• About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Disclaimer

Agriculture Trip

Best Agriculture Blog in Tamil

  • Home
  • வேளாண்மை
      • காய்கறிகள்
      • கீரைகள்
      • பழங்கள்
      • தானியங்கள்
      • மரங்கள்
      • பூக்கள்
      • கிழங்கு வகைகள்
      • எண்ணெய் வித்துக்கள்
      • மலைத்தோட்டப் பயிர்கள்
      • மூலிகைப் பயிர்கள்
      • இதர சாகுபடி
  • மாடித் தோட்டம்
  • பயிர் பாதுகாப்பு
    • உரங்கள்
    • அரசு மானியம் / திட்டங்கள்
    • மண்
  • கால்நடைகள்
  • இயற்கை மருத்துவம்
    • மருத்துவ பயன்கள்
    • அழகு குறிப்புகள்
    • ஆண்கள்
    • பெண்கள்
    • குழந்தைகள்
  • மற்றவை
    • நெல்
    • விவசாய புகைப்படங்கள்
    • சாதனையாளர்கள் - விவசாயிகள்
100 முக்கிய இயற்கை முறை மருத்துவ குறிப்புகள் Agriculture Trip

100 முக்கிய இயற்கை முறை மருத்துவ குறிப்புகள்:

March 12, 2018 By Navinkumar V 3 Comments


0 Shares
Share
Tweet
Share

100 பொதுவான பிரச்சனைகளுக்கு இயற்கை முறை தீர்வுகளை இங்கு பட்டியலிட்டுளோம். அனைவரும் பயன் பெறுங்கள். மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள். வருமுன் காப்போம். இயற்கையை நேசிப்போம்.

1. இருமல் சளி குணமாக::

சித்தரைத்தையும் பனங்கற்கண்டு இரண்டையும் சம அளவு எடுது கஷாயம் வைத்து மூன்று வேளைக்கு தொடர்ந்து மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் வரட்டு இருமல் சளி குணமாகும்.

2. தலை சுற்றல் குணமாக:

சுக்கு, மிளகு, திப்பிலி, விலாமிச்சை வேர், சீரகம் ஆகியவைகளை 5 கிராம் வீதம் பவுடராக்கி தினசரி காலை, மாலை அரை கரண்டி சாப்பிட தலை சுற்றல் குணமாகும்.

3. இருமல் குணமாக:

ஜலதோஷம், காய்ச்சல், தலைவலிக்கு பனங்கிழங்கை அவித்து காயவைத்து இடித்து பொடியாக்கி பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் குணமாகும்.

4. வறட்டு இருமல் குணமாக:

கருவேலமரக் கொழுந்தை கசக்கி சாறு எடுத்து வெந்நீரில் கலந்து சாப்பிட வறட்டு இருமல் குறையும். வெள்ளை முதலான நோய்களும் குணமாகும்.

5. ஆஸ்துமா, மூச்சுத்திணறல் குணமாக:

முசுமுசுக்கை இலையை அரித்து வெங்காயத்துடன் நெய் விட்டு வதக்கி பகல் உணவில் சேர்த்து சாப்பிட ஆஸ்துமா, மூச்சுத்திணறல் குணமாகும்.

6. சளிகட்டு நீங்க:

தூதுவளை, ஆடாதோடா, சங்கன் இலை, கண்டங்கத்திரி இலை, சுக்கு, மிளகு, திப்பிலி சேர்த்து கஷாயம் செய்து சாப்பிட இறைப்பு, சளிகட்டு நீங்கும்.

7. தலைபாரம் குறைய:

நல்லெண்ணையில் தும்பை பூவை போட்டு காய்ச்சி தலையில் தேய்த்து குளித்து வர தலைபாரம் குறையும்.

8. மார்புச்சளி நீங்க:

ஏலப்பொடியை நெய்யில் கலந்து காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிட மார்புச்சளி குணமாகும்.

9. மூக்கடைப்பு நீங்க:

ரோஜா மலரை முகர்ந்தால் மூக்கடைப்பு நீங்கி விடும்.

10. ஜலதோஷம் குணமாக:

முருங்கை பிஞ்சுகளை நசுக்கி சாறெடுத்து அதில் தேன் கலந்து 2 வேளை வீதம் 3 நாட்கள் சாப்பிட குணமாகும்.

11. வாந்தி நிற்க:

துளசி சாறு, கல்கண்டு சேர்த்து காய்ச்சலின் போது கொடுக்க வாந்தி நிற்கும்.

12. குமட்டல்:

கசப்பான மருந்து உட்கொண்டவுடன் வெற்றிலை காம்பை வாயிலிட்டு சுவைத்தால் குமட்டல் இருக்காது.

13. பித்தம் நீங்க:

மாதுளம்பழம் சாப்பிட்டு வர அறிவு விருத்தி, ஞாபக சக்தி எலும்பு வளர்ச்சி, பித்த சம்பந்தமான வியாதி நீங்கும்.

14. நுரையீரல் புற்றுநோய் வராமல் தடுக்க:

முசுமுசுக்கை இலையை பொடியாக நறுக்கி மாதம் 2 தடவை சாப்பிட வேண்டும்.

15. அம்மை நோயைத் தடுக்க:

10 கிராம் வெந்தயம், மிளகு 5 தட்டி பொடி செய்து தண்ணீர் விட்டு காய்ச்சி காலை, மாலை 3 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் அம்மை நோய் பரவாது.

16. பித்தவெடிப்பு மறைய:

காலில் பித்தவெடிப்பா? கவலையை விடுங்கள். தேனையும், சுண்ணாம்பையும் ஒன்றாய்க் குழைத்து பித்தவெடிப்பில் தடவி வந்தால் பித்தவெடிப்பு இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.

17. தொண்டை வலிக்கு:

பால் இல்லாத டீயுடன் கொஞ்சம் எலுமிச்சை சாறு விட்டு குடித்து பாருங்கள் தொண்டை வலி நீங்கும்.

18. இருமல் தொல்லைக்கு:

தூங்க போகும் முன் 1 கப் சூடான தண்ணீ­ரில் 1 ஸ்பூன் உப்பு போட்டு வாய் கொப்பளிக்கவும். இது இருமல் தொல்லையையும் நீக்கும்.

