வெந்தயக்கீரை வெந்தயத்தின் மூலம் பயிரிடப்படுகிறது.
இது மூன்று மாதங்களில் பூத்துக், காய்த்துப் பலன் தந்துவிடும்.
கீரையாகப் பயன்படுத்துவதற்குப் பூ பூக்கும் முன்னரே வெந்தயச் செடியைப் பிடுங்கிவிட வேண்டும்.
சிறு சிறு இலைகளாகவும், சிறிய தண்டுகளுடன் இருக்கும் வெந்தயக்கீரை, லேசான கசப்புச் சுவை கொண்டது.
வெந்தயக்கீரை ஒருமுறை மட்டுமே அறுவடை செய்யக்கூடியது.
உலகத்திலேயே இந்தியாவில் தான் வெந்தயம் அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது.
எப்படி பயிரிடுவது…?
பருவம்
சித்திரை, ஆடி, மார்கழி, மாசி ஆகிய மாதங்கள் ஏற்றவை.
மண்
நல்ல மண்ணும், மணலும் கலந்த சற்றே அமிலத்தன்மை கொண்ட இருமண்பாடு நிலங்கள், செம்மண் நிலங்கள் சாகுபடிக்கு உகந்தது.
விதையளவு
ஒரு எக்டருக்கு 2.5 கிலோ விதைகள் தேவைப்படும்.
நிலம் தயாரித்தல்
தேர்வு செய்த நிலத்தை உழுது தக்கைப்பூண்டு விதைத்து, பூவெடுக்கும் நேரத்தில் ரோட்டோவேட்டர் மூலம் மடக்கி உழவு செய்ய வேண்டும். பிறகு, ஒரு ஏக்கருக்கு 5 டன் தொழுவுரத்துடன், 4 டன் எருவைக் கலந்து பரவலாகக் கொட்டி உழவு செய்து பாத்திகள் அமைக்க வேண்டும்.
விதைத்தல்
கீரை விதைகளை மணல் கலந்து, பாத்திகளில் தூவ வேண்டும். பின் கையால் லேசாக கிளறி விட்டு, பாசனம் செய்ய வேண்டும்.
நீர் நிர்வாகம்
விதைத்தவுடன் பாத்திகளில் நிதானமாக நீர்ப்பாய்ச்ச வேண்டும். அப்போதுதான் விதைகள் ஒரு பக்கமாக அடித்துச் செல்லாமல் இருக்கும். பின் மூன்றாம் நாள் உயிர்த் தண்ணீர் விடவேண்டும்.
உரங்கள்
7 நாட்கள் இடைவெளியில் இரண்டு முறை ஜீவாமிர்தக் கரைசலை பாசன நீரில் கலந்து விடவேண்டும். இதன் மூலம் பயிரின் வளர்ச்சி சீராக இருக்கும்.
பாதுகாப்பு முறைகள்
களை நிர்வாகம்
விதைகள் விதைத்த 6-ம் நாளில் முளைவிடும். பத்து நாட்கள் கழித்து களைகளை நீக்கி விட வேண்டும். அப்பொழுது அதிகப்படியான செடிகளை களைக்க வேண்டும்.
பயிர் பாதுகாப்பு
கீரைகளில் பூச்சிகள் தாக்க வாய்ப்புண்டு. இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் மூன்றையும் சம அளவில் எடுத்து, இடித்து ஒரு லிட்டர் மாட்டுச் சிறுநீரில் கலந்து 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி கரைசல் என்ற விகிதத்தில் கலந்து, 10 நாட்களுக்கு ஒரு முறை அதிகாலை வேளைகளில் தெளித்தால் பூச்சிகள் தாக்காது.
அறுவடை
விதைத்த 21-25 நாட்களில் வேருடன் பறித்து விற்பனை செய்ய வேண்டும்.
பயன்கள்
- வெந்தயக் கீரைகள் இரும்புச்சத்துப் பொருட்களை அதிக அளவில் கொண்டு உள்ளன. இரும்புச்சத்துப் பொருட்கள் உடலில் ஏற்படும் ரத்தசோகை வராமல் தடுப்பதோடு, உடலுக்கு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகின்றன.
- வெந்தயக் கீரையைப் பொடியாக நறுக்கி வதக்கி, இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு, ஒரு டம்ளர் அளவிற்குச் காய்ச்சி, காலை மாலை அரை டம்ளர் வீதம் உண்டு வந்தால் நெஞ்சுவலி பூரணமாகக் குணமாகும்.
- பத்து கிராம் வெந்தயத்தை நெய்யில் வறுத்துச் சிறிதளவு சோம்பு, உப்பு சேர்த்து அரைத்து மோரில் கரைத்துக் சாப்பிட வயிற்றுப் போக்கு தீரும்.
- வெந்தயக் கீரைகளை தினசரி உணவில் சேர்ப்பது உடலில் ஏற்படும் புரதக்குறைபாட்டை போக்கி வலிமை சேர்க்கும்.
- வெந்தயக்கீரையில் ஏ வைட்டமின் சக்தியும், சுண்ணாம்புச்சத்தும் இருப்பதால் இதை சாப்பிடும் போது மாரடைப்பு, கண்பார்வை குறைபாடு, வாதம், சொறி சிரங்கு, இரத்தசோகை ஆகியவை குணமடையும்.
- கீரையில் உள்ள புரதப்பொருட்களான சாப்போனின், மியூக்கலேஜ் போன்றவை பெருங்குடல் புற்றுநோய் வராமல் தடுக்க உதவுகிறது.
Vijayalakshmi says
Pl guide for keeri valarpu.naan vendayam and mali poten.10 days aatchi.no growth
Navinkumar V says
இது நம்முடைய குழு. இங்கு உங்கள் சந்தேகங்களை கேட்கலாம்
https://www.facebook.com/groups/agriculturetripiyarkaivivasayam
அண்ணா says
வெந்தயக்கீரையை கைப்பி அளவு வளர்ந்தவுடன் அதை மன்னிற்று மேல் 1 அங்குலம் விட்டு அருத்து சமையலுக்கு உபயோகத்திற்கு எடுத்துக்கொண்ட பிறகு அடுத்த இடத்திருந்து தொடர்ந்து இந்த வெந்தயக்கீரை வளருமா இல்லை வளராதா என்பதை தெறிவிக்கவும்