பப்பாளி ஒரு பழம் தரும் மரமாகும். இதற்கு பறங்கிப்பழம் என்று மற்றொரு பெயரும் உள்ளது.
பப்பாளியின் தாயகம் மெக்சிக்கோவாகும். தற்போது மேற்கிந்தியத் தீவுகள், ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, தென் அமெரிக்கா முதலான நாடுகளில் பப்பாளி அதிகமாக விளைகிறது.
எப்படி பயிரிடுவது…?
- கோ.1, கோ.2, கோ.3, கோ.4, கோ.5, கோ.6, கோ.7, கூர்க்கனிடியூ மற்றும் சூரியா ஆகிய இரகங்கள் சாகுபடிக்கு ஏற்றவை.
- வருடம் முழுவதும் பயிர் செய்யலாம். இருந்தாலும் ஜீன் முதல் செப்டம்பர் வரை உள்ள காலங்கள் நடவிற்கு மிகவும் ஏற்றது. நடவுப் பருவத்தில் அதிக மழை இல்லாமல் இருப்பது நல்லது.
- பப்பாளிப் பயிர் பலவகைப்பட்ட மண்ணிலும் வளரக்கூடியது. எனினும் களிமண் பூமி சாகுபடி செய்ய ஏற்றதல்ல.
- ஒரு எக்டருக்கு நடவு செய்ய 500 கிராம் விதைகள் தேவைப்படும்.
- நேர்த்தி செய்த விதைகளை தொழு உரம் மற்றும் மண் நிரப்பிய பாலித்தீன் பைகளில் ஒரு செ.மீ ஆழத்தில் விதைக்க வேண்டும். ஒரு பாலித்தீன் பையில் நான்கு விதைகள் வரை விதைக்கலாம். பிறகு பைகளை நிழல்படும் இடத்தில் வைத்து பூவாளி கொண்டு தண்ணீர் ஊற்றவேண்டும். நாற்றுக்கள் 60 நாட்களில் நடவுக்குத் தயாராகிவிடும்.
- நிலத்தை 2 அல்லது 3 முறை உழுது சமன் செய்ய வேண்டும். பிறகு 1.8 மீட்டர் இடைவெளியில் 45 செ.மீ நீளம், 45 செ.மீ அகலம் மற்றும் 45 செ.மீ ஆழத்தில் குழிகள் எடுக்கவேண்டும். குழிகளில் மண் மற்றும் தொழு உரம் இட்டு நீர் ஊற்றி ஆற விட வேண்டும்.
- தயார் செய்துள்ள குழிகளில் நாற்றுகளை மையப்பகுதியில் நட்டு நீர் பாய்ச்ச வேண்டும்.
- நட்டவுடன் நீர் பாய்ச்ச வேண்டும். பின்பு மூன்றாம் நாள் உயிர்த் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். அதன் பின் வாரம் ஒரு முறை நீர்ப் பாய்ச்சினால் போதுமானது. செடிகளைச் சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.
- நடவு செய்த 20-ம் நாளில் களை எடுத்து, ஒரு ஏக்கருக்கு தழை, மணி மற்றும் சாம்பல் சத்துக்கள் அடங்கிய 150 கிலோ உரத்தை கொடுக்க வேண்டும்.
- நட்ட 20 நாட்களில் களை எடுக்க வேண்டும். செடிகளைச் சுற்றி களை இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். களை எடுத்தப் பின் மண் அணைத்து நீர் பாய்ச்ச வேண்டும்.
- நன்கு திரண்ட பழங்களின் தோல் சற்றே மஞ்சள் நிறமாக மாறும் போது அறுவடை செய்யவேண்டும்.
- மகசூலானது இரகங்களை பொறுத்து வேறுபடும். கோ.2 இரகமாக இருந்தால் எக்டருக்கு 250 டன்களும், கோ. 3 இரகத்தில் 120 டன்களும், கோ.5 இரகத்தில் 250 டன்களும், கோ.8 இரகத்தில் 160 டன்களும், கோ.7 இரகத்தில் 225 டன்களும் மகசூல் கிடைக்கும்.