19. கண்ணாடி துண்டினால் காயம் ஏற்பட்டால்:

கண்ணாடி துண்டினால் காயம் ஏற்பட்டால் வாழைபழத்தோலை அந்த காயத்தின் மீது வைத்து காட்டுங்கள். ரத்த போக்கு நின்று காயம் விரைவில் ஆறும். அதற்கு முன் காயத்தை நன்றாக வெதுவெதுப்பான நீரால் கழுவவேண்டும்.

20. இருமல் சளிக்கு:

தூதுவளை இலை 15 கிராம் அளவில் சேகரித்து 500 மில்லி தண்­ணீரில் போட்டு 200 மில்லியாக சுண்டக் காய்ச்சி வடிகட்டி 30 முதல் 40 மில்லி வரை ஒரு நாளைக்கு மூன்று வேளை இந்த கஷாயத்தைச் சாப்பிட்டு வந்தால், இருமல், இரைப்பு, சளியுடன் கூடிய காய்ச்சல், சயரோகக் காய்ச்சல் குணமாகும்.

21. கட்டிகள் உடைய:

மஞ்சள், சுண்ணாம்பு, விளக்கெண்ணெய் மூன்றையும் நன்றாக குலைத்து கட்டிகள் உள்ள இடத்தில் பற்று போட்டால் கட்டிகள் சீக்கிரம் பழுத்து உடைந்து விடும்.

22. பேன் தொல்லை நீங்க:

வசம்பு, வேப்பிலை இரண்டையும் அரைத்து தலையில் தேய்த்து 30 நிமிடங்கள் கழித்து குளித்து வந்தால் தலையில் உள்ள பேன் நீங்கும்.

23. மேனி பளபளப்பு பெற:

ஆரஞ்சுப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மேனி பளபளப்பு பெறும்.

24. தும்மல் வராமல் இருக்க:

தூதுவளை பொடியில் மிளகு பொடி கலந்து தேனில் (அ) பாலில் சாப்பிட்டால் தும்மல் வராது.

25. கரும்புள்ளி மறைய:

எலுமிச்சை சாறு மற்றும் கிளிசரின் கலந்து கரும்புள்ளிகள் மீது தடவிவர, அவை நாளடைவில் மறைந்து விடும்.

26. தொண்டை கரகரப்பு நீங்க:

அதிமதுரத் துண்டு ஒன்றை வாயில் அடக்கிக் கொண்டிருந்தால் வாயில் உமிழ் நீர் சுரக்கும். இந்த உமிழ்நீரை உள்ளுக்கு விழுங்கிக் கொண்டிருந்தால் தொண்டைக் கரகரப்பு நீங்கும். குரல் கம்மல் நீங்கி விடும். தொண்டையில் உள்ள சளிக்கட்டு கரைந்து விடும்.

27. கருத்தரிக்க உதவும்:

அதிமதுரம், திராட்சை இவை இரண்டையும் சமமாகப் பொடி செய்து 50 – 100 கிராம் எடுத்து தண்ணீ­ரில் அரைத்து பாலில் கலக்கி பெண்களின் மாதவிடாய் தொடங்கிய நாள் முதல் ஐந்து தினங்கள் சாப்பிட்டு வந்தால், ஆரோக்கியமான பெண்களுக்குக் கருத்தரிக்கும். கருத்தரிக்கும் வரை 2-3 மாதங்கள் சாப்பிட்டால் நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.

28. குஷ்டநோய் குணமாக:

வல்லாரை இலையை பொடி செய்து பரங்கி சக்கை தூளையும் கலந்து வைத்து காலை, மாலை, இரவு மூன்று வேளை வெண்ணெய்யுடன் கலந்து ஒரு வருடம் தொடர்ந்து சாப்பிட்டு வர முழு குணமாகும்.

29. சர்க்கரை நோய்:

ரோஜாப்பூ, கடுக்காய், ஜாதிக்காய், தான்றிக்காய் சேர்த்து அரைத்து காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு நீராகாரம் குடித்து வந்தால் சர்க்கரை நோய் குணமாகும்.

30. யானைக்கால் நோய் குணமாக:

பசுவின் சிறுநீரும், மஞ்சள்தூள், வெல்லம் கலந்து சாப்பிட்டு வந்தால் யானைக்கால் நோய் வராது.

31. கெட்டு போய் இருக்கும் ஈரலை குணப்படுத்த:

கரிசலாங்கண்ணி கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வர ஈரல் வியாதி குணமாகும்.

32. மஞ்சள் காமாலை நோய் குணமாக:

தும்பை இலைகளை அரைத்து தலையில் பற்று போட்டு மோரில் கலந்து 3 நாட்கள் சாப்பிட மஞ்சள் காமாலை குணமாகும்.

33. பைத்தியம் குணமாக:

கீழாநெல்லி சமூலம், கடுக்காய் தோல், வேப்பம் பிசின் பசும்பால் விட்டு அரைத்து நல்லெண்ணை கூட்டி அடுப்பில் வைத்து சூடாக்கி இறக்கி வாரம் ஒருமுறை தலையில் தேய்த்து குளித்துவர பைத்தியம் குணமாகும்.

34. பேதி குணமாக:

மாஸகொட்டை பருப்பை பொடி செய்து பசும்பாலில் கலந்து கொடுத்தால் பேதி நிற்கும்.

35. இரத்தம் உறைதல் குணமாக:

நெல்லிக்காய் தொடர்ந்து சாப்பிட்டு வர இரத்தம் உறைவதை தடுக்கலாம்.

36. இரத்தம் விருத்தியாக:

செம்பருத்தி பூவை வெறும் வயிற்றில் சாப்பிட ரத்தம் விருத்தியாகும்.

37. இரத்த சோகையை போக்க:

தினசரி கொய்யாப்பழம் சாப்பிட்டு வந்தால், இரத்த சோகையில் இருந்து விடுபடலாம். மேலும், பீர்க்கன்காய் வேர் கஷாயம் சாப்பிட, ரத்தசோகை நீங்கும்.

38. உடல் வலி குணமாக:

வில்வ இலையும், அருகம்புல்லும் இடித்து சாறு எடுத்து காலை, மாலை 1 அவுன்ஸ் சாப்பிட்டு வர உடல்வலி குணமாகும்.

