புளிச்சக்கீரை புளிப்புச்சுவை மிகுந்த கீரை வகைகளில் ஒன்று.
புளிச்சக்கீரையில் வெள்ளைப்பூ புளிச்சை மற்றும் சிவப்புபூ புளிச்சை என இரு வகை உள்ளது.
சிவப்புபூ புளிச்சைகீரையானது, வெள்ளைப்பூ புளிச்சைக்கீரையை விட புளிப்பு சற்று அதிகமாக இருக்கும்.
புளிச்சக்கீரை இந்தியாவின் அனைத்து பகுதிகளிளும் விலைகின்ற மிதவெப்ப மற்றும் வெப்பமண்டல கீரையாகும்.
வெப்பத்தை தாங்கி, பல்வேறு மண் வகைகளிலும் நன்கு வளரும் இயல்பை உடையது.
புளிச்சக்கீரை ஆந்திரா பகுதியில் கோங்குரா என்ற பெயரில் பிரசித்தி பெற்றது.
எப்படி பயிரிடுவது…?
இரகங்கள்
செம்புளிச்சக்கீரை, கரும்புளிச்சக்கீரை ஆகிய இரகங்கள் உள்ளன.
பருவம்
சித்திரை, ஆடி, மார்கழி, மாசிப்பட்டம் சாகுபடி செய்ய ஏற்ற பருவம் ஆகும்.
மண்
நல்ல மண்ணும், மணலும் கலந்த சற்றே அமிலத்தன்மை கொண்ட இருமண் பாட்டு நிலம், செம்மண் நிலம் கீரை சாகுபடிக்கு உகந்தது.
விதையளவு
ஒரு எக்டருக்கு 2.5 கிலோ விதைகள் வீதம் தேவைப்படும்.
நிலம் தயாரித்தல்
நிலத்தை 2 அல்லது 3 முறை உழவு செய்ய வேண்டும். ஏக்கருக்கு 5 டன் தொழு உரம் கலந்து பரவலாகக் கொட்டி உழவு செய்து மண்ணை பண்படுத்த வேண்டும். பிறகு தேவையான அளவு பாத்திகள் அமைக்க வேண்டும்.
விதைத்தல்
விதைகளை தயார் செய்துள்ள பார்களின் பக்கவாட்டில் ஊன்ற வேண்டும்.
நீர் நிர்வாகம்
விதைகளை விதைத்தவுடன் நீர்ப்பாய்ச்ச வேண்டும். விதைத்த மூன்றாம் நாள் உயிர்த் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். பின் நான்கு நாட்களுக்கு ஒருமுறை நீர் பாய்ச்ச வேண்டும்.
உரங்கள்
ஜீவாமிர்தக் கரைசலை மாதம் இரண்டு முறை பாசன நீரில் கலந்து விடவேண்டும். இதனால் கீரைகளின் வளர்ச்சி சீராக இருக்கும்.
பாதுகாப்பு முறைகள்
களை நிர்வாகம்
ஒரு வார காலத்தில் விதைகள் முளைக்க ஆரம்பிக்கும். 10-15 நாட்கள் கழித்து களை எடுக்க வேண்டும். அவ்வப்போது களைகளை நீக்கி நிலத்தினை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
பயிர் பாதுகாப்பு
பூச்சி தாக்குதல்
பூச்சிகளின் தாக்குதல் காணப்பட்டால் அதனை சமாளிக்க நொச்சி, பிரண்டை, சோற்றுக்கற்றாழை ஆகிய மூன்றையும் சமமாக எடுத்து அரைத்து, ஒரு லிட்டர் மாட்டுச் சிறுநீரில் கலந்து ஒரு நாள் வைத்திருக்க வேண்டும். பின் 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி கரைசல் என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும்.
அறுவடை
இக்கீரையை 5 செ.மீ உயரம் விட்டு அறுவடை செய்ய வேண்டும். குறிப்பிட்ட இடைவெளியில் கீரைகளை முற்றி விடாமல் அறுவடை செய்ய வேண்டும்.
பயன்கள்
- இரும்புச்சத்தும், சுண்ணாம்புச்சத்தும் நிறைந்த புளிச்சக்கீரையை சாப்பிடுவதால் இரத்தம் தூய்மை அடையும்.
- உடல் வெப்பத்தை குறைத்து சமப்படுத்துவதில் புளிச்ச கீரை முக்கிய பங்கு வகிக்கிறது.
- வாதநோய் உள்ளவர்கள் இரண்டு, மூன்று நாட்களுக்கு ஒருமுறை புளிச்சக்கீரையை சமைத்து சாப்பிட்டு வந்தால் வாத நோய் தணிந்துவிடும்.
- மஞ்சள் காமாலைக்கு ஆளானவர்கள் கைப்பிடி அளவு புளிச்சகீரையை அரைத்து சாறு எடுத்து மோருடன் கலந்து பருகிவர மஞ்சள் காமாலை குணமடையும்.
- சொறி, சிரங்கு உள்ளவர்கள் அதற்கான மேல்பூச்சு மருந்து போட்டு வரும் நேரங்களில் இந்த புளிச்சக்கீரையை சமைத்து சாதத்துடன் சேர்த்துச் சாப்பிடுவது குணம் பெறுதலை விரைவுபடுத்தும்.
- புளிச்ச கீரையின் கனிகளின் சாறுடன் சர்க்கரை மற்றும் மிளகு சேர்த்து சாப்பிட மலச்சிக்கல் குணமாகும்.
Leave a Reply