• About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Disclaimer
  • July 17, 2025

Agriculture Trip

Best Agriculture Blog in Tamil

  • Home
  • வேளாண்மை
      • காய்கறிகள்
      • கீரைகள்
      • பழங்கள்
      • தானியங்கள்
      • மரங்கள்
      • பூக்கள்
      • கிழங்கு வகைகள்
      • எண்ணெய் வித்துக்கள்
      • மலைத்தோட்டப் பயிர்கள்
      • மூலிகைப் பயிர்கள்
      • இதர சாகுபடி
  • மாடித் தோட்டம்
  • பயிர் பாதுகாப்பு
    • உரங்கள்
    • அரசு மானியம் / திட்டங்கள்
    • மண்
  • கால்நடைகள்
  • இயற்கை மருத்துவம்
    • மருத்துவ பயன்கள்
    • அழகு குறிப்புகள்
    • ஆண்கள்
    • பெண்கள்
    • குழந்தைகள்
  • மற்றவை
    • நெல்
    • விவசாய புகைப்படங்கள்
Tomato Cultivation

மாடித்தோட்டம் உருவாக்கும் முறைகள் மற்றும் பயன்கள்

October 4, 2017 By Navinkumar V 17 Comments


26 Shares
Share26
Tweet
Share
+1

ஒவ்வொருவரும் தன்னால் முடிந்தவரை வீட்டு தோட்டங்களில் காய்கறி,கீரைகள்,பூச்செடிகளை வளர்த்தால் தன்னுடைய குடும்பத்தின் தேவைகளை ஓரளவு பூர்த்திசெய்ய முடியும். இதெல்லாம் கிராமங்களுக்குத்தான் சரிப்படும், நகரத்தில் வாழ்பவர்களுக்கு இதெல்லாம் சரிப்பட்டு வராது என்றுதான் எல்லோரும் நினைக்கின்றனர். ஆனால் மும்பையில் குடிசை பகுதிகளில் தொட்டிகளை வைக்க இடமில்லை என்றாலும் அவற்றை கயிற்றில் கட்டி கூரையின் பக்கவாட்டில் உள்ள கம்புகளில் தொங்கவிட்டு வளர்க்கிறார்கள்.

அபார்ட்மெண்டில் குடியிருப்பவர்கள் மொட்டைமாடியில் தோட்டம் அமைத்து உழைப்பையும் செலவுகளையும் பகிர்ந்துகொண்டால் பூச்சிக்கொல்லிகள் மற்றும் நச்சுக்கள் கலக்காத காய்கறிகள் கிடைக்கும் அல்லவா? செடிகளுக்கு தண்ணீர் போற்றுவதும், அதை பராமரிப்பதும் அவர்களுக்கு நல்ல பொழுதுபோக்காகவும் நல்ல உடற்பயிற்சியாகவும் இருக்கும். அழகாக போது குலுங்கும் தோட்டத்தையும் அதில் விளையாட வரும் அணில்கள் மற்றும் குருவிகளும் யாருக்குத்தான் பிடிக்காது.

மாடித்தோட்டம் உருவாக்கும் முறைகள்:

பால்கனிகளில், மொட்டைமாடிகளில், ஜன்னல் விளிம்புகளில் கூட தொட்டிகளை வைத்து செடிகளை வளர்க்கலாம். சில இடங்களில் ஆஸ்பெஸ்டாஸ் கூரைகளின் மேலும் ரோஜா செடிகளை வளர்ப்பதுண்டு. மாடிகளில் வளர்ப்பதற்கு ஏற்றவாறு ஓவல் அமைப்புள்ள தொட்டிகளும் கிடைக்கிறது.

நல்ல விளைச்சலை பெற வேண்டுமானால் முதலில் மண் ஆரோகியதுடன் இருக்க வேண்டும். செடிகள் தங்களுக்கு தேவையான சத்துக்களை மண்ணிலிருந்து மீதியை காற்றிலிருந்து பெற்று கொள்கிறது. அதனால் மண்ணும் சத்து நிறைந்ததாக இருக்க வேண்டும்.

செம்மண்ணும் மணலும் கலந்த கலவையோடு எலும்புத்தூள், சுண்ணாம்புத்தூள், வேப்பம்புண்ணாக்கு கலந்த கலவையை தொட்டிகளில் இட வேண்டும்.

ஒவ்வொரு விதையும் விதைப்பதற்கு முன்பு சில வழிமுறைகளை பயன்படுத்தவேண்டும். வெண்டை விதையை வெள்ளை துணியில் கட்டி அரைமணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து எடுத்து அப்படியே மூன்று நாட்கள் வைத்துவிட்டால் முளை வந்துவிடும். அதைத்தான் தொட்டியில் நட வேண்டும். காலை நேரத்தில் விதைப்பது நல்லது.