39. உடற் சூடு அகல:

கொத்து மல்லி விதைக் கஷாயத்தில் செந்துளசி சாற்றை சேர்த்து உட்கொண்டு வந்தால் அதிகரித்த உடற்சூடு சமநிலை அடையும்.

40. மந்தபுத்தி மாற:

வல்லாரை இலை தூள் 100 கிராம், வசம்பை 15 கிராம் இடித்து தூள் செய்து ஒன்றாக கலந்து தினசரி 5 கிராம் தேனுடன் சாப்பிட்டு வந்தால் மந்தபுத்தி மாறும்.

41. மூளை நல்ல நிலையில் இயங்க:

நாள்தோறும் பெரிய நெல்லி ஒன்றை தவறாமல் உண்டு வந்தால் நம் மூளை நல்ல நிலையில் இயங்கும்.

42. சுவாசத்தை எளிதாக்கும் குங்குமப்பூ!

தலைவலி, மூக்கு நீர் ஒழுகுதல், அதிக தாகம், குமட்டல், வாந்தி, உடல் எரிச்சல், சூதக அழுக்கு, ஆண்மைக் குறைவு ஆகிய வியாதிகளுக்கு குங்குமப் பூ அரிய மருந்தாகும். குங்குமப் பூவை 1 பங்கு எடுத்து, அதை 80 பங்கு தண்­ணீரில் ஊற வைத்து வடிகட்டி, அதில் 30 மிலி அளவு காலை, மாலை இருவேளை அருந்தி வர தலைவலி, மூக்கு நீர் ஒழுகுதுல், அதிக தாகம், குமட்டல், வாந்தி, உடல் எரிச்சல், சூதக அழுக்கு, ஆண்மைக் குறைவு ஆகியவை நீங்கும். குங்குமப் பூவுடன் தேன் கலந்து தினமும் இருவேளை உட்கொண்டு வர ஆஸ்துமா முதலிய சுவாச நோய்களை போக்கி சுவாசத்தை எளிதாக்கும். அம்மை நோய் கண்டவுடன் துளசி இலைகளையும், குங்குமப்பூவையும் சேர்த்து அரைத்து உட்கொள்ள கொடுக்க அம்மை நோய் குணமாகும்.

குங்குமப் பூவில் போலி நிறைய உண்டு. தேங்காய் துருவலில் வண்ணச்சாயத்தை ஏற்றி, காய வைத்து சிறிது ‘saffron’ essence கலந்து விற்கிறார்கள். அவை மலிவாக கிடைக்கும். தரமான குங்குமப்பூ ஒரு கிராம் விலை சுமார் ரூ. 500 இருக்கும். உண்மையான குங்குமப்பூவைத் தேர்வு செய்து வாங்கிப் பயனடையுங்கள்!

43. நோய் எதிர்ப்பு சக்திக்கு……

கரிசலாங்கண்ணி கரிசாலை, அரிப்பான் பொற்கொடி போன்ற பெயர்களால் வழங்கப்படுகிறது. கரிசலாங்கண்ணிக் கீரையில் தங்கச் சத்து, இரும்புச்சத்து, வைட்டமின் ‘ஏ’ அதிகம் உள்ளன. கரிசலாங்கண்ணியை எளிய முறையில் உபயோகித்தாலே பல நன்மைகளை அடையலாம். வாரத்துக்கு இரண்டு நாள், இந்த கீரையைச் சமையல் செய்து சாப்பிட்டாலும் இதன் சாற்றை 100 மில்லியளவு சாப்பிட்டு வந்தாலும், உடலுக்கு எந்த நோயும் வராமல் நோய் எதிர்ப்புத் தன்மை உண்டாகும்.

முதுமை தோற்றத்தைக் கட்டுப்படுத்தும். கண்பார்வை கூர்மையடையும். பல் நோய்கள் வராமல் தடுக்கும். கீரையுடன் பருப்பு மட்டும் சேர்த்து பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறையும். இதை இரவு வேளைகளில் சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது. பல கொடிய வியாதிகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம். மஞ்சள் காமாலை முதல் அனைத்து வகையான காமாலை நோய்களுக்கும் மிக முக்கியமானது கரிசலாங்கண்ணிக் கீரையாகும்.

44. உடற்சூட்டுக்கு………

வெந்தயம் சிலருக்குப் பிடிக்கும், சிலருக்குப் பிடிக்காது. ஆனால் பிடிக்குதோ பிடிக்கவில்லையோ உடற் சூடு உள்ளவர்கள் இதனை சாப்பிட்டால் உங்களுக்கு நன்மை கிடைக்கும். மோரில் வெந்தயத்தை போட்டு 10 நிமிடம் விட்டு சாப்பிட்டு வந்தால் உடற்சூடு தணிந்து விடும். ஒவ்வொரு நாளும் ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை தூளாக்கியோ அல்லது அப்படியே சாப்பிட்டு வந்தால் உடலிலுள்ள சர்க்கரையினளவு கட்டுப்படுத்தப்படும்.

குறிப்பாக நீரிழிவு நோயுள்ளவர்கள் வெறும் வயிற்றில் இந்த வெந்தயத்தை தண்ணீ­ரில் ஊறவைத்து காலையில் பருகி வர நல்ல மாற்றம் கிட்டும். பொதுவாக பாலூட்டும் தாய்மாருக்கு பால் நன்றாக சுரக்க வறுத்த வெந்தயத்தை இடித்துக் கொடுக்கலாம். அதுமட்டுமல்லாமல் வயிற்றுப் போக்கு இருப்பின் அதற்கும் வெந்தயம் சிறந்த மருந்து. பெண்களுக்கு மாதவிடாயின் போது வெந்தயம் கொடுத்தால் நன்மை பயக்கும். இவற்றோடு காய்ச்சல், சிறுநீர்ப் பிரச்சினைகளுக்கும் நிவாரணியாகக் காணப்படுகின்றது இந்த வெந்தயம். மேலும் தலைக்கு வைக்கும் எண்ணெய்க்குள் வறுத்தோ அல்லது சாதாரணமாகவோ வெந்தயத்தை போட்டுவைத்துக் கொண்டால் அது நல்ல குளிர்ச்சியைத் தரும். மொத்தத்தில் வெந்தயம் என்பது நன்மை தரும் பொருளாகக் காணப்படுகின்றது.

