• About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Disclaimer

Agriculture Trip

Best Agriculture Blog in Tamil

  • Home
  • வேளாண்மை
      • காய்கறிகள்
      • கீரைகள்
      • பழங்கள்
      • தானியங்கள்
      • மரங்கள்
      • பூக்கள்
      • கிழங்கு வகைகள்
      • எண்ணெய் வித்துக்கள்
      • மலைத்தோட்டப் பயிர்கள்
      • மூலிகைப் பயிர்கள்
      • இதர சாகுபடி
  • மாடித் தோட்டம்
  • பயிர் பாதுகாப்பு
    • உரங்கள்
    • அரசு மானியம் / திட்டங்கள்
    • மண்
  • கால்நடைகள்
  • இயற்கை மருத்துவம்
    • மருத்துவ பயன்கள்
    • அழகு குறிப்புகள்
    • ஆண்கள்
    • பெண்கள்
    • குழந்தைகள்
  • மற்றவை
    • நெல்
    • விவசாய புகைப்படங்கள்
    • சாதனையாளர்கள் - விவசாயிகள்
ஆரஞ்சு பழம் பயிரிடும் முறை மற்றும் பயன்கள்

ஆரஞ்சு பழம் பயிரிடும் முறை மற்றும் பயன்கள்

October 10, 2017 By Navinkumar V 4 Comments


0 Shares
Share
Tweet
Share

தோடம்பழம் அல்லது ஆரஞ்சுப்பழம் என்பது சிட்ரஸ் மற்றும் சிநேசிஸ்பேரினத்தைச் சேர்ந்த ஒருவகை பழம் ஆகும். செம்மஞ்சள் நிறக் கோள வடிவ, சாறுள்ள இதன் மரங்கள் 10 மீ உயரம் வரை வளரக்கூடியன.

ராஜஸ்தான், மகராஷ்டிரா, கர்நாடக, ஆந்திரா, உள்ளிட்ட மாநிலங்களில் ஆரஞ்சு பழம் அதிகளவில் விளைகிறது. தமிழகத்தில் நீலகரி, திண்டுக்கல் , மாவட்டத்தில் ஆரஞ்சு விளைவிக்கப்படுகிறது.

பயிரிடும் முறை
  • அதிக சீதோஷ்ணத்துடன் கூடிய சமவெளிப் பகுதிகளிலும், நீர்பாசன வசதிகளுடன் கூடிய செம்மண் கலந்த பகுதிகளிலும் நன்கு வளரும். மண்ணின் கார அமிலத் தன்மை 6.5 முதல் 7.5 வரை இருக்க வேண்டும்.
  • ஜூலை முதல் ஆகஸ்ட் மாதம் வரை நடவு செய்யலாம்.
  • நிலத்தை நன்கு உழுத பின்பு 7 மிட்டர் இடைவெளியல் 75 செ.மீ நிளம், அகலம், ஆழம் என்ற அளவில் குழிகள் எடுக்க வேண்டும். குழிகளில் தொழு உரம் 2 கிலோவுடன் மேல்மண் கலந்து ஒரு வாரம் ஆறவிட வேண்டும்.
  • குருத்து ஒட்டு செய்த செடிகள் தான் நடவுக்கு பயன்படுகிறது.
  • நடவுக்கு தேர்வு செய்த ஓட்டுச் செடிகளை தயார் செய்துள்ள குழிகளில் மத்தியில் நடவு செய்ய வேண்டும். அதன் அருகே இரண்டு காய்ந்த குச்சிகளை நட்டு, செடியைவும் குச்சியையும் பிணைத்து கட்ட வேண்டும்.
  • நட்டவுடன் நீர்ப் பாய்ச்ச வேண்டும். பின்பு 10 நாட்களுக்கு ஒரு முறை நீர் கட்ட வேண்டும். செடியின் அருகில் தண்ணிர் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும்.
  • ஆண்டு ஒன்றிற்கு 10 கிலோ தொழுஉரம் இட வேண்டும். ஆறாம் ஆண்டு முதல் 30 கிலோ இட வேண்டும். தழைச்சத்து கொடுக்க கூடிய உரங்களை இரண்டாகப் பிரித்து மார்ச் மாதத்திலும், அக்டோபர் மாதத்திலும் இட வேண்டும். தொழு உரம் மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்து கொடுக்கக்கூடிய உரங்களை அக்டோபர் மாதத்தில் இடவேண்டும்.
  • செடிகள் வளரும் வரை களை இல்லாமல் பராமரிக்க வேண்டும். காய்ந்த தண்டுகள், பக்க கிளைகளை அவ்வப்போது நீக்கி பராமரிக்க வேண்டும்.
  • 5 முதல் 6 ஆண்டுகளில் அறுவடைக்கு வந்து விடும். திரண்ட பழங்களை இரு நாட்களுக்கு ஒரு முறை அறுவடை செய்ய வேண்டும்.
  • ஒரு எக்டருக்கு 30 டன் பழங்கள் வரை மகசூல் கிடைக்கும்.
ஆரஞ்சு பழ மரம்
ஆரஞ்சு பழ மரம்
பயன்கள் :
  • தூக்கம் இல்லாமல் அவதிபடுபவர்கள் இரவு படுக்கைக்கு செல்லும் முன் ஆரஞ்சு பழச்சாற்றில் தேன் கலந்து சாப்பிட்டால் நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.
  • ஆரஞ்சு பழச்சாற்றை ஒரு மண்டல தேன் கலந்து அருந்தி வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சத்தி அதிகரித்து உடல் பலமடையும். நரம்புகள் பலம் பெரும்.
  • ஆரஞ்சு பழத்தின் தோலை உலர்த்தி, ஓமம், சுக்கு சேர்த்து இடித்து பல் பொடியாக்கி தினமும் அதில் பல் தேய்த்து வந்தால் பற்கள் பளிச்சிடும்.
  • தினமும் ஆரஞ்சு பழம் சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள தேவையற்ற அசுத்த நீர் வியர்வையிலும் சிறுநீரிலும் வெளியேறும். இதனால் சருமம் பளபளப்புடன் நோயின் தாக்குதலின்றியும் இருக்கும்.