Roof-garden,Agriculture trip
Roof-garden,Agriculture trip

தேவையான அளவு தொழுஉரம் அல்லது மண்புழு உரத்தை சேகரித்து வைத்திருப்பது நல்லது. மண்புழு உரம் தயாரிக்கும் முறை நான் உரங்கள் தயாரிக்கும் முறை என்ற தலைப்பில் அதன் வழிமுறைகளை தெரிவித்து உள்ளேன். அங்கே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பயன்படுத்தி நமக்கு தேவையான இயற்கை உரங்களை நாமே தயாரித்து கொள்ளலாம்.

செடிகளை வளர்க்க தொட்டிகளை மட்டும் பயன்படுத்தவேண்டும் என்பதில்லை, இப்பொழுது நகரங்களில் கண்டைனர் விவசாயம் என்ற முறை பிரபலமாகி வருகிறது. அதாவது உபயோகமில்லாத பிளாஸ்டிக் டப்பாக்களை தொட்டிகளாக பயன்படுத்தும் முறை தான் இந்த முறை.

பழைய கேன்கள், பாட்டில்கள் மற்றும் டப்பாக்களை அதன் குறுகிய வாய்ப்புறத்திலிருந்து கொஞ்சம் கீழே இறக்கி வெட்டிவிட்டு அகலமான பகுதியை செடி வளர்ப்பிற்கு தொட்டியாக பயன்படுத்தலாம். அலங்கார பூச்செடிகளுக்கு குளிர்பான பாட்டில்கள் போதுமானது. உங்கள் கற்பனை திறனுக்கு ஏற்றவாறு பாட்டில்களில் பெயிண்ட் வேலைப்பாடு செய்தால் அதுவே அழகான உள் அலங்காரமாக இருக்கும். வீட்டுக்குள் வைப்பதற்கென்று தனியாக குரோட்டோன் செடிகளை வளர்க்க தேவை இல்லை.

அனைவராலும் தோட்டம் அமைப்பது என்பது இயலாத ஒன்று. ஆனால் ஒரே ஒரு ரோஜா செடி வளர்க்க முடியும். அச்செடி மொட்டுவிடும்பொழுதும் பூப்பூக்கும் பொழுதும் ஏற்படும் மகிழ்ச்சியை வர்ணிக்க இயலாது.

தயவு செய்து உங்களுடைய கருத்துக்களை கீழே உள்ள கமெண்ட் ஏரியாவில் பதிவிடவும். தவறுகளை சுட்டிக்காட்டி, உங்கள் கருத்துக்களை பரிமாறி இவ்வலைத்தளத்தை திறன்பட நடத்த உதவவும்.

Filed Under: மாடித் தோட்டம் Tagged With: மாடித்தோட்டம்

About Navinkumar V

ஹலோ நண்பர்களே,
AgricultureTrip வலைத்தளத்திற்கு உங்களை வரவேற்கிறேன். நான் கணினி பொறியாளராகவும் பகுதி நேர வலைதள நிர்வாகமும் செய்துகொண்டிருக்கிறேன். நான் இங்கு எனக்கு தெரிந்த விவசாய செய்திகளும், இயற்கை விவசாய சாகுபடி முறைகளையும் விவசாய குறிப்புகளையும் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். மேலும் தொடர்புக்கு என்னுடைய சமூகவலைத்தளங்களான முகநூல் மற்றும் ட்விட்டர் வலைதங்களை பார்க்கவும். உடனடி தொடர்புக்கு கிளிக் செய்யவும்

Comments

  1. Saranya says

    October 13, 2017 at 11:19 am

    Excellent work Navin

    Reply
    • Navinkumar V says

      October 13, 2017 at 4:44 pm

      Thanks Saranya.. Keep watch my blog. and share with your friends also.

      Reply
    • Jalagan says

      October 31, 2021 at 2:23 am

      Super

      Reply
  2. Mirra says

    April 15, 2020 at 9:23 am

    அனைவராலும் தோட்டம் அமைப்பது என்பது இயலாத ஒன்று. ஆனால் ஒரே ஒரு ரோஜா செடி வளர்க்க முடியும். அச்செடி மொட்டுவிடும்பொழுதும் பூப்பூக்கும் பொழுதும் ஏற்படும் மகிழ்ச்சியை வர்ணிக்க இயலாது.