பெண்களுக்கு முடியழகுதான் முதன்மையானது. தலை முடி கொட்டுவதை நிறுத்த, வெந்தயத்தை தண்­ணீரில் ஊற வைத்து வெண்ணெய் போல அரைத்து, தலையில் தேய்த்து, அரைமணி நேரம ஊற வைத்து குளிக்க வேண்டும்.

45. ரத்த மூலத்திற்கு பிரண்டை:

பிரண்டை என்பது தற்போது பலருக்கும் மறந்து போயிருக்கும் ஒரு செடியாகும்.

பிரண்டை துவையல் செய்து சப்புக் கொட்டி சாப்பிட்ட காலம் மீண்டும் வருமா என்று ஏங்க வைக்கும் அளவிற்கு பிரண்டை மறைந்து வருகிறது.

இந்த பிரண்டை ரத்த மூலத்திற்கு அருமருந்தாக உள்ளது.

இளம்பிரண்டையை நறுக்கி, நெய்விட்டு வதக்கி நன்கு அரைத்து, காலை மாலை இருவேளையும் நெல்லிக்காய் அளவிற்கு உண்டு வர வேண்டும்.

இப்படி ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் ரத்த மூலம் குணமாகும்.

46. மாதவிடாய் பிரச்சினைகளுக்கு:

விளக்கெண்ணெயுடன் துளசிச் சாறு, வெங்காயச் சாறு, எலுமிச்சம் சாறு சம அளவு எடுத்து காய்ச்சிக் கொண்டு 15 மில்லி அளவு உட்கொண்டு வர பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கோளாறுகள் அகலும்.

மாதவிடாய் சரியாக வெளிப்படாமல் வயிற்றுவலி ஏற்படுவதைத் தடுக்கவும் விளக்கெண்ணெய் பயன்படுகிறது.

சிலருக்கு குழந்தைப் பேற்றுக்குப் பின்னர் சரியாக மாதவிடாய் ஆகாமல் தொடர்ந்து வயிற்று வலியை ஏற்படுத்தும்.

அப்படி இருக்கும்போது, அடிவயிற்றில் விளக்கெண்ணெய் தடவி, அதன் மீது ஆமணக்கு இலைகளை வதக்கி பொறுக்கக் கூடிய சூட்டில் போட்டு வர உதிரப் போக்கு ஏற்பட்டு வயிற்று வலி தீரும்.

பொதுவாக பூப்பெய்திய பெண்களுக்கு வெறும் வயிற்றில் விளக்கெண்ணெய் கொடுக்கும் வழக்கம் இருந்தது. இது கர்ப்பப்பை தொடர்பான கேளாறுகளை சரி செய்யும். ஆனால் அந்த வழக்கம் நாளடைவில் குறைந்து வருவதே பல கர்ப்பப்பை பிரச்சினைகளுக்குக் காரணமாக உள்ளது.

47. இரும்புச் சத்து நிறைந்த குங்குமப் பூ:

பிரசவ வலி வந்தும், குழந்தை வெளியில் வராமல் இருக்குபோது, 4 கிராம் குங்குமப் பூவை பாலில் கரைத்து குடிக்கக் கொடுத்தால் உடனடியாக சுகப்பிரசவம் ஆகும்.

கர்ப்பிணிகள் வெற்றிலையுடன் சிறிது குங்குமப் பூவை சேர்த்துச் சாப்பிட்டால் எளிதில் ஜீரணமாகும்.

குழந்தை பிறந்ததும், 3 கிராம் குங்குமப் பூவை விழுதாக அரைத்து சாப்பிட்டால், வயிற்றில் இருக்கும் அழுக்குகள் நீங்கும்.

அதிக வயதைக் கடந்தும் பூப்பெய்தாத பெண்களுக்கு தினமும் பாலில் குங்குமப் பூவை கலந்து கொடுத்து வந்தால் ஆறே மாதத்தில் பூப்படைவர்.

48. பல் வலியைத் தீர்க்க:

பற்கள் வலிமையாகவும், பிரச்சினை இன்றி இருக்கவும் பல வகையான பற்பசைகளும், பற்பொடிகளும் வந்துவிட்டன. ஆனால் இயற்கை முறைக்கு முன்னாடி இவை எதுவும் நிற்க முடியாது.

அந்த காலத்தில் புங்கங் குச்சிகளைக் கொண்டு கிராமத்தினர் பல் துலக்கினர். அதில் இருக்கும் மருத்துவத் தன்மை அறிந்துதான் அப்படி செய்தார்கள்.

பல் வலிமையாக புங்கம் பட்டையை இடித்து தூளாக்கி, நீர்விட்டு காய்ச்சி பாதிகாய வற்ற வைக்க வேண்டும்.

கால் லிட்டர் நல்லெண்ணெயில் 10 கிராம் கடுக்காய் தூள் சேர்த்து காய்ச்சி, அது கொழகொழவென்று வரும்போது, அதில் புங்கம் கஷாயத்தை ஊற்றி கொதிக்கவிட்டு இறக்கிவிடவும்.

இதனைக் கொண்டு தினமும் 2 வேளை வாய் கொப்பளித்து வர பல் வலி, பல் கூச்சம் நீங்கிவிடும்.

பல் சொத்தையாவதில் இருந்து தடுக்கவும், ஈறு உறுதியாகவும் உதவும்.

49. பூண்டு:

வாரம் ஒரு முறை பூண்டை உணவில் சேர்த்துச் சாப்பிடவும்.

50. தேனினும் இனியது:

1. நெஞ்சுவலி வந்தவுடன் ஒரு கரண்டி சுத்தமான தேன் உட்கொள்ள, வலி வந்த இடம் தெரியாமல் மறைந்து விடும்.

2. மிளகுக் கஷாயத்துடன் தேனைக் கலந்து உட்கொள்ள அஜீரணம் குணமாகும்.

3. குழந்தைகள் சளி, ஜலதோஷத்தால் அவதிப்பட்டால் மாதுளம் பழச்சாறுடன் சிறிது தேனைக் கலந்து கொடுக்கவும்.

4. குப்பைமேனி இலையின் சாறுடன் தேனைக் கலந்து கட்டிகளின் மீது தடவினால் கட்டிகள் உடைந்து குணமாகும்.

