நாம் அனைவரும் அன்றாட காய்கறிகளை நமது வீட்டு மாடியில் பயிர் செய்யலாம். இவ்வாறு பயிர் செய்வதினால் நமக்கு உடல் நலத்தை காப்பதுடன் இயற்கை முறையில் விளைந்த காய்கறிகளை உண்ட திருப்தியும் ஏற்படும். எனவே நம்மால் முடிந்த அளவுக்கு மாடித்தோட்டங்களை ஏற்படுத்தலாம். மாடித்தோட்டத்தில் கேரட் பயிரிடும் முறையை இங்கு காணலாம்.
தேவையான பொருட்கள்
- Grow Bags அல்லது Thotti
- அடியுரமாக இட மணல், தென்னை நார்க்கழிவு, மண்புழு உரம், செம்மண், பஞ்சகாவ்யா.
- விதைகள்
- பூவாளி தெளிப்பான்
- பசுமைக்குடில் அமைப்பதற்கான உபகரணங்கள்
தொட்டிகள்
அடியுரமாக ஒரு பங்கு மண், ஒரு பங்கு தென்னை நார்க்கழிவு, ஒரு பங்கு இயற்கை உரம் ஆகியவற்றை கொண்டு தொட்டியை நிரப்ப வேண்டும்.
கிழங்கு வகை என்பதால் தென்னை நார்க்கழிவு சேர்க்க வேண்டும். அப்பொழுது தான் கிழங்கு வளர ரொம்ப எளிதாக இருக்கும். மண் இறுகிப்போகும் பிரச்சனை இருக்காது.
விதைத்தல்
விதைகளை நேரடியாகவே நடவு செய்யலாம். ஒவ்வொரு செடிக்கும் அரை அடி இடைவெளி இருக்குமாறு நடவு செய்ய வேண்டும். இரு விதைகளை நடவு செய்தால் வளர்ந்தவுடன் குழிக்கு ஒரு ஆரோக்கியமான செடியை விட்டு மற்ற செடியை நீக்கி விட வேண்டும்.
நீர் நிர்வாகம்
விதைத்தவுடன் பூவாளி கொண்டு நீர் தெளிக்க வேண்டும். பின்னர் தினமும் காலை அல்லது மாலை வேளையில் தண்ணீர் தெளிக்க வேண்டும்.
உரங்கள்
காய்கறி கழிவுகள், டீத்தூள், முட்டை ஓடு ஆகியவற்றை மக்கச்செய்து உரமாக போடலாம்.
பஞ்சகாவ்யா 10 மில்லியை இரண்டு லிட்டர் தண்ணீரில் கலந்து வாரம் ஒரு முறை ஊற்ற வேண்டும்.
பாதுகாப்பு முறைகள்
பசுமை குடில்கள் அமைப்பதற்கு வரிசையாக நீளக்கம்பிகளை இருபுறமும் வளைத்து அதன்மேல் பாலிதீன் பைகளை இணைத்து கட்ட வேண்டும். அதனை திறந்து மூடுவதற்கு ஏற்ற வகையில் அமைத்துக்கொள்ளலாம். பசுமைக்குடில் அமைப்பதற்கான பிரத்தியேக சாதனங்களை கொண்டும் பசுமை குடில்களை நிறுவி விடலாம்.
இக்குடிலுக்கு சீதோஷண நிலையை கட்டுக்குள் வைத்துக்கொள்ளும் தன்மை இருப்பதால் பருவகால மாற்றங்கள் செடிகளின் வளர்ச்சியை பாதிக்காது. செடிகளை பாதிக்கும் முக்கிய பிரச்சனையான பூச்சிகளின் ஆதிக்கம் பசுமைக் குடிலுக்குள் காணப்படுவதில்லை.
இலைகளில் பூச்சி தாக்குதல் காணப்பட்டால் வேப்பந்தூளை தண்ணீரில் கலந்து ஊற்ற வேண்டும். இது சிறந்த பூச்சி விரட்டியாக செயல்படும்.
அறுவடை
இதன் செடிகளின் அடிப்பாகத்தில் இலைகள் வாடத் தொடங்கும். அந்த சமயத்தில் அறுவடை செய்ய வேண்டும்.
கேரட் பயன்கள்:
- காலை நேரத்தில் அரை டம்ளர் கேரட் சாறு குடித்துவர வயிற்றில் உள்ள புழுக்கள் வெளியேறி வயிறு சுத்தமாகும்.
- உலர்ந்த சருமம் இருப்பவர்கள் கேரட் சாறுடன் தேன் அல்லது ஆலிவ் ஆயில் சேர்த்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவினால் சருமத்துக்கு தேவையான சத்து கிடைக்கும்.
- புற்றுநோய் வராமல் தடுக்கும் குணம் கேரட்டுக்கு உள்ளது.
- நோய் தொற்றுக்களில் இருந்து உடலை காப்பாற்றும் ஆன்டிசெப்டிக்காகவும் கேரட் பயன்படுகிறது.
- உடலில் சேரும் நச்சு பொருட்களை அகற்றும் வல்லமை கேரட்டுக்கு உண்டு.
- உடல் செல்களை இளமையாக வைத்துக்கொள்ள உதவுகிறது.
- கேரட்டில் உள்ள வைட்டமின் ‘ஏ’ சத்து கண்களுக்கு பலம் கொடுக்க கூடியது. விழித்திரைக்கு பலம் சேர்க்கும். கண்பார்வை நன்றாக இருக்கும்.
shivakm says
Very useful ur post bro… Thank you… And continue to post this useful messages…
Navinkumar V says
Nandri Bro
Raman says
இந்தமாதிரி சேவையை அழித்து வரும் உங்களுக்கு கோடானகோடி நன்றிகள்🙏🙏🙏🙏🙏
Navinkumar V says
நன்றி