• About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Disclaimer

Agriculture Trip

Best Agriculture Blog in Tamil

  • Home
  • வேளாண்மை
      • காய்கறிகள்
      • கீரைகள்
      • பழங்கள்
      • தானியங்கள்
      • மரங்கள்
      • பூக்கள்
      • கிழங்கு வகைகள்
      • எண்ணெய் வித்துக்கள்
      • மலைத்தோட்டப் பயிர்கள்
      • மூலிகைப் பயிர்கள்
      • இதர சாகுபடி
  • மாடித் தோட்டம்
  • பயிர் பாதுகாப்பு
    • உரங்கள்
    • அரசு மானியம் / திட்டங்கள்
    • மண்
  • கால்நடைகள்
  • இயற்கை மருத்துவம்
    • மருத்துவ பயன்கள்
    • அழகு குறிப்புகள்
    • ஆண்கள்
    • பெண்கள்
    • குழந்தைகள்
  • மற்றவை
    • நெல்
    • விவசாய புகைப்படங்கள்
    • சாதனையாளர்கள் - விவசாயிகள்
நெல்லிக்காய்

மாடித் தோட்டம் நெல்லிக்காய் பயிரிடும் முறை

November 26, 2017 By Navinkumar V 3 Comments


0 Shares
Share
Tweet
Share

நாம் அனைவரும் அன்றாட காய்கறிகளை நமது வீட்டு மாடியில் பயிர் செய்யலாம். இவ்வாறு பயிர் செய்வதினால் நமக்கு உடல் நலத்தை காப்பதுடன் இயற்கை முறையில் விளைந்த காய்கறிகளை உண்ட திருப்தியும் ஏற்படும். எனவே நம்மால் முடிந்த அளவுக்கு மாடித்தோட்டங்களை ஏற்படுத்தலாம். மாடித்தோட்டத்தில் நெல்லிக்காய் பயிரிடும் முறையை இங்கு காணலாம்.

தேவையான பொருட்கள்
  1. 75 லிட்டர் முதல் 100 லிட்டர் கொள்ளளவு கொண்ட டிரம்
  2. அடியுரமாக இட மணல், தென்னை நார் கழிவு மக்கியது, மண்புழு உரம், செம்மண், வேப்பம் பிண்ணாக்கு, பஞ்சகாவ்யா.
  3. நடுவதற்கு ஏற்ற ஒட்டு செடிகள்
  4. நீர் தெளிக்க உதவும் பூவாளி தெளிப்பான்

தொட்டிகள்

இதற்கு டிரம்களில் அடியுரமாக ஒரு பங்கு மண், ஒரு பங்கு மணல், ஒரு பங்கு இயற்கை உரம் மற்றும் தென்னை நார்க்கழிவு ஆகியவற்றை கலந்து வைக்க வேண்டும். தென்னை நார்க்கழிவு சேர்ப்பதால் மண் இறுக்கமாகாமல் இலகுவாக இருக்கும். இதன் மூலம் வேர்கள் நன்கு வளரும். தயார் செய்துள்ள டிரம்களில் 10 நாட்களுக்கு பிறகு செடிகளை நடவு செய்ய வேண்டும்.

விதைத்தல்

நெல்லியை நடுவதற்கு ஒட்டுச் செடிகளை பயன்படுத்த வேண்டும். செடிகளை தொட்டியின் நடுப்பகுதியில் வைத்து நடவு செய்ய வேண்டும்.

நீர் நிர்வாகம்

நட்டவுடன் நீர் தெளிக்க வேண்டும். பின்னர் தினமும் காலை அல்லது மாலை வேளையில் தண்ணீர் ஊற்ற வேண்டும். பயன்படுத்தும் டிரம்மின் அடிப்பகுதியில் இரு துளைகளை இட வேண்டும். இதனால் அதிகப்படியான தண்ணீர் இருந்தால் வெளியேறி விடும். இல்லை எனில் தண்ணீர் அதிகமாக இருந்தால் வேர்கள் அழுகி விட வாய்ப்புள்ளது.

உரங்கள்

வேப்ப இலைகளைச் சேமித்து நன்கு காய வைத்துத் தூள் செய்துகொள்ள வேண்டும். இந்தத் தூளைச் செடி ஒன்றுக்கு ஒரு பிடி வீதம் செடியின் வேர் பகுதியில் போட்டு நன்கு கொத்திவிட வேண்டும். இதுவே அடி உரமாகவும், பூச்சிக் கொல்லியாகவும் செயல்படும்.

ஒரு கையளவு சாணத்தை 5 லிட்டர் தண்ணீரில் கலந்து வாரம் ஒரு முறை ஊற்ற வேண்டும். சாணம் அதிகமாக இருந்தால் எறும்புகள் வர வாய்ப்புள்ளது. குறைந்தளவு சாணத்தை தான் பயன்படுத்த வேண்டும்.