5. நெருப்பு காயத்திற்கு தேன் உகந்தது.

6. உணவு உண்டவுடன் ஒரு கரண்டித் தேன் அருந்தினால் உடல் சீராக இருக்கும். உடல் பருக்க இரவு படுக்குமுன் பாலுடன் தேன் கலந்து சாப்பிட வேண்டும்.

7. விளாம்பழச்சாறும், தேனும் இருமலை நிறுத்தும்.

51. வாய்ப்புண்ணுக்கு கடுக்காய்:

1. வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வெந்தயத்துடன் அரை கப் தயிர் குடித்தால் உஷ்ணம் தணிந்து மலச்சிக்கல் ஏற்படாது. நீராகாரமும், வெந்தயமும் தினம் காலையில் அருந்துவதும் நல்லது.

2. குளவி கொட்டிய இடத்தில் சுண்ணாம்பு அல்லது வெங்காயத்தை தடவவும்.

3. கடுகு, மஞ்சள், ஓமம் முதலியவற்றை அரைத்து, நகச்சுற்றின் மேல் கட்டினால் வலி குறையும்.

4. வாய்ப்புண்ணுக்கு கடுக்காயை வாயில் ஒதுக்கிவைக்க புண் விரைவில் ஆறும்.

5. கால் வெடிப்பு உள்ளவர்கள், குளிக்கும் போது காலை தேய்த்துக் குளிக்கவும். மஞ்சள் தேய்த்துக் குளித்தால் கால் வழுவழுப்பாக ஆகிவிடும்.

52. புழுக்களை ஒழிக்கும் வேப்பங்கொழுந்து:

வேப்பங்கொழுந்து பிணி தீர்க்கும் மருந்து. சிறந்த கிருமி நாசினி. வேப்பங்கொழுந்தை சிறிது மஞ்சள் தூளுடன் சேர்த்து அரைத்து நல்ல கெட்டியான விழுதாக்கி விடவும். அரைத்த கொழுந்தை துணிவைத்து மூடிய பாத்திரத்தில் பனி படும்படி ஜன்னல் அல்து வேறு இடத்தில் வைக்கவும். காலையில் எழுந்தவுடன் அருநெல்லி அளவு குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். நெல்லிக்கனி அளவு பெரியவர்களும் சாப்பிடலாம். காலையிலேயே அரைத்து உடனேயும் சாப்பிடலாம். எல்லாவித புழுக்களையும் ஒழிக்கும் சிறந்த மருந்து. மாதம் ஒருமுறை சாப்பிடலாம்.

காய்ச்சல் என்று குழந்தைகள் படுத்துவிட்டால், அவசியம் காலையில் அரைத்து வேப்பங்கொழுந்தைக் கொடுங்கள். மந்தக் காய்ச்சல், சளிக்காய்ச்சல், அம்மை வரும் முன்னர் வரும் காய்ச்சல், டைபாயிட் காய்ச்சல் எதுவாக இருப்பினும், காய்ச்சலில் படுத்த குழந்தைகளுக்கு மூன்று நாள் காலை அருநெல்லி அளவு வேப்பங்கொழுந்து கொடுத்தால், அதனால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது. “விருந்தும் மருந்தும் மூன்று தினம் மட்டுமே” எனவே மூன்று நாட்கள் சாப்பிட்டால் நலம்.

53. கிருமிகளை ஒழிக்கும் சுண்டைக்காய்:

சுண்டைக்காய், கசப்புச்சுண்டை, கறிச்சுண்டை என்று கசப்புடனும் கசப்பின்றியும் கிடைக்கின்றது. சுண்டக்காயை வாங்கி மோரில் ஊறவைத்து, வற்றலாகப் போட்டு வறுத்தும், குழம்பில் சேர்த்தும் சாப்பிடலாம். கசப்பு சுண்டைக்காய், கறிச்சுண்டைக்காய் இரண்டுமே வாயுத் தொந்தரவு மற்றும் வயிற்றில் உள்ள கிருமிகளுக்கு நல்ல மருந்து ஒரு குடும்பத்தினருக்கு (5 பேர் அடங்கியது) வருடத்திற்கு 2 லிட்டர் கசப்பு சுண்டைக்காய் உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டு வர, கிருமித் தொந்தரவு இருக்காது அமிபீயாஸிஸ் போன்ற கிருமிகளையும் சுண்டைக்காய் விரட்டி விடும்.

54. முள் குத்தி வலி எடுத்தால்:

இரும்பு, முள் அல்லது கண்ணாடி குத்தி வேதனை இருந்தால் மிளகாய் வற்றல் 4 அல்லது 5, அம்மியில் வைத்து தண்ணீர் தெளித்து மசிய அரைக்கவும். வாணலியில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் விழுதைப் போட்டுக் கிளறவும். வதக்கி கலர் சற்று மாறியதும், ஒரு சுத்தமான துணியில் அதைத்தட்டி வேதனை உள்ள இடத்தில் ஒத்தடம் கொடுத்துவிட்டு அப்படியே அதை துணியுடன் வைத்துக் கட்டி விடவும். அல்லது வெங்காயத்தை உப்பு மஞ்சள் சேர்த்து தட்டி ஒரு கரண்டியில் நல்லெண்ணெயைக் காய வைத்து துணி முடிப்பை அதில் முக்கி இளம் சூட்டில் ஒத்தடம் கொடுத்து அதையே கட்டி விடவும்.

55. தலை வலிக்கு:

மிளகைப் பாலில் அரைத்துக் கொதிக்க வைத்துப் பற்றுப் போடவும். கை, கால்களை நீட்டி சவாசனம் செய்வது போல் உடல், மனம் இரண்டையும் நன்கு அமைதியுறச் (relax) செய்து ஐந்து நிமிடம் படுத்து எழுந்தால் தலைவலி குணமாகும்.

இஞ்சிச்சாறு, நல்லெண்ணெய் ஆகிய இரண்டையும் சம அளவு எடுத்து ஒன்று சேர்த்துக் காய்ச்சி சீசாவில் வைத்துக் கொள்ளவும். தைலத்தை தலையில் தடவி 20 நிமிடம் வைத்திருந்து பின் பயத்தமாவு அரப்புத்தூள் தேய்த்துக் குளிக்கவும்.

