- முள்ளங்கி மேற்கு ஆசியாவைத் தாயகமாகக் கொண்டது.
- பண்டைக்காலத்தில் எகிப்து, கிரீஸ், ரோம் போன்ற நாடுகளில் முள்ளங்கி அதிகம் பயிர் செய்யப்பட்டுள்ளது.
- தற்போது இந்தியா, இலங்கை உட்பட உலகில் உள்ள வெப்பமண்டலப் பிரதேச நாடுகள் அனைத்திலும் முள்ளங்கி பயிர் செய்யப்படுகிறது.
- முள்ளங்கியை வெப்பமண்டல சமவெளிப் பகுதி, வெப்பம் குறைந்த குளிர்காலம் மற்றும் மழைக்காலங்களில் சாகுபடி செய்வதற்கு ஏற்றது.
முள்ளங்கி எப்படி பயிரிடுவது…?
- மலைப் பகுதிகளுக்கு நீலகிரி சிகப்பு, ஒயிட்ஐசிக்கில், ஜப்பானிஸ் (நீர்) ஆகிய இரகங்கள் ஏற்றவை.
- சமவெளிப்பகுதிகளுக்கு கோ 1, பூசாராஷ்மி, பூசாதேசி, ஜப்பானிஸ் ஒயிட், அர்கா நிஷாத் ஆகிய இரகங்கள் ஏற்றவை.
- மலைப்பகுதிகளில் மார்ச் மாதமும், சமவெளிப்பகுதிகளில் செப்டம்பர் மாதமும் பயிர் செய்யலாம்.
- அனைத்து வகையான மண்ணிலும் முள்ளங்கியை சாகுபடி செய்யலாம். அதிக விளைச்சல் பெற இயற்கையான எரு மிகுந்த இலேசான மணல் சார்ந்த கார அமில அளவு 5.5-6.8 கொண்ட வண்டல் நிலம் மிகவும் உகந்தது.
- நன்கு மக்கிய தொழு உரம் எக்டருக்கு 25 டன் கடைசி உழவின்போது இட்டு மண்ணுடன் நன்கு கலக்கவேண்டும். நிலத்தை நன்கு உழுது தேவையான அளவுகளில் நீர் பாய்ச்சுவதற்கு ஏற்றவாறு பாத்திகள் அமைத்து கொள்ள வேண்டும்.
- ஒரு எக்டருக்கு 10 கிலோ விதை தேவைப்படும்.
- தயார் செய்துள்ள பாத்திகளில் வரிசைக்கு வரிசை 30 செ.மீ இடைவெளியிலும், செடிக்குச் செடி 10 செ.மீ இடைவெளியிலும், 1.25 செ.மீ ஆழத்திலும் விதைகளை ஊன்றவேண்டும்.
- நீர்ப்பாசனம் விதைப்பதற்கு முன்பும், மூன்றாம் நாளும் அவசியம் பாய்ச்ச வேண்டும். அதன் பின் மண்ணில் ஈரம் காய்ந்து விடாமல் தேவைப்படும் பொழுது நீர் பாய்ச்சவேண்டும்.
- விதைப்பதற்கு முன் அடியுரமாக 25 கிலோ தழைச்சத்து, 100 கிலோ மணிச்சத்து மற்றும் 50 கிலோ சாம்பல் சத்து இடவேண்டும். விதைத்த 30 நாட்கள் கழித்து 25 கிலோ தழைச்சத்து மேலுரமாக இடவேண்டும்.
- விதைத்த 15 நாட்களுக்குப் பிறகு ஒரு கைக்களை எடுக்க வேண்டும். பிறகு வேர்களின் வளர்ச்சிக்கு, செடிகள் முளைத்த 15-20 நாட்களில் அதிக நெருக்கமாக உள்ள செடிகளைக் கலைத்து விடவேண்டும்.
- விதைத்த 45 நாட்களில் கிழங்குகள் அறுவடைக்கு தயாராகிவிடும். அறுவடைக்கு முன் இலேசாகத் தண்ணீர் பாய்ச்சவேண்டும். களைக்கொத்திகள் மூலம் மண்ணைக் கொத்தி செடிகளை வேருடன் பிடுங்கி எடுக்க வேண்டும்.
- ஒரு எக்டருக்கு 45-60 நாட்களில் 20-30 டன்கள் வரை மகசூல் கிடைக்கும்.
முள்ளங்கி பயன்கள்
- முள்ளங்கியில் பைபர், ரிபோபிளேவின், பொட்டாசியம், காப்பர், விட்டமின் பி6, மக்னீசியம், கால்சியம், மாங்கனீஸ் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.
- முள்ளங்கியில் நார்சத்துக்கள் அதிகமாக இருப்பதால் மலச்சிக்கல் விளைவுகளை எளிதில் தீர்க்கிறது. மேலும் இது தளர்வான குடலை உறுதிபடுத்துவதற்கு உதவுகிறது. கல்லீரல் மற்றும் பித்தப்பை ஆகியவற்றிற்கு உதவுகிறது.
- குழந்தைகளுக்கு, சிறு வயதிலிருந்தே முள்ளங்கியை உணவில் சேர்த்து வந்தால் ஞாபக சக்தி பெருகும், மூளை சிறந்த வளர்ச்சி அடையும். முள்ளங்கி சாப்பிட்டால் கலோரி எண்ணிக்கையை நிறைவு செய்து எளிதில் பசியை நிறைவு செய்கிறது.
- முள்ளங்கியில் கார்போஹைட்ரேட் குறைவாக உள்ளதால் இது எடையை இழக்கச் செய்கிறது.
- முள்ளங்கி இருதய நோய்களை குணமாக்க உதவுகின்றது.
Rajesh V says
Mullangi , Boomiku adiel veliakkudiathu