செடிகளைக் காக்கும் இயற்கை பூச்சிக் கொல்லியான வேப்ப எண்ணையை மாதம் ஒரு முறை தெளிக்க வேண்டும். சமையலறை கழிவுகளையும் உரமாக இடலாம்.

பாதுகாப்பு முறைகள்

பூச்சிகளை கட்டுப்படுத்த பூண்டு, பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி ஆகியவற்றை அரைத்து ஊறவைத்து வடிகட்டி தெளிக்க வேண்டும்.

நுனிகளை கிள்ளி விட்டு பக்கக்கிளைகளை வளரவிட வேண்டும். மூன்று கிளைகளுக்கு மேல் வளர அனுமதிக்க கூடாது.

வாரம் ஒரு முறையாவது செடியைச் சுற்றி அடி மண்ணைக் கொத்தி விட வேண்டும். பஞ்சகாவ்யா 50 மில்லி என்ற அளவில் ஒரு லிட்டர் நீரில் கரைத்து வேர் பகுதியில் ஊற்ற வேண்டும்.

அறுவடை

இது நன்கு வளரும் தன்மை கொண்டது. இதை மாடியின் ஒரு மூலைப்பகுதியில் வைப்பது நல்லது. அறுவடைக்கு சுலபமாக இருக்கும். நன்கு திரண்ட காய்களை பறிக்க வேண்டும்.

நெல்லிக்காய் பயன்கள்:
  • தோல் வியாதிகளை குணப்படுத்தும் மூலிகை மருந்துகளில் நெல்லிக்கனியின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. இது ரத்த சுத்திகரிப்பிற்கு பெரிதும் உதவுகிறது. அதனால், பருக்கள், கொப்புளங்கள் போன்றவை வராமல் தடுக்கிறது.
  • சளியை வெளியேற்றி, சுவாசமண்டலத்தை சீராக இயக்குகிறது. நீண்ட நாள் இருந்து வரும் இருமல், ஆஸ்துமா, எலும்புருக்கி நோய் போன்ற நோய்களுக்கு அருமருந்தாக உதவுகிறது.
  • பக்கவாதம், நரம்புத்தளர்ச்சி போன்ற நோய்கள் ஏற்படுவதைத் தடுக்கிறது. மூளை பலம்பெறவும், ஐம்புலன்கள் சீராக இயங்கவும் உறுதுணை புரிகிறது. மனஇறுக்கத்தைப் போக்கி, நுண்ணறிவுடன் செயல்பட வழிவகுக்கிறது.
  • காய்ச்சல் உண்டாகாதவாறு தடுக்கிறது. காயங்கள், வீக்கம் போன்றவற்றால் உண்டாகும் வலிகளைப்போக்கி, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
  • கண் பார்வைத்திறனை அதிகரிக்கிறது. கண்எரிச்சல், கண்ணில் நீர் வடிதல், கண் சிவத்தல் போன்ற கண் சம்பந்தமான குறைபாடுகளை போக்குகிறது.
  • ரத்தத்தில் உள்ள குளுக்கோசின் அளவைக் கட்டுப்படுத்தி சர்க்கரை நோய் ஏற்படாமல் பாதுகாக்கிறது. உடலுக்கு நோய் எதிர்ப்பாற்றலை தந்து, ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

Filed Under: மாடித் தோட்டம்

About Navinkumar V

ஹலோ நண்பர்களே,
AgricultureTrip வலைத்தளத்திற்கு உங்களை வரவேற்கிறேன். நான் கணினி பொறியாளராகவும் பகுதி நேர வலைதள நிர்வாகமும் செய்துகொண்டிருக்கிறேன். நான் இங்கு எனக்கு தெரிந்த விவசாய செய்திகளும், இயற்கை விவசாய சாகுபடி முறைகளையும் விவசாய குறிப்புகளையும் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். மேலும் தொடர்புக்கு என்னுடைய சமூகவலைத்தளங்களான முகநூல் மற்றும் ட்விட்டர் வலைதங்களை பார்க்கவும். உடனடி தொடர்புக்கு கிளிக் செய்யவும்

Comments

  1. Prabu says

    July 19, 2018 at 7:59 pm

    Really nice sir .. I appreciate

    Reply
    • Navinkumar V says

      July 20, 2018 at 10:03 pm

      நன்றி. தொடர்ந்து எனக்கு ஆதரவு தாருங்கள்..

      Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

உங்களின் சந்தேகங்களை இங்கு தேடுங்கள்

உங்களின் சந்தேகங்களை இங்கு தேடுங்கள்

Search Articles

Recent Articles
Tamil Keyboard
Start typing to find articles.