தயவு செய்து உங்களுடைய கருத்துக்களை கீழே உள்ள கமெண்ட் ஏரியாவில் பதிவிடவும். தவறுகளை சுட்டிக்காட்டி, உங்கள் கருத்துக்களை பரிமாறி இவ்வலைத்தளத்தை திறன்பட நடத்த உதவவும்.

Filed Under: பழங்கள் Tagged With: ஆரஞ்சு பழம்

About Navinkumar V

ஹலோ நண்பர்களே,
AgricultureTrip வலைத்தளத்திற்கு உங்களை வரவேற்கிறேன். நான் கணினி பொறியாளராகவும் பகுதி நேர வலைதள நிர்வாகமும் செய்துகொண்டிருக்கிறேன். நான் இங்கு எனக்கு தெரிந்த விவசாய செய்திகளும், இயற்கை விவசாய சாகுபடி முறைகளையும் விவசாய குறிப்புகளையும் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். மேலும் தொடர்புக்கு என்னுடைய சமூகவலைத்தளங்களான முகநூல் மற்றும் ட்விட்டர் வலைதங்களை பார்க்கவும். உடனடி தொடர்புக்கு கிளிக் செய்யவும்

Comments

  1. Nilavarasi says

    February 5, 2018 at 10:46 am

    Tips are so informative navin.

    Reply
  2. PRABU says

    April 29, 2020 at 4:38 pm

    Orange plant kidaikum idam sollunga pls

    Reply
  3. amohanasankar says

    May 18, 2020 at 1:17 am

    ஐயா நான் ஆரஞ்சு செடி வளத்திட்டு இருக்கேன் பயிரிட்டூ 4 வருசம் ஆச்சு ஆனா இன்னும் பூ எடுக்கல எதனாலனு சொல்ல முடியுமா உங்களால

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

உங்களின் சந்தேகங்களை இங்கு தேடுங்கள்

உங்களின் சந்தேகங்களை இங்கு தேடுங்கள்

Search Articles

Recent Articles
Tamil Keyboard
Start typing to find articles.

Categories

  • அரசு மானியம் / திட்டங்கள் (5)
  • அழகு குறிப்புகள் (6)
  • ஆண்கள் (3)
  • இதர சாகுபடி (8)
  • உரங்கள் (10)
  • எண்ணெய் வித்துக்கள் (4)
  • காய்கறிகள் (29)
  • கால்நடைகள் (9)
  • கிழங்கு வகைகள் (6)
  • கீரைகள் (18)
  • குழந்தைகள் (3)
  • சாதனையாளர்கள் – விவசாயிகள் (1)
  • தானியங்கள் (10)
  • நெல் (4)
  • நோய்களும் அதன் தீர்வும் (3)
  • பயிர் பாதுகாப்பு (1)
  • பழங்கள் (25)
  • பூக்கள் (12)
  • பெண்கள் (4)
  • மண் (2)
  • மரங்கள் (7)
  • மருத்துவ பயன்கள் (48)
  • மலைத்தோட்டப் பயிர்கள் (4)
  • மாடித் தோட்டம் (70)
  • மூலிகைப் பயிர்கள் (16)
  • விவசாய புகைப்படங்கள் (4)