    👍🙏

    Reply
    • Navinkumar V says

      March 26, 2023 at 7:08 pm

      ஆம். அதில் கிடைக்கும் சந்தோசமே வேறு

      Reply
  3. Kasidevi says

    April 16, 2020 at 5:27 am

    Hello sir, எனக்கு வீடு தோட்டம் வைக்கனும் ரொம்ப ஆசை.. ஆனால் அதை பத்தின விவரம் தெரியது. So, எனக்கு கொஞ்சம் உதவி பண்ணுங்க..

    Reply
    • Navinkumar V says

      March 26, 2023 at 7:08 pm

      இந்த லிங்கில் சென்று படித்து தெரிந்துகொள்ளவும்

      Vegetables – Cultivation

      Reply
  4. ranikumar says

    April 22, 2020 at 10:40 am

    hi
    this s rani from chennai .enakum terrace garden vaikanunu asai eruku but redsoil wr to buy nu thereyala ungaluku therencha please reply to this question

    Reply
    • Thiyagu says

      April 26, 2020 at 11:50 am

      Hello madam …
      No need especially red soil for terrace garden…

      Many companies provide terrace garden kids …

      It’s the combination of bag soil seeds and fertilizer

      It will helps you too…

      Reply
  5. Thiyagu says

    April 26, 2020 at 11:46 am

    அவரவர் வீட்டுக்குத் தேவையான காய்கறிகள் கீரைகள் மற்றும் சிலவகை பழங்களை கூட நாம் நம் வீட்டிலேயே உற்பத்தி செய்ய முடியும்…

    அதில் கிடைக்கும் சந்தோஷம் நம் ஆயுளையும் அதிகரிக்கும்…

    மாடித்தோட்டம் நிச்சயம் பலன் தரக் கூடிய தான்

    Reply
    • Navinkumar V says

      March 26, 2023 at 7:06 pm

      ஆம். அதில் கிடைக்கும் சந்தோசமே வேறு

      Reply
  6. Ram says

    May 8, 2020 at 3:55 am

    Nan erkanavey motta madila chedi valkuren anna antha roja pookum pothu enaku avlo santhosama irukkum and unga page ahh follow panni inumum nerya chedi valaka poran anna .

    Reply
    • Navinkumar V says

      March 26, 2023 at 7:06 pm

      மிக்க நன்றி தம்பி

      Reply
  7. P.k Dhivya says

    May 8, 2020 at 7:51 am

    Yenaku garden valarka asai yenaku ungaludaiya ideas help venum anna
    Neraiya vegetables podanum anna help pannuvingala

    Reply
    • Navinkumar V says

      March 26, 2023 at 7:05 pm

      நமது குழுவில் இணைந்து பயனடையவும். தனிப்பட்ட தகவலுக்கு என்னுடைய ஈமெயில் முகவரிக்கு மெயில் அனுப்புங்கள். உதவுகிறேன்.

      https://www.facebook.com/groups/agriculturetripiyarkaivivasayam

      Mail ID : Blogbynavin@gmail.com

      Reply
  8. Keerthiga says

    August 18, 2022 at 12:17 am

    எனக்கு எங்க பள்ளிக்கூடத்துல மாடி தோட்டம் பற்றி எழுதிட்டு வர சொல்லி செயல்பாடு குடுத்தாங்க… நா நீங்க போட்ட மாடி தோட்டத்ததான் எழுந்திருக்கேன்………. அருமையாக இருக்கிறது…. ஆனால் இதில் சின்ன பிழைகள் இருக்கிறது…… இடை இடையில் ஆங்கிலம் சொற்கள் பயன்படுத்தி உள்ளீர்கள்……. அடுத்த தடவ இது மாறி எதாவது போட்டிங்கனா முழுவதும் தமிழ் ல போடுங்க… இல்லைனா முழுவதும் ஆங்கிலத்தில் போடுங்க…. தங்கிலீஷ் மட்டும் போட்டுராதீங்க……… மிக்க நன்றி….. 🙏🙏🙏

