான பென்னா, பிரபாட் டிக்கானா, ‚ரங்கா, சிம்மபுரி, பல்குணா, சுவர்ணமுகி, சுவாதி, ஐ.ஆர் – 36, எம்.டி.யூ 9992, எம்.டி.யூ 1005, எம்.டி.யூ 7414.
அறுவடை செய்த பின்பு, அடித்தண்டு மற்றும் மீதமிருக்கும் வைக்கோல் புற்களை எரித்து விடவேண்டும்.
3) பாக்டீரியா ஏற்படுத்தும் இலை கருகல் நோய்:
அறிகுறிகள்:
நாற்று வாடல்.
மஞ்சள் நிற கோடுகள் இலைகளில் காணப்படும். அவை இலைக் காம்பிலிருந்து உள்நோக்கி வளரும்.
ஆரம்பத்தில் புள்ளிகளிலிருந்து அதிகாலையில், பால்போன்ற அல்லது நிறமற்ற திரவம் வெளியேறுவதைக் காணலாம்.
புள்ளிகள் மஞ்சள் நிறமாக மாறும்.
கட்டுப்படுத்தும் முறைகள்:
நோயில்லா வித்துக்களை வாங்கவேண்டும்.
நாற்றங்காலினை தனி இடத்தில் வளர்க்க வேண்டும்.
வயலில் உள்ள அதிகப்படியான நீரை வடிகட்டவும்.
பாதிக்கப்பட்ட பயிர்கள் இருக்கும் இடத்திலிருந்து நீர் ஆரோக்கியமான பயிர்கள் உள்ள இடத்திற்கு நீர் செல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
எதிர்ப்புத்திறன் கொண்ட பயிரை வளர்க்கவும் – சுவர்ணா, அஜயா, தீப்தி, பத்வா மசூரி, எம்.டி.யூ 9192.
4) கதிர் உறை அழுகல் நோய்:
அறிகுறிகள்:
ஒழுங்கற்ற புள்ளிகள் தோன்றும் அவற்றின் நடுப்பகுதி சாம்பல் நிறத்திலும், ஓரங்கள் அரக்கு நிறத்துடனும் காணப்படும்.
இலையின் நிறம் மங்கிக் காணப்படும்.
புள்ளிகள் தோன்றி பின்னர் ஒன்றிணைந்து இலையின் பெரும்பகுதியை ஆட்க்கொள்ளும்.
முளைக்காத நெல் குருத்துகள் அழுகிக் காணப்படும்.
பூக்கள் அரக்கு சிவப்பாக மாறிவிடும்.
வெள்ளைநிற பொடி போன்று படர்தலைக் காணலாம்.
நெற்கதிர்கள் ஆம்பிப் போய் காணப்படும். நெல் மணிகள் ஆரோக்கியமாக இராது.
தடுப்பு:
பாதிக்கப்பட்ட பயிர்களை அழித்திடல் வேண்டும்.
5) செம்புள்ளி நோய்:
அறிகுறிகள்:
நாற்ற்ஙகால் மற்றும் பயிரைத் தாக்கும்.
நாற்றுகளில் குலைநோய் ஏற்படுத்திடும்.
இலைகளில் புள்ளிகளை ஏற்படுத்தும்.
வித்துக்களும் பாதிக்கப்படும்.
நெற்கதிரில் செம்மை நிறம் படரும்.
இந்நோய் 50 சதவிகித இழப்பை ஏற்படுத்தும்.
தடுப்பு முறை:
இந்த பூஞ்சானை அழிக்க 10-12 நிமிடத்திற்கு வெந்நீரில் வத்துகளை, 53-540 சி-யில், போட்டுவைத்து பின்னர் உபயோகிக்க வேண்டும்.
6) நெற்பழம் நோய்:
அறிகுறிகள்:
நெல் மணிகள் தாக்கப்பட்டு மஞ்சள் நிறமாக மாறிவிடும் அவற்றலிருந்து பூஞ்சான் வளரும்.