56. தலைச் சுற்றலுக்கு:

முருங்கை இலைக் கொழுந்தைத் தாய்ப்பால் விட்டரைத்து நெற்றியில் பற்றுப்போடவும். சுக்கு, மிளகு, திப்பிலி, விலாமிச்சம் வேர், கிராம்பு இவைகளை வகைக்கு 5 கிராம் எடுத்து சூரணமாக்கி, தினம் இரண்டு வேளை சாப்பிடவும்.

57. தலை கனத்துக்கு:

சுக்குப் பற்றுப் போடலாம். வசம்பு பற்றுப் போடலாம். வால்மிளகை சுடு நீரில் அரைத்துப் பற்றுப் போடலாம்.

58. அஜீரணம் அகல:

ஓம வாட்டரும், தேனும் கலந்து குடிக்கலாம். அல்லது ஓமத்தை வாணலியில் பொரித்து, தண்ணீரில் வேகவிட்டு அந்த தண்ணீரையும் வடிகட்டிக் குடிக்கலாம். அல்லது சோடா, எலுமிச்சம்பழம் உப்பு போட்டு அருந்தினாலும் வயிற்றுவலி குறைந்து ஜீரணம் ஏற்படும்.

59. ஆறாத ரணங்களுக்கு:

மஞ்சளைச் சுட்டு பொடி செய்து காலையிலும், மாலையிலும் தேங்காய் எண்ணெயில் குழப்பி புண்ணில் பூசவும். அல்லது மருதாணி எண்ணெய் போடலாம்.

60. இருமலுக்கு:

வால் மிளகு, அதிமதுரம், சித்தரத்தை, திப்பிலி (ஒரு சிறிது மட்டுமே). துளசியிலை இவற்றை அவித்து சாறு எடுத்து பனங்கற்கண்டுடன் ஒரு நாளைக்கு மூன்று வேளை அருந்தலாம்.

61. உடல் வலி தீர:

துளசியிலை, மிளகுப்பொடி, சுக்குப்பொடி இவைகளை தண்ணீரில் போட்டு கஷாயமாக்கி பாலும், சர்க்கரையும் சேர்த்துப் பருகவும்.

62. உடல் அழகுற:

ஒரு டம்ளர் பாலில் குங்குமப்பூ போட்டுக் காய்ச்சி வெதுவெதுப்பான சூட்டில் 1 தேக்கரண்டி தேன் விட்டுப் பருக ஒரு மண்டலத்தில் உடல் தேஜஸ் பெறும்.

63. தொண்டை கட்டி குரல் பேச எழும்பாவிடில்:

சுண்ணாம்பை கால் பெருவிரலில் தடவவும். அல்லது மஞ்சள், சுண்ணாம்பு, தேன் மூன்றையும் மசித்து கழுத்தில் தடவவும். அல்லது உப்பும், வெந்நீரும் கொண்டு இரண்டு மூன்று முறை கொப்பளிக்கவும்.

64. மூக்குச்சளியை விரட்ட:

சாம்பிராணி, மஞ்சள், சீனி கொண்டு புகைப்பிடிக்கவும்.

65. வறட்டு இருமல்:

வறட்டு இருமலாக இருக்கிறது. கொஞ்சூண்டு தேனை (ஒரு ஸ்பூன்) எடுத்து அப்படியே வாயில் விடுங்கள். அடுத்த சில நிமிடங்களில் இருமல் காணாமல் போய் விடுவதைப் பார்த்து ஆச்சரியப்படுவீர்கள். குழந்தைகளுக்கு இந்த நாட்டு மருந்து செமத்தியான பலனைக் கொடுக்கும்.

இன்னும் கொஞ்சம் விரிவான மருந்து வேண்டும் என நினைப்போர் – தேன், எலுமிச்சம் பழச்சாறு, இஞ்சிச் சாறு ஆகியவற்றை கலக்கி சாப்பிடலாம். சரசரவென இருமலும், சளியும் ஓடிப் போய் விடும்.

66. தேனீ கொட்டிடுத்தா:

தேனீக்கள் கொட்டினால், அய்யோ உயிர் போச்சே என்றுதான் பலரும் அலறுவார்கள். அதற்கு அவசியமே இல்லை. நாம் அனைவருமே பல் துலக்கும் பழக்கம் கொண்டவர்கள். எனவே கட்டாயம் டூத்பேஸ்ட் வீட்டில் இருக்கும். அந்த பேஸ்ட்டை எடுத்து தேனீ கொட்டிய இடத்தில் அப்படியே ஸ்மூத்தாக தடவுங்கள். அடுத்த சில நொடிகளில் வலி பறந்து போய் விடுவதைப் பார்ப்பீர்கள். டூத் பேஸ்ட்டில் இருக்கும் அமிலத்தை நிலைப்படுத்தும் வேதிப்பொருள் மற்றும் எரிச்சலைக் குறைக்கக் கூடிய தன்மையே இதற்குக் காரணம்.

67. காது வலிக்கு:

அம்மா காது வலிக்குது என்று அவ்வப்போது குழந்தைகள் அலறுவது அனைத்து வீடுகளிலும் சாதாரண விஷயம்தான். ஆனாலும், குழந்தைகளுக்கு காது வலித்து அழும்போது நாம் நிம்மதியாக இருக்க முடியாதே.
அப்படிப்பட்ட நேரங்களில் சற்றும் பதட்டப்படாதீர்கள். வீட்டில் ஆலிவ் எண்ணை இருக்கிறது. இல்லாவிட்டால் அதை முதலில் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.

ஒரு சிரிஞ்சை எடுத்து அல்லது இதற்கு சமமான ஒன்றை (சுத்தமாக இருப்பது அவசியம்) எடுத்து அதன் மூலம் 2 அல்லது 4 சொட்டு (2 வயது குழந்தைகளுக்கு) இதமான சூட்டில் உள்ள ஆலிவ் எண்ணையை குழந்தையின் காதில் மெல்ல விடுங்கள். பெரிய குழந்தைகளாக இருந்தால் அதிகபட்சம் 10 சொட்டு வரை விடலாம். காது வலி சட்டென பறந்து போய் விடுமாம்.

