- பாக்கு மரத்தில் இருந்து கிடைக்கும் கொட்டையில் இருந்து பாக்கு பெறப்படுகிறது.
- பாக்கானது துவர்ப்பு சுவையினைக் கொண்டது.
- இது ஆசிய மற்றும் கிழக்கு ஆப்பிரிக்கப் பகுதிகளில் அதிகம் விளைகின்றது.
- தற்போது பரவலாக தமிழ்நாட்டில் பயிரிடப்பட்டு வருகிறது.
- இப்பாக்கானது தமிழர்களின் சடங்குகளிலும், விழாக்களிலும் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.
பாக்கு மரம் எப்படி பயிரிடுவது…?
இரகங்கள் :
பாக்கு மரம் – மங்களா, சுபமங்களா, மோஹித்‚ சும்ருதி (அந்தமான்), ஹயர்ஹல்லி குட்டை இரகம், வி.டி.எல்.ஏ.ஹச் – 1, 2 மற்றும் தீர்த்தஹல்லி குட்டை இரகம் ஆகிய இரகங்கள் சாகுபடிக்கு ஏற்ற இரகங்கள் ஆகும்.
பருவம்
ஜுன் – டிசம்பர் மாதங்களில் நடவு செய்யலாம்.
மண்
பொதுவாக எல்லா வகையான மண் வகைகளிலும் சாகுபடி செய்யலாம். மண் நல்ல வடிகால் வசதியுடன் இருக்கவேண்டும். கடல் மட்டத்திலிருந்து சுமார் 1000 மீட்டர் உயரம் வரை உள்ள இடங்களில் சாகுபடி செய்யலாம்.
நாற்று தயாரித்தல்
நன்கு முதிர்ந்த தாய் மரங்களிலிருந்து விதைகளைச் சேகரிக்க வேண்டும். விதைகளை 5-6 செ.மீ இடைவெளியில் மணல் பரப்பிய நாற்றங்காலில் விதைக்காம்புகள் மேல் நோக்கி இருக்குமாறு நடவு செய்யவேண்டும். விதைகள் முளைத்து 2 அல்லது 3 இலைகள் வந்தவுடன், நாற்றுகளைப் பிடுங்கி 30 x 50 செ.மீ அளவுள்ள மண்கலவை நிரப்பிய பாலித்தீன் பைகளில் நடவு செய்யவேண்டும். பிறகு நாற்றுகளை நிழலில் வைத்து 12-18 மாதங்கள் வளர்க்கவேண்டும். இவ்வாறு வளர்க்கப்பட்ட நாற்றுகளை 30 செ.மீ இடைவெளியில் இரண்டாம் நாற்றங்காலில் நடவு செய்து வளர்க்கவேண்டும். நாற்றுகளுக்கு தொடர்ந்து நீர்ப் பாய்ச்ச வேண்டும்.
நடவு செய்தல்
அடர்த்தியான, உயரம் குறைவான மற்றும் இலைகள் அதிகமுள்ள நாற்றுகளைத் தேர்வு செய்யவேண்டும். நாற்றுகள் குறைந்தது ஒரு ஆண்டு முதல் இரண்டு ஆண்டு வயதுடையவையாக இருக்க வேண்டும். தேர்வு செய்யப்பட்ட நாற்றுகளை 90 செ.மீ நீளம், அகலம், ஆழம் உள்ள குழிகளில் நடவேண்டும். குழிகளுக்கு இடையே உள்ள இடைவெளி 27.5 செ.மீ இருத்தல்வேண்டும். நாற்றுகளின் முக்கால் பாகம் நீளத்திற்கு மண் அணைக்கவேண்டும். நாற்றுகளைத் தென்மேற்குத் திசையிலிருந்து படக்கூடிய சூரிய ஒளியிலிருந்து தடுக்கப்பட வேண்டும். இல்லையெனில் இலைகளில் சூரிய கருகல் உண்டாகும். எனவே நாற்றுகளை நடுவதற்கு முன் தென் மற்றும் மேற்கு திசைகளில் விரைவில் வளரக்கூடிய நிழல் தரும் மரங்களை வளர்க்கவேண்டும். வாழை போன்ற பயிர்களை ஊடுபயிராக நட்டு நிழல் கொடுக்கலாம். ஒரு கையளவு தொழுவுரத்தை இட்டு, தண்ணீர் பாய்ச்ச வேண்டும். பாக்கு மரம் நன்கு வளர தொடர்ந்து நீர்ப்பாய்ச்சவேண்டும்.