Categories

  • அரசு மானியம் / திட்டங்கள் (5)
  • அழகு குறிப்புகள் (6)
  • ஆண்கள் (3)
  • இதர சாகுபடி (8)
  • உரங்கள் (10)
  • எண்ணெய் வித்துக்கள் (4)
  • காய்கறிகள் (29)
  • கால்நடைகள் (9)
  • கிழங்கு வகைகள் (6)
  • கீரைகள் (18)
  • குழந்தைகள் (3)
  • சாதனையாளர்கள் – விவசாயிகள் (1)
  • தானியங்கள் (10)
  • நெல் (4)
  • நோய்களும் அதன் தீர்வும் (3)
  • பயிர் பாதுகாப்பு (1)
  • பழங்கள் (25)
  • பூக்கள் (12)
  • பெண்கள் (4)
  • மண் (2)
  • மரங்கள் (7)
  • மருத்துவ பயன்கள் (48)
  • மலைத்தோட்டப் பயிர்கள் (4)
  • மாடித் தோட்டம் (70)
  • மூலிகைப் பயிர்கள் (16)
  • விவசாய புகைப்படங்கள் (4)

Recent Posts

  • தாவர வளர்ச்சிக்கு NPK ஏன் அவசியம்? நைட்ரஜன்–பாஸ்பரஸ்–பொட்டாசியம் முழுமையான விளக்கம்
  • விவசாயத்தின் முக்கிய & இணைத் துறைகள் – முழுமையான வழிகாட்டி 2025
  • 🥭 அயல்நாட்டு பழங்கள் அவசியமா? அல்லது நம் நாட்டு பழங்களே போதுமா?
  • நித்தியகல்யாணி (Catharanthus roseus) – நீரிழிவு, புற்றுநோய், இதய நலம் மற்றும் ஆரோக்கிய நன்மைகள்
  • சுண்டைக்காய் (Turkey Berry / Solanum torvum) – ரத்தசோகை, நீரிழிவு, இதய நலம் மற்றும் மருத்துவ நன்மைகள்
  • அருகம்புல் (Cynodon dactylon) – உடல் சுத்தம், குளிர்ச்சி மற்றும் ஆரோக்கிய நன்மைகள்
  • முடக்கத்தான் கீரை (Cardiospermum halicacabum) – மூட்டு வாதம், வலி நிவாரணம் மற்றும் ஆரோக்கிய நன்மைகள்
  • மருதாணி (Lawsonia inermis) – அழகு, ஆரோக்கியம் மற்றும் இயற்கை மருத்துவ நன்மைகள்
  • தூதுவளை (Thuthuvalai) – சளி, இருமல், ஆஸ்துமா, புற்றுநோய் வரை குணமாக்கும் இயற்கை மூலிகை
  • துளசி (Tulsi) – வகைகள், சாகுபடி, மற்றும் நன்மைகள்

Tags

NPK (1) Paddy Variety (1) pappali (1) Tulsi (1) அருகம்புல் (1) ஆடிப்பட்டம் (1) ஆடிப்பட்டம் தேடி விதை (1) இஞ்சி (1) இயற்கை விவசாயம் (9) உயிர் உரங்கள் (1) உரங்கள் (1) உளுந்து (1) கிஸ்மிஸ்பழம் (1) கேரட் (1) கொத்தமல்லி (1) சவுக்கு மரம் (1) சித்தரத்தை (1) சுண்டைக்காய் (1) செம்பருத்தி (1) சோற்று கற்றாழை (1) தர்பூசணி (1) திருநீற்றுப் பச்சிலை (1) துளசி (2) துவரை (1) தூதுவளை (1) தேக்கு மரம் (1) நாவல்பழம் (1) நித்தியகல்யாணி (1) நெல் (3) நெல் ஜெயராமன் (1) பச்சைப்பயறு (1) பருத்தி (1) பாகற்காய் (1) பீட்ரூட் (1) புதினா (1) மஞ்சள் (1) மண்புழு உரம் (1) மருதாணி (1) மருத்துவ பயன்கள் (2) மாடித் தோட்டம் (6) மாதுளைப்பழம் (1) முடக்கத்தான் (1) முள்ளங்கி (1) வல்லாரை (1) விவசாயத்தின் இணைத் துறைகள் (1)

About Agriculturetrip

AgricultureTrip வலைத்தளத்திற்கு உங்களை வரவேற்கிறேன். நான் நவீன்குமார் கணினி பொறியாளராக பணியாற்றி கொண்டிருக்கிறேன். பகுதி நேர வலைதள நிர்வாகமும் செய்துகொண்டிருக்கிறேன். இந்த வலைத்தளத்தில் விவசாய உற்பத்தி முறைகள் மற்றும் விவசாய பயன்பாடு முறைகள் பற்றி தகவல்களை திரட்டி இங்கு பதிவிட்டுள்ளேன். மேலும் படிக்க…

Contact

Mahindra service station opp
Behind CSI Church
Chikkathogur
Bangalore – 560100

blogbynavin@gmail.com

Subscribe Our Newsletter

Join Our Newsletter
  Thank you for Signing Up
Please correct the marked field(s) below.
1,true,6,Contact Email,2 1,false,1,First Name,2 1,false,1,Last Name,2

Copyright © 2026 by Agriculture Trip. Developed by Navinblog