• About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Disclaimer

Agriculture Trip

Best Agriculture Blog in Tamil

  • Home
  • வேளாண்மை
      • காய்கறிகள்
      • கீரைகள்
      • பழங்கள்
      • தானியங்கள்
      • மரங்கள்
      • பூக்கள்
      • கிழங்கு வகைகள்
      • எண்ணெய் வித்துக்கள்
      • மலைத்தோட்டப் பயிர்கள்
      • மூலிகைப் பயிர்கள்
      • இதர சாகுபடி
  • மாடித் தோட்டம்
  • பயிர் பாதுகாப்பு
    • உரங்கள்
    • அரசு மானியம் / திட்டங்கள்
    • மண்
  • கால்நடைகள்
  • இயற்கை மருத்துவம்
    • மருத்துவ பயன்கள்
    • அழகு குறிப்புகள்
    • ஆண்கள்
    • பெண்கள்
    • குழந்தைகள்
  • மற்றவை
    • நெல்
    • விவசாய புகைப்படங்கள்
    • சாதனையாளர்கள் - விவசாயிகள்
Mung Bean,பச்சைப்பயறு,Green gram

பச்சைப்பயறு பயிரிடும் முறை மற்றும் பயன்கள்

January 8, 2018 By Navinkumar V 2 Comments


0 Shares
Share
Tweet
Share

பச்சைப்பயறு – இதன் தாயகம் இந்தியா மற்றும் ஆசியா என்று கூறப்படுகிறது.

இதன் தாவரவியல் பெயர் லிக்னோ ரேடியேட்டா என்பதாகும். லெகூமினேசியே என்ற குடும்பத்தைச் சேர்ந்தது.

இந்தியாவில் அதிகளவில் பயிரிடப்படுகிறது. தமிழர் சமையலில் பச்சைப்பயறு ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.

பச்சைப்பயிறு எப்படி பயிரிடுவது…?

இரகங்கள்

கோ 4, கோ 6, கே எம். 2, பையூர், வம்பன் 1 மற்றும் வம்பன் (ஜிஜி) 2 ஆகிய இரகங்கள் சாகுபடிக்கு ஏற்றவை.

பருவம்

ஆடி மற்றும் புரட்டாசி பட்டங்களில் சாகுபடி செய்யலாம்.

களர், உவர் மற்றும் அமிலத்தன்மை இல்லாத செம்மண் சாகுபடிக்கு ஏற்றது.

நிலம் தயாரித்தல்

நிலத்தை மூன்று அல்லது நான்கு தடவை நன்கு உழவு செய்ய வேண்டும். இதனால் மண் நன்கு பக்குவம் அடையும்.

ஏக்கருக்கு 2 டன் மக்கிய தொழுவுரம் இட்டு மீண்டும் உழவு செய்ய வேண்டும். அடி உரமாக 20 கிலோ யூரியா மற்றும் 120 கிலோ சூப்பர் பாஸ்பேட் மற்றும் 85 கிலோ பொட்டாஷையும் கலந்து பார்களின் பக்கவாட்டில் இட வேண்டும். நிலத்தை பாத்திகளாகவோ, அல்லது 30 செ.மீ. (1 அடி) அகலப்பார்களாகவோ அமைத்துக் கொள்ள வேண்டும்.

விதையளவு

ஒரு ஏக்கருக்கு 8 கிலோ விதைகள் தேவைப்படும்.

விதை நேர்த்தி

ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் கார்பன்டாசிம் அல்லது திரம் அல்லது 4 கிராம் ட்ரைக்கோடெர்மா விரிடி அல்லது 10 கிராம் சூடோமோனாஸ் கொண்டு விதை நேர்த்தி செய்யவேண்டும்.

விதைப்பு

தயார் செய்துள்ள பார்களில் பக்கவாட்டில் குழிக்கு இரண்டு விதை என்ற விகிதத்தில் ஊன்ற வேண்டும். செடிக்குச் செடி 10 செ.மீ இடைவெளி இருக்க வேண்டும்.

நீர் நிர்வாகம்

இறவை முறையில் விதைத்தவுடன் நீர் பாய்ச்ச வேண்டும். பின்னர் மூன்றாம் நாள் உயிர்த்தண்ணீர் அவசியம் பாய்ச்ச வேண்டும். அதன் பின்பு 10 முதல் 15 நாட்களுக்கு ஒரு முறை நீர் பாய்ச்ச வேண்டும். பூப்பு மற்றும் காய்ப்பிடிப்பு சமயங்களில் நீர் பாய்ச்சுதல் மிகவும் அவசியம். காய்ப்பிடிப்பின் போது நீர் சரிவர பாய்ச்சாவிட்டால் கடின விதைகள் தோன்றுவதற்கு வாய்ப்புகள் உள்ளது.

