நாம் அனைவரும் அன்றாட காய்கறிகளை நமது வீட்டு மாடியில் பயிர் செய்யலாம். இவ்வாறு பயிர் செய்வதினால் நமக்கு உடல் நலத்தை காப்பதுடன் இயற்கை முறையில் விளைந்த காய்கறிகளை உண்ட திருப்தியும் ஏற்படும். எனவே நம்மால் முடிந்த அளவுக்கு மாடித்தோட்டங்களை ஏற்படுத்தலாம். மாடித்தோட்டத்தில் கருணைக் கிழங்கு பயிரிடும் முறை யை இங்கு காணலாம்.
தேவையான பொருட்கள்
- Grow Bags அல்லது Thotti
- அடியுரமாக இட மணல், தென்னை நார்க்கழிவு, மண்புழு உரம், செம்மண், பஞ்சகாவ்யா.
- விதைக்கிழங்குகள்
- பூவாளி தெளிப்பான்
தொட்டிகள்
அடியுரமாக ஒரு பங்கு மண், ஒரு பங்கு தென்னை நார்க்கழிவு, ஒரு பங்கு இயற்கை உரம் ஆகியவற்றை கொண்டு தொட்டியை நிரப்ப வேண்டும்.
கிழங்குகள் எளிதாக வளரவும், மண் இறுகிப்போகும் பிரச்சனை இல்லாமல் இருக்கவும் தென்னை நார்க்கழிவுகளை அடியுரமாக சேர்க்க வேண்டும்.
விதைத்தல்
நேரடியாகவே விதைக்கிழங்கை தயார் செய்துள்ள உரக்கலவையில் புதைத்து வைக்க வேண்டும். ஒவ்வொரு செடிக்கும் ஒரு அடி இடைவெளி இருக்குமாறு நடவு செய்ய வேண்டும். பத்து நாட்களில் முளைக்க ஆரம்பித்து விடும்.
நீர் நிர்வாகம்
விதைத்தவுடன் பூவாளி கொண்டு நீர் தெளிக்க வேண்டும். தினமும் காலை அல்லது மாலை வேளையில் தண்ணீர் தெளிக்க வேண்டும்.
அதிகப்படியான நீர் இருந்தால் வெளியேறுவதற்கு பைகளின் அடியில் இரு துளைகள் இட வேண்டும். நீர் தேங்கினால் பூஞ்சாண நோய்கள் வர வாய்ப்புள்ளது. மழை நீர் தேங்கினாலும் வெளியேற்ற வேண்டும்.
உரங்கள்
சமையலறை கழிவுகளை மக்கச்செய்து உரமாக போடலாம். மீன், மாமிசம் கழுவிய தண்ணீரை ஒரு நாள் வைத்திருந்து செடிகளுக்கு ஊற்ற வேண்டும். இது சிறந்த வளர்ச்சி ஊக்கியாக செயல்படும்.
தண்ணீருடன் பஞ்சகாவ்யா கலந்து வாரம் ஒரு முறை ஊற்ற வேண்டும்.
பாதுகாப்பு முறைகள்
சமையலறையில் வீணாகும் அனைத்தையும் மட்கச்செய்து உரமாக பயன்படுத்தலாம். இயற்கை இடுபொருட்களை பயன்படுத்துவதால் நோய் தாக்குதல் இருக்காது
இலைகளில் பூச்சி தாக்குதல் காணப்பட்டால் வேப்பந்தூளை தண்ணீரில் கலந்து ஊற்ற வேண்டும். வேறு எந்த ஒரு பாதுகாப்பு முறையும் இதற்கு தேவைப்படாது.
அறுவடை
கிழங்குகளை அறுவடை செய்ய குறைந்தபட்சம் 160 நாட்கள் ஆகும்.
கருணைக் கிழங்கு பயன்கள்:
- இதில் விட்டமின் சி, விட்டமின் பி, மாங்கனீஸ், மினரல்ஸ், ரிபோபிளேவின், பொட்டாசியம், இரும்பு, போன்ற சத்துக்கள் உள்ளன.
- எலும்புகளை உறுதிப்படுத்த மற்றும் நினைவாற்றலை அதிகரிக்க பயன்படுகிறது.
- கருணைக்கிழங்கு சாப்பிடுவதால் கபம், வாதம், ரத்த மூலம், முளை மூலம் ஆகியவை குணமாகின்றன. மேலும் கருணைக்கிழங்கு பசியைத் தூண்டி இரைப்பைக்கு பலம் சேர்க்கும்.
- ஒருமாதம் வரை வேறு உணவு ஒன்றையும் சாப்பிடாமல், கருணைக் கிழங்கை மாத்திரம் வேக வைத்து அப்படியே உணவாக சாப்பிட்டு வர மூலம் பூரணமாகக் குணமாகிவிடும். நாக்கில் ஏற்படும் வறட்சி மாற மோர் சாப்பிடலாம்.
- உடல் எடையை குறைக்க விரும்புவர்கள் கருணைக்கிழங்கை சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.
Leave a Reply