பீன்ஸ் கொடிவகையை சேர்ந்த காய்கறிகளில் ஒன்றாகும். தென் அமெரிக்க நாடான பெரு தான் இதன் தாயகமாக கருதப்படுகிறது. பின்னர் ஐரோப்பியர்களின் மூலமாக மற்ற நாடுகளுக்கும் இது பரவியதாக கருதப்படுகிறது.
எனவே ஐரோப்பியர்களால் ஆளப்பட்ட இந்தியாவிலும் இதன் சாகுபடி பரவியது. தற்பொழுது உலக அளவில் சீனா மற்றும் இந்தோனேசிய நாடுகளுக்கு அடுத்தபடியாக அதிக அளவில் பீன்ஸ் உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று.
மலை பிரதேசங்களில் அதிக அளவில் பயிரிடப்படுகிறது.
பயிரிடும் முறை:
- மலைப்பகுதி மற்றும் சமவெளி பகுதிகளில் வளரும் வகையில் இரண்டு ரகங்கள் உள்ளது.
- ஏற்காடு 1 , ஊட்டி 1 ஆகிய ரகங்கள் மலை பிரதேசங்களில் வளரும் ரகங்கள் ஆகும்.
- அர்கா கோமல், மற்றும் பிரீமியர் ரகங்கள் சமவெளி பகுதிகளில் பயிரிடப்படும் பீன்ஸ் ரகங்கள் ஆகும்.
- ஏற்காடு 1 , ஊட்டி 1 ஆகிய ரகங்கள் விளைவதற்கு பிப்ரவரி – மார்ச் மாதம் ஏற்ற பருவம் ஆகும்.
- அர்கா கோமல், மற்றும் பிரீமியர் ரகங்கள் விளைவதற்கு அக்டோபர் – நவம்பர் மாதங்கள் சிறந்த பருவங்கள் ஆகும். குளிர்ந்த சீதோஷண பருவத்தில் பீன்ஸ் விளைச்சல் அமோகமாக இருக்கும்.
- பீன்ஸ் சாகுபடி வண்டல் மண்ணில் அமோகமாக இருக்கும். மண்ணின் கார – அமில தன்மை 5 -6 ஆக இருக்க வேண்டும்.
- பயிரிடும் நிலத்தை நன்கு உழுது அதில் தொழு உரத்தை இட்டு நிலத்தை சமன் படுத்த வேண்டும். பின்பு விதையை 30 செ.மீ இடைவெளியில் 3 செ.மீ ஆழத்தில் நட வேண்டும்.
- ஒரு ஹெக்டர்க்கு மலைப்பிரதேசங்களில் 80 கிலோ விதையும், சமவெளி பகுதிகளில் 50 கிலோ விதையும் பயன்படுத்தி பயிரிட வேண்டும்.
- பயிரிட்ட பின்பு உடனடியாக நீர் பாய்ச்ச வேண்டும். பின்பு வாரத்திற்கு ஒருமுறை நீர் பாய்ச்சினால் போதுமானது.
- அடிக்கடி தொழுஉரம் வைத்து தேவையற்ற கலைகளை நீக்கி பராமரித்தாலே அதிக மகசூல் பெறலாம்.
- 100 நாட்களில் பீன்ஸ் அறுவடைக்கு தயாராகும். முதிர்ந்து விடாமல் இளசாக இருக்கும் பொழுது அறுவடை செய்வது நல்லது.

பீன்ஸ் -ன் பயன்கள்:
- பீன்ஸ் வேகவைத்த நீரில் முகத்தை கழுவும் பொழுது முகம் பளபளக்கும்.
- தொண்டைப்புண்,இருமல் மற்றும் கைகால் நடுக்கத்தை கட்டுப்படுத்தும்.
- நீரிழிவு நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் சக்தி பீன்ஸ்க்கு உண்டு.
- இதயஅடைப்பு மற்றும் தேவை இல்லாமல் ரத்த நாளங்களில் சேரும் கொழுப்பை கரைக்கவும் பீன்ஸ் உதவுகிறது.
தயவு செய்து உங்களுடைய கருத்துக்களை கீழே உள்ள கமெண்ட் ஏரியாவில் பதிவிடவும். தவறுகளை சுட்டிக்காட்டி, உங்கள் கருத்துக்களை பரிமாறி இவ்வலைத்தளத்தை திறன்பட நடத்த உதவவும்.
Leave a Reply