Recent Posts

  • தாவர வளர்ச்சிக்கு NPK ஏன் அவசியம்? நைட்ரஜன்–பாஸ்பரஸ்–பொட்டாசியம் முழுமையான விளக்கம்
  • விவசாயத்தின் முக்கிய & இணைத் துறைகள் – முழுமையான வழிகாட்டி 2025
  • 🥭 அயல்நாட்டு பழங்கள் அவசியமா? அல்லது நம் நாட்டு பழங்களே போதுமா?
  • நித்தியகல்யாணி (Catharanthus roseus) – நீரிழிவு, புற்றுநோய், இதய நலம் மற்றும் ஆரோக்கிய நன்மைகள்
  • சுண்டைக்காய் (Turkey Berry / Solanum torvum) – ரத்தசோகை, நீரிழிவு, இதய நலம் மற்றும் மருத்துவ நன்மைகள்
  • அருகம்புல் (Cynodon dactylon) – உடல் சுத்தம், குளிர்ச்சி மற்றும் ஆரோக்கிய நன்மைகள்
  • முடக்கத்தான் கீரை (Cardiospermum halicacabum) – மூட்டு வாதம், வலி நிவாரணம் மற்றும் ஆரோக்கிய நன்மைகள்
  • மருதாணி (Lawsonia inermis) – அழகு, ஆரோக்கியம் மற்றும் இயற்கை மருத்துவ நன்மைகள்
  • தூதுவளை (Thuthuvalai) – சளி, இருமல், ஆஸ்துமா, புற்றுநோய் வரை குணமாக்கும் இயற்கை மூலிகை
  • துளசி (Tulsi) – வகைகள், சாகுபடி, மற்றும் நன்மைகள்

Tags

NPK (1) Paddy Variety (1) pappali (1) Tulsi (1) அருகம்புல் (1) ஆடிப்பட்டம் (1) ஆடிப்பட்டம் தேடி விதை (1) இஞ்சி (1) இயற்கை விவசாயம் (9) உயிர் உரங்கள் (1) உரங்கள் (1) உளுந்து (1) கிஸ்மிஸ்பழம் (1) கேரட் (1) கொத்தமல்லி (1) சவுக்கு மரம் (1) சித்தரத்தை (1) சுண்டைக்காய் (1) செம்பருத்தி (1) சோற்று கற்றாழை (1) தர்பூசணி (1) திருநீற்றுப் பச்சிலை (1) துளசி (2) துவரை (1) தூதுவளை (1) தேக்கு மரம் (1) நாவல்பழம் (1) நித்தியகல்யாணி (1) நெல் (3) நெல் ஜெயராமன் (1) பச்சைப்பயறு (1) பருத்தி (1) பாகற்காய் (1) பீட்ரூட் (1) புதினா (1) மஞ்சள் (1) மண்புழு உரம் (1) மருதாணி (1) மருத்துவ பயன்கள் (2) மாடித் தோட்டம் (6) மாதுளைப்பழம் (1) முடக்கத்தான் (1) முள்ளங்கி (1) வல்லாரை (1) விவசாயத்தின் இணைத் துறைகள் (1)

About Agriculturetrip

AgricultureTrip வலைத்தளத்திற்கு உங்களை வரவேற்கிறேன். நான் நவீன்குமார் கணினி பொறியாளராக பணியாற்றி கொண்டிருக்கிறேன். பகுதி நேர வலைதள நிர்வாகமும் செய்துகொண்டிருக்கிறேன். இந்த வலைத்தளத்தில் விவசாய உற்பத்தி முறைகள் மற்றும் விவசாய பயன்பாடு முறைகள் பற்றி தகவல்களை திரட்டி இங்கு பதிவிட்டுள்ளேன். மேலும் படிக்க…

Contact

Mahindra service station opp
Behind CSI Church
Chikkathogur
Bangalore – 560100

blogbynavin@gmail.com

Subscribe Our Newsletter

Join Our Newsletter
  Thank you for Signing Up
Please correct the marked field(s) below.
1,true,6,Contact Email,2 1,false,1,First Name,2 1,false,1,Last Name,2

Copyright © 2026 by Agriculture Trip. Developed by Navinblog