68. பெருவிரல் நகத்தில் பூஞ்சைத் தொற்றா:

பெரு விரல் நகத்தில் பூஞ்சைத் தொற்று வந்து நகம் மஞ்சள் கலராக மாறி அசிங்கமாக இருக்கிறதா. கவலையே வேண்டாம். விக்ஸ் வேப்போரப் உங்களுக்குக் கை கொடுக்கும். சளி, ஜலதோஷத்திற்கு மட்டும் வேப்போரப் உதவும் என்றில்லை. இந்த விரல் பூஞ்சைத் தொற்றுக்கும் அது அருமருந்தாக உள்ளது.

விக்ஸ் வேப்போரப்பில் தைமால் உள்ளது. இது பூஞ்சைத் தொற்றை விரட்டும் நல்ல மருந்தாகும். பாதிப்படைந்த விரல் பகுதியில் வேப்போரப்பை மெதுவாக தடவி வாருங்கள். பூஞ்சைத் தொற்று போய் விரல் நகம் அழகாவதை காண்பீர்கள்.

69. தலை முடி பிசுபிசுப்புக்கு:

பஸ், ரயில் போன்றவற்றில் ஜன்னலுக்கு அருகில் உட்கார்ந்து செல்லும்போதும், பைக் போன்றவற்றை ஓட்டிச் செல்லும்போதும் தலைமுடி சிக்காகி, பிசுபிசுப்படைவது சகஜம்.

சிலர் முறையாக தலைக்கு குளிக்காமல் விட்டாலும் இந்த பிசுபிசுப்பு ஏற்படுவது இயல்பு. இப்படிப்பட்டவர்கள் கவலைப்படத் தேவையில்லை. வீட்டில் உள்ள பேபி பவுடர் அல்லது டால்கம் பவுடரை எடுத்து தலைமுடியில் வைத்து நன்றாக தேய்த்தால் போதும். முடி பொலபொலவென தெளிவாகி விடும். பிசுபிசுப்பும் போய் விடும்.

70. ஞாபக சக்தி:

வல்லாரை கீரையை அடிக்கடி சமைத்து உண்டு வந்தால் நினைவாற்றலை அதிகரிக்கும். பாதாம்பருப்பு, வெண்டைக்காய், உருளைக்கிழங்கு, தக்காளி போன்றவைகளை தினமும் சாப்பிட்டு வந்தாலும் ஞாபக சக்தி பெருகும்.

வல்லாரை 150 கிராம், வசம்பு 15 கிராம், பவுடராக்கி தேனில் கலந்து சாப்பிட ஞாபகசக்தி பெருகும். வல்லாரை கீரையை அடிக்கடி சமைத்து உண்டு வந்தாலும் நினைவாற்றல் அதிகரிக்கும்.

வல்லாரை இலை தூள் 100 கிராம், வசம்பு 15 கிராம் இடித்து தூள் செய்து ஒன்றாக கலந்து தினசரி 5 கிராம் தேனுடன் சாப்பிட்டு வந்தால் மந்தபுத்தி மாறும்.

நாள்தோறும் பெரிய நெல்லி ஒன்றை தவறாமல் உண்டு வந்தால் நம் மூளை நல்ல நிலையில் இயங்கும். பீர்க்கன்காய் வேர் கஷாயம் சாப்பிட்டால் மூளை பலம் பெறும். உடலுக்குப் பலம் கொடுக்கும்.

பாதாம்பருப்பு, வெண்டைக்காய், உருளைக்கிழங்கு, தக்காளி, மாதுளம்பழம் இவைகளை தினமும் சாப்பிட்டு வர அறிவு விருத்தி, எலும்பு வளர்ச்சி, பித்த சம்பந்தமான வியாதி நீங்கும்.

71. காச நோய்க்கு மிளகு வைத்தியம்:

காசநோய் தீர மிளகு வைத்தியம் சிறந்ததாகக் கருதப்படுகிறது. அதாவது, தேள் கொடுக்கு இலை, பூ ஆகியவற்றை சிறிது சீரகம், 6 மிளகுடன் அரைத்துக் கொள்ள வேண்டும்.

இதனை ஒரு நெல்லிக்காய் அளவு எடுத்து ஆட்டுப்பால் விட்டு குடிக்க வேண்டும். இதனை ஒரு நாள் விட்டு ஒரு நாள் என்று 48 நாட்கள் சாப்பிட்டு வர காச நோய் குணமாகும்.

இம்மருந்தை உண்ணும் போது புகைப்பிடித்தல், மது, காபி, டீ அருந்துதல் போன்றவைகளைத் நிச்சயமாகத் தவிர்க்க வேண்டும்.

72. மேக நோய்க்கும், நீரிழிவுக்கும் ஏற்றது:

மேக நோய்க்கும், நீரிழிவு நோய்க்கும் புங்கம் பூவில் தயாரிக்கப்படும் மருந்து மிகவும் ஏற்றதாக விளங்குகிறது. அதாவது, புங்கம் பூவை நிழலில் உலர்த்தி நெய்விட்டு பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். இதனை இடித்து சலித்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

இந்த தூளை 1 அல்லது 2 கிராம் அளவு தேனில் கலந்து காலை, மாலை இருவேளையும் 40 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டுவர வேண்டும். இப்படி செய்தால் எவ்வளவு கடுமையான மேக நோயாக இருந்தாலும் குணமாகிவிடும்.

இந்த மருந்தை பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் கட்டுப்படும்.

Filed Under: மருத்துவ பயன்கள்

About Navinkumar V

ஹலோ நண்பர்களே,
AgricultureTrip வலைத்தளத்திற்கு உங்களை வரவேற்கிறேன். நான் கணினி பொறியாளராகவும் பகுதி நேர வலைதள நிர்வாகமும் செய்துகொண்டிருக்கிறேன். நான் இங்கு எனக்கு தெரிந்த விவசாய செய்திகளும், இயற்கை விவசாய சாகுபடி முறைகளையும் விவசாய குறிப்புகளையும் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். மேலும் தொடர்புக்கு என்னுடைய சமூகவலைத்தளங்களான முகநூல் மற்றும் ட்விட்டர் வலைதங்களை பார்க்கவும். உடனடி தொடர்புக்கு கிளிக் செய்யவும்

Comments

  1. Rajesh says

    March 26, 2018 at 5:39 pm

    Migavum paynulla thagaval.. mikka nandri..