பட்டுபோன்ற வளர்ச்சி காணப்படும்.
முதிர் நிலையில் இந்த பூஞ்சானின் வித்துக்கள் மஞ்சளிலிருந்து பச்சைகருமை நிறமாக மாறிவிடும்.
கதிரில் சில நெல் மணிகள் மட்டுமே பாதிக்கப்படும் மற்றவை நன்றாக இருக்கும்.
தடுப்பு:
காய்ந்த பயிர் பாகம் மற்றும் அடிதண்டுகளை அழித்திட வேண்டும்.
7) நெல் துங்ரோ நச்சுயிரி:
அறிகுறிகள்:
வளர்ச்சி நின்று விடும். அதனால் கட்டுடையாக நெற்பயிர்கள் காணப்படும். கதிர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும்.
இலைகள், துரு நிறத்தில் காணப்படும்.
தாமதமாக பூ பூக்கும் கதிர்கள் சிறியதாக காணப்படும்.
நெல் மணிகள், கதிரில், குறைவாகக் காணப்படும்.
தடுப்பு:
தடுப்பு சக்தி கொண்ட பயிர்கள் – எம்.டி.யூ 9992, எம்.டி.யூ 1002, எம்.டி.யூ 1005, சுரேகா, விக்ரமர்யா, பரணி, ஐ.அர்.36.
பயிறு வகைகள் மற்றும் எண்ணெய் விதைச் செடிகளை பயிர் சுழற்சிக்கு பயன்படுத்தலாம்.
அரிசியின் பயன்கள்:
- அரிசியில் அதிகஅளவு கார்போஹைட்ரெட் உள்ளது. இது உடல் வளர்ச்சிக்கு தேவையான சத்தாகும்.
- உடல் மெலிந்து காணப்படுபவர்கள் பச்சரிசி சாப்பிட்டால் கொழுப்பு சக்தி அதிகமாக கிடைக்கும். இதனால் உடல் எடை கூடும்.
- சிகப்பு அரிசியில் அதிக அளவு பைபர் உள்ளதால் ரத்தத்தில் கொழுப்பு சேருவதை தடுக்கிறது.
தயவு செய்து உங்களுடைய கருத்துக்களை கீழே உள்ள கமெண்ட் ஏரியாவில் பதிவிடவும். தவறுகளை சுட்டிக்காட்டி, உங்கள் கருத்துக்களை பரிமாறி இவ்வலைத்தளத்தை திறன்பட நடத்த உதவவும்.
Rajesh says
அருமையான பதிவு, நல்ல முயற்சிக்கு பாராட்டுக்கள்
Navinkumar V says
நன்றி ராஜேஷ், உன்னுடைய ஆதரவிற்கு நன்றி.
Markandu says
Super, Congratulation…
Navinkumar V says
Thank you.
Markandu says
Congratulation
Navinkumar V says
Thanks for your support. keep watch our blog for further update.
கா.ஆறுபதி says
ஐயா அருமையான பதிவு நன்றி.
mahendran.p says
maanavaari nilathil vithaikum nel vaikai irukiratha thayavu seithu pakirungal
Nelson says
Dear sir
Please share your contact detail.
In our paddy field, crops are affected by some insects.
I have taken photo of that.
Kindly advice us to prevent those crops.
9585824803
Navinkumar V says
உங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை எங்களின் முகப்புத்தக குழுவில் எங்களிடம் கேட்கலாம். நாங்கள் உங்கள் சந்தேகங்களுக்கு உடனுக்குடன் பதில் அளிக்கிறோம்.
இது நம்முடைய முகப்புத்தக குழு. இங்கு உங்கள் சந்தேகங்களை கேட்கலாம்
https://www.facebook.com/groups/agriculturetripiyarkaivivasayam
சஹீத் says
அருமையான ஆக்கங்கள், மிகுந்த பயனுடையவை கமத்தொழில் பற்றிய துல்லியமான தகவல்களை தருகிறீர்கள் ஐயா மிக்க நன்றி.