பயிர் பாதுகாப்பு :: பப்பாளி பயிரைத் தாக்கும் நோய்கள்
தண்டு அழுகல் / தூர் அழுகல் நோய்
அறிகுறிகள்
- மேற்பரப்பில் உள்ள தண்டு பகுதி, நீரில் ஊரியதால் தண்டு பிளவு ஏற்பட்டுக் காணப்படும்
- நோய் பாதிக்கப்பட்ட பகதி பழுப்பு அல்லது கருமை நிறத்தில் மாறியும் மற்றும் அழுகிவிடும்
- இலை மஞ்சள் நிறத்தில் மாறி, உதிர்ந்து விடும்
- நோய் பாதிக்கப்பட்ட செடி, மேல் பகுதி உதிர்ந்தும், மறைந்துவிடும்
கட்டுப்பாடு
- கட்டுப்படுத்த, தைரம் அல்லது கேப்படன் 4கி/கிகி அல்லது க்லோரேத்னால் மூலம் விதை நேர்த்தி செய்யலாம்
- காப்பர் ஆக்ஷிக்லோரைட் 0.25% அல்லது போர்டியாக்ஸ் கலவை 1% அல்லது மெட்டல் ஆக்ஸி 0.1% போன்ற கலவைகளை மண்ணில் ஊற வைக்கவும்
பப்பாளி மாவுப்பூச்சி: பாராகாக்கஸ் மார்ஜினேட்டஸ்
உலகில் பல வகையான மாவுப் பூச்சிகள் உள்ளன. அவற்றில் ஒரு வகையான மாவுப்பூச்சிகள்தான் பாராகாக்கஸ் மார்ஜினேட்டஸ் (பாராகாக்கஸ் மார்ஜினேட்டஸ்) எனும் பப்பாளி மாவுப்பூச்சி. இப்பூச்சியின் தாக்குதல் தமிழ்நாட்டில் முதன் முதலாக ஜுலை 2008 ஆம் ஆண்டு கோயமுத்தூர் பகுதியில் பப்பாளியில் கண்டறியப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்திலும் இப்பூச்சியின் தாக்குதல் காணப்படுகிறது. இப்பூச்சிகள் பப்பாளியை மட்டும் அல்லாது மல்பரி, மரவள்ளி, பருத்தி, கொய்யா, கத்தரி, தக்காளி, செம்பருத்தி, செவ்வந்தி, போன்ற பயிர்களையும், களைச்செடிகளையும் தாக்குகிறது எதிர்காலத்தில் மக்காச்சோளம் போன்ற பிற பயிர்களையும் தாக்கக்கூடும். காற்று, பறவைகள், விலங்குகள், தண்ணீர் மற்றும் மனிதர்களால் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எளிதில் பரவக்கூடும்.
மாவுப்பூச்சி வேகமாக பரவக் காரணங்கள்
இப்பூச்சியின் உடல் முழுவதும் மெழுகு மற்றும் மாவு போன்ற வெள்ளை நிறப் பொருளால் கவரப்பட்டிருப்பதால் இதனை எளிதில் கட்டுப்படுத்த முடியவில்லை.
அயல்நாட்டு பூச்சி என்பதாலும் அதற்கு இயற்கை எதிரிகள் இல்லாத காரணத்தாலும் இப்பூச்சிகள் மிக வேகமாக பரவி வருகிறது. ஒரு வருடத்தில் இம்மாவுப்பூச்சி 15 முறை இனப்பெருக்கம் செய்கிறது. மேலும் இவை அதிக முட்டையிடும் திறன் கொண்டது. ஒரு பூச்சி 500 முதல் 600 முட்டைகள் ஒரு வருடத்தில் இடும். இதனால் இதன் எண்ணிக்கை அதிக அளவில் பெருகி மிகுந்த சேதாரத்தை ஏற்படுத்துகிறது.