நீர் நீர்வாகம்
நவம்பர் – பிப்ரவரி மாதங்களில் வாரம் ஒரு முறையும், மார்ச் – மே மாதங்களில் நான்கு நாட்களுக்கு ஒரு முறையும் நீர் பாய்ச்ச வேண்டும்.
பாக்கு மரம் உரங்கள்
4-ம் மாதம் ஒவ்வொரு மரத்துக்கும் இரண்டு கையளவு சுண்ணாம்புப் பொடி இட்டு தண்ணீர் பாய்ச்ச வேண்டும். 7-ம் மாத இறுதியில், ஒவ்வொரு மரத்தின் அடியிலும் வேப்பிலையைப் பரப்பி, இரு கையளவு தொழுவுரம் இட்டு தண்ணீர் பாய்ச்ச வேண்டும். 9-ம் மாதம் இலைக்கழிவுகளைப் பரப்பி இரு கையளவு தொழுவுரம் இட வேண்டும். அதற்குப் பிறகு, 6 மாதங்களுக்கு ஒரு முறை ஒவ்வொரு மரத்துக்கும், 5 கிலோ தொழுவுரம் இட வேண்டும்.
செயற்கை உரங்களை மரம் ஒன்றுக்கு (5 வயதும் அதற்கு மேலும்) தொழு உரம் 10 முதல் 15 கிலோ, 100 கிலோ தழைச்சத்து, 40 கிலோ மணிச்சத்து, 150 கிலோ சாம்பல் சத்து இட வேண்டும். ஐந்து வயதுக்கு குறைவான மரங்களுக்கு குறிப்பிட்டுள்ள உர அளவில் பாதி இட வேண்டும்.
பாக்கு மரம் பாதுகாப்பு முறைகள்
களை நிர்வாகம்
வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை மண்வெட்டி கொண்டு கொத்தி களை நீக்கம் செய்யவேண்டும்.
பயிர் பாதுகாப்பு
குருத்துப் பூச்சிகள்
அவ்வப்போது, வேப்பம் பிண்ணாக்கு இட்டு வந்தால், பூச்சிகள் தாக்குவதில்லை. குருத்துப் பூச்சிகள் தாக்கினால், இரண்டு லிட்டர் தண்ணீரில் 100 மில்லி புகையிலைக் கரைசலைக் கலந்து தெளிக்க வேண்டும் (அரை கிலோ புகையிலையை நான்கு லிட்டர் தண்ணீரில் போட்டு, அது ஒரு லிட்டராக சுண்டும் வரை கொதிக்க வைத்து வடிகட்டினால், புகையிலைக் கரைசல் தயார்).
சிலந்திபூச்சி
இதனைக் கட்டுப்படுத்த டைகோபால் 18 இசி மருந்தை ஒரு லிட்டர் நீருக்கு 2.5 மில்லி கலந்து தெளிக்கவேண்டும்.
ஸ்பின்டில் வண்டு
மிதைல் பாரத்தியான் 1.3 D மருந்தை லிட்டருக்கு 2.5 கிராம் (அ) டைமெத்தோயேட் 1.5 மி.லி, ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
பாளைப்புழுக்கள்
இதனை கட்டுப்படுத்த மிதைல் பாரத்தியான் 20 EC 2 மிலி மருந்தை, ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
நூற்புழு
சூடோமோனாஸ் ஃப்ளுரசன்ஸ் மற்றும் பேசிலஸ் சப்டிலிஸை மண்ணில் இடுவதன் மூலம் வேர் முடிச்சு நூற்புழு மற்றும் அவரை விதை வடிவ நூற்புழுவை கட்டுப்படுத்தலாம்.