உரங்கள்

மானாவாரிப்பயிர்களுக்கு 12.5 கிலோ தழைச்சத்து, 25 கிலோ மணிச்சத்து,12.5 கிலோ சாம்பல்சத்து மற்றும் 10 கிலோ கந்தகச்சத்து இடவேண்டும். இறவைப்பயிர்களுக்கு 25 கிலோ தழைச்சத்து, 50 கிலோ மணிச்சத்து, 25 கிலோ சாம்பல்சத்து மற்றும் 20 கிலோ கந்தகச்சத்து தரக்கூடிய உரங்களை இட வேண்டும். அடியுரமாக 25 கிலோ ஜிங்க் சல்பேட் இட வேண்டும்.

பச்சைப்பயிறு பாதுகாப்பு முறைகள்

களை நிர்வாகம்

களை முளைப்பதற்கு முன் களைக்கொல்லியான பென்டிமெத்தலின் பாசன நிலையில் ஏக்கருக்கு 3.3 லிட்டர், மழை நேரமாக இருந்தால் 2.5 லிட்டரை விதைத்த மூன்றாம் நாளில் தட்டை விசிறி நுன்குழல் கொண்ட ராக்கர் தெளிப்பானில் ஒரு எக்டருக்கு 500 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும் அல்லது களை முளைத்த பின் தெளிக்கும் களைக்கொல்லியான குயிசல்பாப் மருந்தை எக்டருக்கு 50 கிராம் என்ற அளவில் விதைத்த 15-20 நாளில் தெளிக்க வேண்டும்.

களைக்கொல்லி தெளிக்கவில்லை என்றால், விதைத்த 15வது நாளிலும் மற்றும் 30வது நாளிலும் கைக்களை எடுக்க வேண்டும்.

இலை வழி நுண்ணூட்டம்

இலை வழி நுண்ணூட்டமாக ஒரு லிட்டர் தண்ணீரில் என்ஏஏ 40 மில்லி கிராம் மற்றும் சாலிசிலிக் அமிலம் 100 மில்லி கிராம் கலந்து பூக்கும் தருணத்திலும் மற்றும் 15 நாட்கள் கழித்தும் தெளிக்கவேண்டும்.

மகசூலை அதிகரிக்க இலைத் தெளிப்பாக யூரியா 1% விதைத்த 30 மற்றும் 45ம் நாளில் தெளிக்க வேண்டும்.

பயிர் பாதுகாப்பு

விதைப்பயிர் வளர்ச்சி பருவத்தின் போது காணப்படும் முக்கிய பூச்சிகளான அசுவினி, தத்துப்பூச்சி, வெள்ளை ஈ ஆகியவற்றைக் கட்டுப்படுத்த மிதைல் டெமட்டான் (அல்லது) டைமித்தோயேட் (அல்லது) பாஸ்போமிடான் போன்ற மருந்துகளில் ஏதாவது ஒன்றை லிட்டருக்கு 2 மில்லி கலந்து தெளிக்கவும்.

வண்டுகளின் சேதத்தைத் தடுக்க எண்டோசல்பான் மருந்தை லிட்டருக்கு இரண்டு மில்லி என்ற அளவில் கலந்து காய்களின் மீது நன்கு படுமாறு தெளிக்க வேண்டும்.

வளர்ச்சி பருவங்களின் போது காணப்படும் தேமல் நோய் பாதித்த செடிகளை அவ்வப்போது நீக்க வேண்டும். வேர் அழுகல் மற்றும் வாடல் நோய் கொண்ட செடிகளை நீக்குவதுடன், பிடுங்கிய இடத்தில் 0.1% பெவிஸ்டின் கரைசல் ஊற்ற வேண்டும். இதனால் வேர் அழுகல் நோய் மற்றும் வாடல் நோய் மேலும் பரவாமல் தடுக்கலாம்.

அறுவடை

விதைத்த 70 – 80 நாட்களில் காய்கள் அறுவடைக்கு தயாராகின்றன. காய்கள் பழுப்பு நிறம் அடைவது அறுவடையின் அறிகுறி ஆகும். செடிகளில் 70 சத காய்கள் கறுமை நிறம் அடைந்தவுடன், செடிகளை வெட்டி களத்தில் போட வேண்டும். தாமதித்தால் காய்கள் வெடித்து விதை சிதறி விடும்.