மாவுப்பூச்சி தாக்குதலின் அறிகுறிகள்
- இலையின் அடிப்பகுதி குருத்து, கிளைகள் மற்றும் தண்டுப் பகுதிகளில் வெள்ளையாக அடைபோல மாவுப்பூச்சிகள் படர்ந்திருக்கும்.
- சிவப்பு மற்றும் கருப்பு எறும்புகளின் நடமாட்டம் இருக்கும்.
- பளபளப்பான ஒட்டும் தன்மை கொண்ட தேன் போன்ற கழிவுகளும் அதன்மேல் கரும்பூசண வளர்ச்சியும் காணப்படும் அதிக தாக்குதலில் செடிகள் இலைகள் வாடி கருகிவிடும்.
- இப்பூச்சிகளை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை முறையை கடைப்பிடிக்க வேண்டும்.
- களைகளை அகற்றி வயல்களை சுத்தமாக வைக்க வேண்டும்
- பூச்சிகள் தாக்கப்பட்ட செடிகள் மற்றும் களைச்செடிகளை பூச்சிகள் அதிகம் பரவாமல் பிடுங்கி அழிக்கவும்.
இயற்கை வழி மேலாண்மை
அசெரோபேகஸ்பப்பாயே @ 100 ஒட்டுண்ணிகளை / வயலில் / கிராமத்தில் அல்லது தொகுதியில் வெளியிடவும்.
உயிரியல்முறையில் பப்பாளி மாவுப்பூச்சிக் கட்டுப்பாடு : வெற்றிக்கதை
தமிழ்நாட்டில், ஜூலை 2008-ம் ஆண்டு முதல் பப்பாளி மாவுப்பூச்சி, (பாராகாக்கஸ்மார்ஜினேட்டஸ்) பப்பாளி, முசுக்கொட்டை, மரவள்ளி, காட்டாமணக்கு, காய்கறிப்பயிர்கள், பழப்பயிர்கள், பருத்தி மற்றும் பூக்கள் ஆகியவற்றில் மிகஅதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. மேலும் பலவகை களைச்செடிகளையும் தாக்கியது. ஓம்புயிரி வளர்ப்பு, ஒட்டுண்ணி உற்பத்தி நுட்பங்கள், ஒட்டுண்ணிகளை பாதுகாப்பாக கொண்டுச் செல்லுதல் மற்றும் ஒட்டுண்ணியை வெளியிடும் வழிமுறை போன்ற தரப்படுத்தப்பட்ட செயல்முறைகளைக் கொண்ட பேரளவு உற்பத்தி தொழில்நுட்பத்தினால் அதிக அளவு அயல்நாட்டு ஒட்டுண்ணி, (அசெரோபேகஸ்பப்பாயே) உற்பத்தி செய்யப்பட்டது. மாவுப்பூச்சி ஒட்டுண்ணியின் பேரளவு உற்பத்தியானது, கடந்த 2010-ம் ஆண்டு முதல் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்திலுள்ள வேளாண்மை மற்றும் தோட்டாக்கலை கல்லூரி, 36 ஆராய்ச்சி நிலையம் மற்றும் 14 வேளாண் அறிவியல் நிலையமத்தில் ஒரே சமையத்தில் மேற்கொள்ளப்பட்டு தமிழகம் முழுவதும் வெளியிடப்பட்டது.