    Reply
    • Navinkumar V says

      March 26, 2018 at 5:41 pm

      Nandri

      Reply
  2. surya says

    June 9, 2020 at 6:38 am

    நன்றி!, மிகவும் பயனுள்ள பதிவு.

    அனைத்து விதமான நோய்கள், உடல் உபாதைகள் மற்றும் ஆரோக்கிய பானம் தயாரிக்கும் எளிய வீடு மருத்துவ குறிப்பு மற்றும் செய்முறை விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

    https://naturalhomeremediesfor.com/

    #homeremedies #health #naturalhealth #ayurveda #siddha

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

உங்களின் சந்தேகங்களை இங்கு தேடுங்கள்

உங்களின் சந்தேகங்களை இங்கு தேடுங்கள்

Search Articles

Recent Articles
Tamil Keyboard
Start typing to find articles.

Categories

  • அரசு மானியம் / திட்டங்கள் (5)
  • அழகு குறிப்புகள் (6)
  • ஆண்கள் (3)
  • இதர சாகுபடி (8)
  • உரங்கள் (10)
  • எண்ணெய் வித்துக்கள் (4)
  • காய்கறிகள் (29)
  • கால்நடைகள் (9)
  • கிழங்கு வகைகள் (6)
  • கீரைகள் (18)
  • குழந்தைகள் (3)
  • சாதனையாளர்கள் – விவசாயிகள் (1)
  • தானியங்கள் (10)
  • நெல் (4)
  • நோய்களும் அதன் தீர்வும் (3)
  • பயிர் பாதுகாப்பு (1)
  • பழங்கள் (25)
  • பூக்கள் (12)
  • பெண்கள் (4)
  • மண் (2)
  • மரங்கள் (7)
  • மருத்துவ பயன்கள் (48)
  • மலைத்தோட்டப் பயிர்கள் (4)
  • மாடித் தோட்டம் (70)
  • மூலிகைப் பயிர்கள் (16)
  • விவசாய புகைப்படங்கள் (4)

Recent Posts

  • தாவர வளர்ச்சிக்கு NPK ஏன் அவசியம்? நைட்ரஜன்–பாஸ்பரஸ்–பொட்டாசியம் முழுமையான விளக்கம்
  • விவசாயத்தின் முக்கிய & இணைத் துறைகள் – முழுமையான வழிகாட்டி 2025
  • 🥭 அயல்நாட்டு பழங்கள் அவசியமா? அல்லது நம் நாட்டு பழங்களே போதுமா?
  • நித்தியகல்யாணி (Catharanthus roseus) – நீரிழிவு, புற்றுநோய், இதய நலம் மற்றும் ஆரோக்கிய நன்மைகள்
  • சுண்டைக்காய் (Turkey Berry / Solanum torvum) – ரத்தசோகை, நீரிழிவு, இதய நலம் மற்றும் மருத்துவ நன்மைகள்
  • அருகம்புல் (Cynodon dactylon) – உடல் சுத்தம், குளிர்ச்சி மற்றும் ஆரோக்கிய நன்மைகள்
  • முடக்கத்தான் கீரை (Cardiospermum halicacabum) – மூட்டு வாதம், வலி நிவாரணம் மற்றும் ஆரோக்கிய நன்மைகள்
  • மருதாணி (Lawsonia inermis) – அழகு, ஆரோக்கியம் மற்றும் இயற்கை மருத்துவ நன்மைகள்
  • தூதுவளை (Thuthuvalai) – சளி, இருமல், ஆஸ்துமா, புற்றுநோய் வரை குணமாக்கும் இயற்கை மூலிகை
  • துளசி (Tulsi) – வகைகள், சாகுபடி, மற்றும் நன்மைகள்

Tags

NPK (1) Paddy Variety (1) pappali (1) Tulsi (1) அருகம்புல் (1) ஆடிப்பட்டம் (1) ஆடிப்பட்டம் தேடி விதை (1) இஞ்சி (1) இயற்கை விவசாயம் (9) உயிர் உரங்கள் (1) உரங்கள் (1) உளுந்து (1) கிஸ்மிஸ்பழம் (1) கேரட் (1) கொத்தமல்லி (1) சவுக்கு மரம் (1) சித்தரத்தை (1) சுண்டைக்காய் (1) செம்பருத்தி (1) சோற்று கற்றாழை (1) தர்பூசணி (1) திருநீற்றுப் பச்சிலை (1) துளசி (2) துவரை (1) தூதுவளை (1) தேக்கு மரம் (1) நாவல்பழம் (1) நித்தியகல்யாணி (1) நெல் (3) நெல் ஜெயராமன் (1) பச்சைப்பயறு (1) பருத்தி (1) பாகற்காய் (1) பீட்ரூட் (1) புதினா (1) மஞ்சள் (1) மண்புழு உரம் (1) மருதாணி (1) மருத்துவ பயன்கள் (2) மாடித் தோட்டம் (6) மாதுளைப்பழம் (1) முடக்கத்தான் (1) முள்ளங்கி (1) வல்லாரை (1) விவசாயத்தின் இணைத் துறைகள் (1)

About Agriculturetrip

AgricultureTrip வலைத்தளத்திற்கு உங்களை வரவேற்கிறேன். நான் நவீன்குமார் கணினி பொறியாளராக பணியாற்றி கொண்டிருக்கிறேன். பகுதி நேர வலைதள நிர்வாகமும் செய்துகொண்டிருக்கிறேன். இந்த வலைத்தளத்தில் விவசாய உற்பத்தி முறைகள் மற்றும் விவசாய பயன்பாடு முறைகள் பற்றி தகவல்களை திரட்டி இங்கு பதிவிட்டுள்ளேன். மேலும் படிக்க…

Contact

Mahindra service station opp
Behind CSI Church
Chikkathogur
Bangalore – 560100

blogbynavin@gmail.com

Subscribe Our Newsletter

Join Our Newsletter
  Thank you for Signing Up
Please correct the marked field(s) below.
1,true,6,Contact Email,2 1,false,1,First Name,2 1,false,1,Last Name,2

Copyright © 2026 by Agriculture Trip. Developed by Navinblog