மகசூல்

மானாவாரியில் எக்டருக்கு 600 – 750 கிலோவும், இறவையில் 1000 – 1200 கிலோவும் மகசூல் கிடைக்கும். இதில் ஊடுபயிராக ஆமணக்கு சாகுபடி செய்யலாம்.

பச்சைப்பயிறு பயன்கள்:-
  • இது அதிக அளவில் புரதசத்தும், குறைந்த அளவில் கொழுப்புச்சத்தும் கொண்டுள்ளது. முளைக்கட்டிய பாசிப்பயறு உடற்குறைப்புக்கு சமச்சீர் உணவாக அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.
  • பயறு துவர்ப்புடன் கூடிய இனிப்புச் சுவையும், சீத வீரியமுள்ளதுமாகும். நல்ல ருசி உடையது. பசியைத் தூண்டி எளிதில் ஜீரணமாகக் கூடியது.
  • இரத்தத்தில் தெளிவை ஏற்படுத்திக் கொதிப்பைக் குறைக்கும். கபமோ, பித்தமோ அதிகமாகாமல் உடலை ஒரே சீராகப் பாதுகாக்கும்.
  • பருப்பை வேக வைத்த தண்ணீரை உப்பும், காரமும் சேர்த்து நோயுற்ற பின் மெலிந்து பலக்குறையுள்ளவர்கள் சாப்பிட களைப்பு நீங்கிப் பலம் உண்டாகும்.
  • பச்சைப்பயிரை வேக வைத்து கடுகு, சின்ன வெங்காயம், தாளித்து உப்பு சேர்த்து சப்பாத்திக்குத் தொட்டுக் கொள்ள கூட்டாகவும் உபயோகிக்கலாம். இது மிகவும் சத்தானது.
  • முளைவிட்ட பச்சைப்பயிறு சாப்பிட்டால், சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருக்கும்.
  • முளைகட்டிய பயறுகள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, உடலுக்குத் தேவையான எனர்ஜியைத் தருபவை. உடல் எடையைக் குறைக்கவும் உதவும்.
  • வைட்டமின் ஏ நிறைந்திருக்கிறது. கண்களுக்கு குளிர்ச்சி தருகிறது; பார்வைத் திறனை மேம்படுத்தும்.
  • இவற்றில் ஒமேகா அமிலம் அதிகமாக இருப்பதால், முடி வளர்ச்சிக்கும் உதவுகின்றன.

Filed Under: தானியங்கள் Tagged With: பச்சைப்பயறு

About Navinkumar V

ஹலோ நண்பர்களே,
AgricultureTrip வலைத்தளத்திற்கு உங்களை வரவேற்கிறேன். நான் கணினி பொறியாளராகவும் பகுதி நேர வலைதள நிர்வாகமும் செய்துகொண்டிருக்கிறேன். நான் இங்கு எனக்கு தெரிந்த விவசாய செய்திகளும், இயற்கை விவசாய சாகுபடி முறைகளையும் விவசாய குறிப்புகளையும் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். மேலும் தொடர்புக்கு என்னுடைய சமூகவலைத்தளங்களான முகநூல் மற்றும் ட்விட்டர் வலைதங்களை பார்க்கவும். உடனடி தொடர்புக்கு கிளிக் செய்யவும்

Comments

  1. kajatheepan says

    March 9, 2021 at 7:57 pm

    சகோ எனக்கு கௌப்பி விதைப்பு முறை அறிய தரவும்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

உங்களின் சந்தேகங்களை இங்கு தேடுங்கள்

உங்களின் சந்தேகங்களை இங்கு தேடுங்கள்

Search Articles

Recent Articles
Tamil Keyboard
Start typing to find articles.

Categories

  • அரசு மானியம் / திட்டங்கள் (5)
  • அழகு குறிப்புகள் (6)
  • ஆண்கள் (3)
  • இதர சாகுபடி (8)
  • உரங்கள் (10)
  • எண்ணெய் வித்துக்கள் (4)
  • காய்கறிகள் (29)
  • கால்நடைகள் (9)
  • கிழங்கு வகைகள் (6)
  • கீரைகள் (18)
  • குழந்தைகள் (3)
  • சாதனையாளர்கள் – விவசாயிகள் (1)
  • தானியங்கள் (10)
  • நெல் (4)
  • நோய்களும் அதன் தீர்வும் (3)
  • பயிர் பாதுகாப்பு (1)
  • பழங்கள் (25)
  • பூக்கள் (12)
  • பெண்கள் (4)
  • மண் (2)
  • மரங்கள் (7)
  • மருத்துவ பயன்கள் (48)
  • மலைத்தோட்டப் பயிர்கள் (4)
  • மாடித் தோட்டம் (70)
  • மூலிகைப் பயிர்கள் (16)
  • விவசாய புகைப்படங்கள் (4)