    Reply
    • Navinkumar V says

      March 26, 2023 at 7:03 pm

      தகவலுக்கு நன்றி நண்பா

      Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

உங்களின் சந்தேகங்களை இங்கு தேடுங்கள்

சந்தேகங்களை கேட்க Facebook குரூப்பில் இணையவும்

Categories

  • அரசு மானியம் / திட்டங்கள் (5)
  • அழகு குறிப்புகள் (6)
  • ஆண்கள் (3)
  • இதர சாகுபடி (8)
  • உரங்கள் (8)
  • எண்ணெய் வித்துக்கள் (4)
  • காய்கறிகள் (29)
  • கால்நடைகள் (9)
  • கிழங்கு வகைகள் (6)
  • கீரைகள் (18)
  • குழந்தைகள் (3)
  • தானியங்கள் (10)
  • நெல் (4)
  • நோய்களும் அதன் தீர்வும் (3)
  • பயிர் பாதுகாப்பு (1)
  • பழங்கள் (24)
  • பூக்கள் (12)
  • பெண்கள் (4)
  • மண் (2)
  • மரங்கள் (7)
  • மருத்துவ பயன்கள் (48)
  • மலைத்தோட்டப் பயிர்கள் (4)
  • மாடித் தோட்டம் (70)
  • மூலிகைப் பயிர்கள் (8)
  • விவசாய புகைப்படங்கள் (3)

Recent Posts

  • சித்தரத்தை மருத்துவ பயன்கள்
  • தமிழ்நாட்டிலுள்ள நெல் ரகங்களும் அதற்கான பருவங்களும் (மாவட்டம் வாரியாக )
  • இது உங்கள் தோட்டம் – புகைப்பட தொகுப்பு (Part 3)
  • ஆடிப்பட்டம் தேடி விதை பழமொழியின் பொருள் என்னெவென்று தெரியுமா
  • TNAU – தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் Courses பற்றிய முழு தகவல் இதோ.
  • ஒவ்வொரு மரத்திற்கும் எவ்வளவு இடைவெளி விட்டு நடவேண்டும் என்று தெரியுமா?
  • தமிழ்நாட்டில் உள்ள அரசு வேளாண் கல்லூரிகள் பற்றிய விவரங்கள் இதோ
  • தமிழ்நாட்டில் உள்ள தனியார் வேளாண் கல்லூரிகள் மற்றும் அவற்றில் உள்ள படிப்புகள் இதோ
  • சளி, இருமலைப் போக்கும் கற்பூரவள்ளி டீ : எப்படி போடுவது..?
  • அகத்தி மரம் வளர்ப்பு முறை மற்றும் பயன்கள்

Tags

Cotton (1) அன்னாசிப்பழம் (1) அவரைக்காய் (1) ஆரஞ்சு பழம் (1) இஞ்சி (1) இயற்கை விவசாயம் (9) இலந்தை பழம் (1) எலுமிச்சை (1) கத்தரிக்காய் (1) கம்பு (1) கறிவேப்பிலை (1) காப்பி (1) கொய்யா செடி (1) கோதுமை (1) கோவைக்காய் (1) சப்போட்டா பழம் (1) சோற்று கற்றாழை (1) சோளம் (1) தக்காளி (1) தக்காளி சாகுபடி (1) தர்பூசணி (1) திராட்சை பழம் (1) தென்னைமரம் (1) தேங்காய் சாகுபடி (1) தேயிலை (1) நெல் (2) நெல் சாகுபடி (1) பப்பாளி (1) பருத்தி (1) பலாப்பழம் (1) பீன்ஸ் (1) பீன்ஸ் சாகுபடி (1) புதினா (1) மகசூல் (1) மருத்துவ பயன்கள் (2) மாடித் தோட்டம் (6) மாடித்தோட்டம் (1) மாதுளைப்பழம் (1) மாம்பழம் (1) மாம்பழம் உற்பத்தி (1) முருங்கைக்காய் (Drumstick) (1) விதை (1) வீட்டு காய்கறி தோட்டம் (1) வெண்டைக்காய் (1) வெற்றிலை (1)

About Agriculturetrip

AgricultureTrip வலைத்தளத்திற்கு உங்களை வரவேற்கிறேன். நான் நவீன்குமார் கணினி பொறியாளராக பணியாற்றி கொண்டிருக்கிறேன். பகுதி நேர வலைதள நிர்வாகமும் செய்துகொண்டிருக்கிறேன். இந்த வலைத்தளத்தில் விவசாய உற்பத்தி முறைகள் மற்றும் விவசாய பயன்பாடு முறைகள் பற்றி தகவல்களை திரட்டி இங்கு பதிவிட்டுள்ளேன். மேலும் படிக்க…

Contact

Mahindra service station opp
Behind CSI Church
Chikkathogur
Bangalore – 560100

blogbynavin@gmail.com

Subscribe Our Newsletter

Join Our Newsletter
  Thank you for Signing Up
Please correct the marked field(s) below.
1,true,6,Contact Email,2 1,false,1,First Name,2 1,false,1,Last Name,2

Copyright © 2025 by Agriculture Trip. Developed by Navinblog