குழந்தையின்மை பிரச்சனை தற்போது பெரிய பிரச்சனையாக மாறி உள்ளது. அதற்கு ஆண்களிடத்தில் விந்தணுக்கள் குறைவாக இருப்பதும் காரணம் அவற்றை குணப்படுத்தும் முறைகள் பற்றி விரிவாக இங்கு காணலாம்.
அந்த காலக்கட்டத்தில் குழந்தையின்மை என்பது இல்லாத ஒன்றாக இருந்தது. ஆனால் இந்த காலக்கட்டத்தில் திருமணம் செய்யும் போதே தம்பதிகள் பயப்பட தொடங்குகின்றனர்.
குழந்தை பிறப்பு என்பது கடவுள் கொடுத்த வரமாக மாறி உள்ளது.இன்பெர்டிலிட்டி சென்டர் அதிகரித்து உள்ளது.
குழந்தையின்மைக்கு என்னதான் காரணமாக இருக்கும் என சிகிச்சை பெற முதலில் பெண்ணை தான் மருத்துவமனைக்கு அழைத்து செல்வர்.
ஆனால் பிரச்னை பெண்ணுக்கு மட்டும் இருக்காது,.. ஆணுக்கும் இருக்கும். அதாவது குழந்தையின்மைக்கு காரணம் ஆண்களாக இருக்கிறார்கள் என்றால்,எந்தெந்த காரணம் என்று தெரிந்துக்கொள்ளலாமா…
மிக முக்கியமாக….விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவதற்கு காரணம் என்னவென்று பார்க்கலாமா..?
செல்போன்
செல்போன்களாலும் விந்தணு குறைபாடு ஏற்படுகிறது.ஆண்கள் தங்கள் பின்புறம் செல்போனை வைக்கும் போது அதில் இருந்து வெளிப்படும் அதிர்வுகள், கதிரியக்கங்கள் விந்தணுக்களின் எண்ணிக்கையை குறைக்கின்றது.
வெப்பம்
வெப்பம் அதிகமான இடங்களில் ஆண்கள் அதிக நேரம் இருந்தால் விந்தணு குறைபாடு ஏற்படும். 4 டிகிரிக்கும் குறைவான வெப்பநிலையில் இருக்கும் போது சரியான அளவில் விந்தணு உற்பத்தியாகும்.
உடல் பருமன்
அதிகமான உடல் பருமன் உள்ளவர்களுக்கும் விந்தணு குறைபாடு ஏற்படும். உடல் எடையை சீராக வைத்துக்கொள்ள வேண்டும்.
புகை பழக்கம்
புகைப்பிடித்தல் பழக்கம் இருக்கும்போது அது இரத்த ஓட்டத்தை குறைத்து விந்தணுக்கள் எண்ணிக்கையையும் குறைக்கும்.
மது அருந்துதல்
அளவுக்கு அதிகமாக மது அருந்தும் பழக்கம் உள்ளவர்களுக்கும் விந்தணுக்கள் குறைபாடு ஏற்படும்.
மன அழுத்தம்
அதிக அளவில் மன அழுத்தத்தில் உள்ள ஆண்களுக்கு ஆண்மை பாதிக்கும். எனவே மன அழுத்தம் பிரச்சனையிருந்தால் அதனை சரிசெய்து வாழ வேண்டும். சொல்லப்போனால், உடல் எப்போதும் வெப்பநிலை அதிகமாக உள்ள ஒரு சூழலில் வேலை செய்யும் போது விந்தணுக்களில் தன்மை மாறுகிறது என்றே கூறப்படுகிறது.
இதே போன்று பெண்களும் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது.குறிப்பாக ஐடி யில் வேலை செய்யும் பெண்கள் பலருக்கு குழந்தையின்மை பிரச்சனையை சந்தித்து வருகிறார்கள் என ஆய்வில் ஏற்கனவே தெரியவந்துள்ளது. காரணம்,சிஸ்டம் முன்பாக அமர்ந்து பல மணி நேரம் வேலை செய்வது, இதன் காரணமாக உடலில் வெப்பநிலை அதிகரிக்கும், ஹார்மின் மாற்றங்கள் நிகழும், இது போன்ற பல காரணங்கள் கூறப்படுகிறது.
Leave a Reply