Recent Posts

  • தாவர வளர்ச்சிக்கு NPK ஏன் அவசியம்? நைட்ரஜன்–பாஸ்பரஸ்–பொட்டாசியம் முழுமையான விளக்கம்
  • விவசாயத்தின் முக்கிய & இணைத் துறைகள் – முழுமையான வழிகாட்டி 2025
  • 🥭 அயல்நாட்டு பழங்கள் அவசியமா? அல்லது நம் நாட்டு பழங்களே போதுமா?
  • நித்தியகல்யாணி (Catharanthus roseus) – நீரிழிவு, புற்றுநோய், இதய நலம் மற்றும் ஆரோக்கிய நன்மைகள்
  • சுண்டைக்காய் (Turkey Berry / Solanum torvum) – ரத்தசோகை, நீரிழிவு, இதய நலம் மற்றும் மருத்துவ நன்மைகள்
  • அருகம்புல் (Cynodon dactylon) – உடல் சுத்தம், குளிர்ச்சி மற்றும் ஆரோக்கிய நன்மைகள்
  • முடக்கத்தான் கீரை (Cardiospermum halicacabum) – மூட்டு வாதம், வலி நிவாரணம் மற்றும் ஆரோக்கிய நன்மைகள்
  • மருதாணி (Lawsonia inermis) – அழகு, ஆரோக்கியம் மற்றும் இயற்கை மருத்துவ நன்மைகள்
  • தூதுவளை (Thuthuvalai) – சளி, இருமல், ஆஸ்துமா, புற்றுநோய் வரை குணமாக்கும் இயற்கை மூலிகை
  • துளசி (Tulsi) – வகைகள், சாகுபடி, மற்றும் நன்மைகள்

Tags

NPK (1) Paddy Variety (1) pappali (1) Tulsi (1) அருகம்புல் (1) ஆடிப்பட்டம் (1) ஆடிப்பட்டம் தேடி விதை (1) இஞ்சி (1) இயற்கை விவசாயம் (9) உயிர் உரங்கள் (1) உரங்கள் (1) உளுந்து (1) கிஸ்மிஸ்பழம் (1) கேரட் (1) கொத்தமல்லி (1) சவுக்கு மரம் (1) சித்தரத்தை (1) சுண்டைக்காய் (1) செம்பருத்தி (1) சோற்று கற்றாழை (1) தர்பூசணி (1) திருநீற்றுப் பச்சிலை (1) துளசி (2) துவரை (1) தூதுவளை (1) தேக்கு மரம் (1) நாவல்பழம் (1) நித்தியகல்யாணி (1) நெல் (3) நெல் ஜெயராமன் (1) பச்சைப்பயறு (1) பருத்தி (1) பாகற்காய் (1) பீட்ரூட் (1) புதினா (1) மஞ்சள் (1) மண்புழு உரம் (1) மருதாணி (1) மருத்துவ பயன்கள் (2) மாடித் தோட்டம் (6) மாதுளைப்பழம் (1) முடக்கத்தான் (1) முள்ளங்கி (1) வல்லாரை (1) விவசாயத்தின் இணைத் துறைகள் (1)

About Agriculturetrip

AgricultureTrip வலைத்தளத்திற்கு உங்களை வரவேற்கிறேன். நான் நவீன்குமார் கணினி பொறியாளராக பணியாற்றி கொண்டிருக்கிறேன். பகுதி நேர வலைதள நிர்வாகமும் செய்துகொண்டிருக்கிறேன். இந்த வலைத்தளத்தில் விவசாய உற்பத்தி முறைகள் மற்றும் விவசாய பயன்பாடு முறைகள் பற்றி தகவல்களை திரட்டி இங்கு பதிவிட்டுள்ளேன். மேலும் படிக்க…

Contact

Mahindra service station opp
Behind CSI Church
Chikkathogur
Bangalore – 560100

blogbynavin@gmail.com

Subscribe Our Newsletter

Join Our Newsletter
  Thank you for Signing Up
Please correct the marked field(s) below.
1,true,6,Contact Email,2 1,false,1,First Name,2 1,false,1,Last Name,2

Copyright © 2026 by Agriculture Trip. Developed by Navinblog