தோராயமாக 6.25 மில்லியன் ஒட்டுண்ணிகளை பெருக்கி, ஒரு தொகுதி அல்லது கிராமத்திலுள்ள ஒரு வயலுக்கு 100 ஒட்டுண்ணி என்ற அளவில் தமிழகம் முழுவதும் மாவுப்பூச்சி பாதிப்புக்குள்ளான கிராமங்களிலுள்ள விவசாய நிலங்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. தமிழ்நாட்டில், பப்பாளி, முசுக்கொட்டை மற்றும் மரவள்ளி போன்ற பயிர்களுக்கு, ஒரு வருடத்தில் ரூ.435 கோடி இழப்பை குறைத்து 2010-ம் ஆண்டு வெற்றிகரமான பாரம்பரிய உயிரியல்முறைக் கட்டுப்பாட்டுக்கு மிக சிறந்த எடுத்துக்காட்டாக பப்பாளி மாவுப்பூச்சியின் கட்டுப்பாடு அமைத்துள்ளது. மேலும் இரசாயன பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தாமல் தவிர்த்ததன் மூலம் ரூ. 244.5 கோடி சேமிக்கப்பட்டுள்ளது.
சாம்பல் நோய்
அறிகுறிகள்
- இலையின் மேற்பரப்பில் மைசிலியம் வளர்ந்திருக்கும் மற்றும் பூக்களின் கம்புகளில் மற்றும் பூக்களிலும் காணப்படும்
- இலைகள் பழுப்பு நிறமாக பாதிக்கப்பட்டு இருக்கும்
கட்டுப்பாடு
- டைனோகேப் 0.05% அல்லது கந்தகச் சத்து 0.25% அல்லது சைனோமேதியோனேட் 0.1% தெளிக்கவும்
வளைப்புள்ளி நோய் : பப்பாளி வளைப்புள்ளி நச்சுயிரி
அறிகுறிகள்:
- பச்சை இலைகளின் இந்நோயின் தாக்கத்தினால் இலைகளின் நரம்பு தெளிவாகவும் சுருங்கியும் மற்றும் திசுக்களின் மடல்கள் சுருங்கிக் காணப்படும்.
- விளிம்பு இலைகள் மற்றும் தொலைவான பகுதி இலைகளும் சுருண்டு கீழ்நோக்கி காணப்படும் மற்றும் இந்நோய் தேமல் பல்வண்ண புள்ளியமைப்புடனும், கரும் பச்சைக் கொப்பளம் போன்றும் இலைகள் உருக்குளைவினால் செடியின் வளர்ச்சி குன்றிவிடும்.
- பழங்களில் வளைப்புள்ளிகள் காணப்படும். இவ்வாறு ஆரம்ப நிலையில் பாதிக்கப்பட்டவை பழங்கள் உருவாவதில்லை
கட்டுப்பாடு:
- பூச்சிக் கொல்லி மூலம் பராமரிக்கப்பட்ட பப்பாளி நாற்றுகள் பயன்படுத்தவும்
- நாற்றுகளை நோய் தாக்காதவாறு செடிகைள பாதுகாத்துக் கொள்ள வேண்டும்
- பப்பாளி பயிரிடுவதற்கு முன்பாக தடை பயிராக சோளம் மற்றும் மக்காச்சோளம் பயிரிடவும்
- பாதிக்கப்பட்ட செடிகளை உடகடியாக அகற்றி விட வேண்டும்
- பூசணி போன்ற கொடி வகைகளை பயிரிடக் கூடாது
இலை சுருண்டல் நோய்: நிக்கோசியனா நச்சுயிரி 10
அறிகுறிகள்:
- இந்நோயின் தாக்கத்தினால் இலைகள், சுருங்கி, சுருண்டும், உருக்குழைந்தும் மற்றும் விளிம்பின் இலைகள் கீழ்நோக்கியும், அடர்த்தியான நரம்புகளுடன் காணப்படும்.
- இலைகள் தோல் போன்றும், உருவமின்றியும் மற்றும் நொறுங்கிய வாறு காணப்படும் செடியின் வளர்ச்சி குறைந்துவிடும். பாதிக்கப்பட்ட செடிகள் பூக்கள் மற்றும் பழங்களை வளர்ச்சி இருக்காது.