காய் அழுகல் அல்லது மாகாளி நோய்
நோய் தாக்கப்பட்ட பகுதியை நீக்கிவிட்டு அந்த இடத்தில் 10 சதவீதம் போர்டோக் கலவையை தடவி விடுவதன் மூலம் இதனை கட்டுப்படுத்தலாம்.
அடித்தண்டு அழுகல்
கடுமையாக தாக்கப்பட்ட மரங்களை வெட்டி அழித்துவிடவேண்டும். மரம் ஒன்றிற்கு ஒரு வருடத்திற்கு வேப்பம் பிண்ணாக்கு 2 கிலோ மண்ணில் இடுவதை தொடர்ந்து 1.5% டிரைடிமார்ஃப்யை 125 மி.லி மூன்று மாத இடைவெளியில் வேர் மூலம் செலுத்த வேண்டும். 1% போர்டாக்ஸ் கலவையை மண்ணில் தெளிப்பதன் மூலம் இதனை கட்டுப்படுத்தலாம்.
இலைப்புள்ளி நோய்
1% போர்டாக்ஸ் கலவை (அ) 0.2% டைதேன் M 45 யை இலைவழியாக தெளித்து கட்டுப்படுத்தலாம்.
பாக்கு விரிசல் நோய்
ஒரு லிட்டர் தண்ணீரில் 2 கிராம் போராக்ஸ் கலந்து தெளிக்க வேண்டும்.
அறுவடை
நட்ட 5 ஆண்டுகளில் பாக்கு மரம் காய்ப்புக்கு வரும். கால் பங்கு அளவு பழுத்த பழங்களை அறுவடை செய்யவேண்டும். ஒரு வருடத்தில் மூன்று முதல் ஐந்து முறை அறுவடை செய்யலாம். அறுவடை எண்ணிக்கையானது பயிரிடும் இடம் மற்றும் பருவத்திற்கு ஏற்ப மாறுபடும்.
மகசூல்
சராசரியாக ஒரு எக்டருக்கு 1250 கிலோ வரை கிடைக்கும்.
ஊடுபயிர்
தென்னை மற்றும் பாக்கு ஆகியவற்றை கலப்பு பயிராக பயிரிடலாம்.
பாக்கு மரம் பயன்கள்
- துவர்ப்பு சுவை அதிகம் கொண்டுள்ள பாக்கில் டேனின் என்ற மூலப்பொருள் உள்ளது. மேலும், புரோசைனிடின் என்ற வேதிப்பொருளும் உள்ளன. இவை தனித்த அயனிகளை அழிக்கும் செயல் புரிகின்றன. குறிப்பாக, ஞாபக மறதி மற்றும் அதிர்ச்சி ஏற்படுத்தும் மூளை நரம்புச் சிதைவு வேதிம நச்சுக் காரணிகளை சிதைத்து உரிய பாதுகாப்பு அளிக்கின்றது.
- பாக்கின் மூலப்பொருட்கள் வயதாகும் நிலையில் ஏற்படும் தோல் சுருக்கத்தைப் போக்க அழகு சாதனப் பொருட்களில் பயன்படுத்தப்படுகின்றது.
- குருத்து இலையை இடித்துச் சாறெடுத்து சம அளவு நல்லெண்ணெய் சேர்த்து கொதிக்கவைத்து இளஞ்சூட்டில் இடுப்பில் தடவி வர இடுப்புவலி நீங்கும்.
- குடற்பகுதியில் மிகுந்த கொலஸ்ட்ரால், குளுக்கோஸ் உறிஞ்சுதலை வெகுவாகத் தடுக்கின்றது.
Sivakumar.E says
Very good article sir
Navinkumar V says
Thanks Brother
G. Luxmanasri says
very very usefull information sir.
sir, we can use chicken farm waste for pakku sakupaddy.
G. Luxmanasri says
no web site it is home garden in jaffna, Srilankan