கட்டுப்பாடு:
- பாதிக்கப்பட்ட செடிகளை வேறுடன் அகற்றவும்
- தக்காளி மற்றும் புகை இலை செடிகளை பப்பாளியுடன் பயிரிடக்கூடாது
- பூச்சிக்கொல்லி மருந்துகரள அவ்வப்போது தெளிக்க வேண்டும்
ஆன்த்ராக்நோஸ்: கொலிட்டோட்ரைக்கம் க்ளோயேஸ்போரியாட்ஸ்
அறிகுறிகள்:
- பாதிக்கப்பட்ட இலை மற்றும் தண்டுகளில் பாலின புள்ளிகள் காணப்படும். ஆரம்ப நிலையில், பழங்களின் நிறங்கள் மாறி பழுப்பு நிறத்திலும் அதனின் தோல்கள் வட்ட வடிவத்தில் தோன்றும் மற்றும் சுருங்கிவிடும்.
- ஒருங்கிணைந்து, அடர்த்தியான மைசிலியம், விளிம்புகளில் புள்ளிப் போன்று வளர்ந்து காணப்படும்
- ஈரப்பதமான நிலையில் இளஞ்சிவப்பு அரக்குப் போன்ற சிதலில் காணப்படும். பழங்கள் சுருங்கியும் மற்றும் உருவமின்றிக் காணப்படும்
பாதிக்கப்பட்ட பழம்:
- பழங்கள் நிலத்தின் மூலம் பாதிக்கப்படுகின்றன. மழைக்காலங்களில் மழை நீர் தெளிக்கப்படுவதால் கொனிடியா போன்ற நோய்களால் பழங்கள் பாதிக்கப்படுகின்றன.
கட்டுப்பாடு:
- கார்பென்டாசிம் 0.1% அல்லது க்ளோரோத்தனோயில் 0.2% அல்லது மேன்கோசெப் 0.2% தெளிக்கவும்.
பப்பாளியின் பயன்கள்
- பப்பாளிக் காயை கூட்டாக செய்து உண்டு வர குண்டான உடல் படிப்படியாக மெலியும்.
- பப்பாளிப் பாலை, பசும்பாலுடன் கலந்து சேற்றுப் புண்கள் மேல் தடவி வர புண்கள் குணமடையும்.
- பல் சம்மந்தமான குறைபாட்டிற்கும், சிறுநீர்ப்பையில் உண்டாகும் கல்லை கரைக்கவும் பப்பாளி சாப்பிட்டால் போதும். நல்ல பலன் கிடைக்கும்.
- பப்பாளிக்காயை சாறு அரைத்துக்குடித்தால் வயிற்றில் உள்ள புழுக்கள் வெளியேறும்.
- பப்பாளி விதைகளை அரைத்து தேள் கொட்டிய இடத்தில் தடவினால் வலி, விஷம் இறங்கும்.
- அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வர உடல் வளர்ச்சி துரிதமாகும். எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும்.
- அடிக்கடி பப்பாளி பழத்தினை சாப்பிடுபவர்களுக்கு நோய் தாக்கும் வாய்ப்பு குறைவு. பப்பாளி பழத்தில் இயற்கையாகவே விஷக்கிருமிகளை கொல்லும் ஒரு வகை சத்து இருப்பதால் இதனை சாப்பிடுபவர்களுக்கு நோய் தாக்குதல் குறைவு.
Dear friend, you mentioned all points are nice, it’s a useful information for everyone.keep it up….
பப்பாளி பிஞ்சில் உதிர்வது ஏன்? அந்த குறைபாட்டை சரிசெய்யும் வழி என்ன ஐயா?
இது நம்முடைய குழு. இங்கு உங்கள் சந்தேகங்களை கேட்கலாம்
https://www.facebook.com/groups/agriculturetripiyarkaivivasayam
90 நாட்கள் வயதுடைய பப்பாளி செடிக்கு என்ன உரமேலாண்மை செய்யவேண்டும்