மரங்களுக்கு தேவையான அளவு இடைவெளி விட்டு நடுவதன் மூலம் மரங்களின் வளர்ச்சி மகசூல் நன்றாக இருக்கும். இவ்வாறு இடைவெளி இருந்தால் அவற்றின் இலைகள் மற்றும் ஓலைகள் நன்கு பரப்பி வளர முடிகிறது.
தென்னைக்கு தேரோட..
வாழைக்கு வண்டியோட…
கரும்புக்கு ஏரோட….
நெல்லுக்கு நண்டோட…..!
இப்படித்தான் நம் முன்னோர்களின் விவசாய முறை இருந்தது.
இடைவெளி_அமைப்பதின்_பயன்கள்!
இவ்வாறு இடைவெளி இருந்தால் அவற்றின் இலைகள் மற்றும் ஓலைகள் நன்கு பரப்பி வளர முடிகிறது.
இந்த இடைவெளிகளையும் விட குறைவாக இருந்தால் மரங்கள் காய்க்காமல் நீண்டு ஒல்லியாக வளர்ந்து கொண்டு போகும். இதன்பின் காய்த்தாலும் காய்கள் திரட்சி இல்லாமல். காய்கள் சிறிதாக இருக்கும்.
மர தேவைக்காக வளர்க்கப்படும் மரங்கள் எனில் அம்மரங்கள் மெலிதாக நீண்டு வளரும்.
இடைவெளிகள் அதிகமானால் மரங்கள் குறைந்த உயரத்தில் காய்க்க ஆரம்பிக்கும் அதோடு காய்கள் நன்கு பெருத்து திரட்சியாக காய்க்க ஆரம்பிக்கும் மரத்தின் சுற்றளவு நன்கு விருத்தியடையும்.
இந்த தொலைநோக்கு பார்வையில் தான் நமது முன்னோர்கள் இந்த மாதிரியான சில அடிப்படை விஷயங்களை நமக்காக விட்டு சென்றார்கள்.
ஆனால் நாமோ இன்று துரித உணவுகளையும் துரித வளர்ச்சியையும் தான் விரும்புகிறோம். மரங்களின் வாழ்நாளை குறைத்து மரங்களை ஏமாற்றி வளர்க்கிறோம், அதனால் தான் என்னவோ நமது வாழ்நாள் அளவும் குறைந்துகொண்டே போகிறது
சரி வாருங்கள் மரங்கள் வைக்கும் போது கடைபிடிக்க வேண்டிய இடைவெளி பற்றி இங்கு காணலாம்.
வேப்பமரம் – 15 அடி × 15 அடி
15 அடி இடைவெளி விட்டு நடுவதன் மூலம் ஒரு ஏக்கரில் 194 வேப்பமர கன்றுகள் நடலாம்.
12 அடி இடைவெளி விட்டு நடுவதன் மூலம் ஒரு ஏக்கரில் 303 வேப்பமர கன்றுகள் நடலாம்.
10 அடி இடைவெளி விட்டு நடுவதன் மூலம் ஒரு ஏக்கரில் 436 வேப்பமர கன்றுகள் நடலாம்.
இதற்க்கு மேல் இடைவெளியை குறைக்க வேண்டாம். ஏனெனில் வேப்பமரம் பரந்து வளரக்கூடிய மரவகையை சார்ந்தது.
பனைமரம் – 10 அடி × 10 அடி
10 அடி இடைவெளி விட்டு நடுவதன் மூலம் ஒரு ஏக்கரில் 436 பனைமர கன்றுகள் நடலாம்.
8 அடி இடைவெளி விட்டு நடுவதன் மூலம் ஒரு ஏக்கரில் 681 பனைமர கன்றுகள் நடலாம்.
பனைமரம் வளர்ப்பு பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கில் சென்று படியுங்கள் பனைமரம் சாகுபடி முறைகள் & பயன்கள்
தேக்கு மரம் – 10 அடி × 10 அடி
10 அடி இடைவெளி விட்டு நடுவதன் மூலம் ஒரு ஏக்கரில் 436 தேக்கு மர கன்றுகள் நடலாம்.
8 அடி இடைவெளி விட்டு நடுவதன் மூலம் ஒரு ஏக்கரில் 681 தேக்கு மர கன்றுகள் நடலாம்.
தேக்கு மரம் வளர்ப்பு பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கில் சென்று படியுங்கள் தேக்கு மரம் சாகுபடி முறை மற்றும் பயன்கள்
மலைவேம்பு மரம் – 10 அடி × 10 அடி
10 அடி இடைவெளி விட்டு நடுவதன் மூலம் ஒரு ஏக்கரில் 436 மலைவேம்பு மர கன்றுகள் நடலாம்.
8 அடி இடைவெளி விட்டு நடுவதன் மூலம் ஒரு ஏக்கரில் 681 மலைவேம்பு மர கன்றுகள் நடலாம்.
இதற்க்கு மேல் இடைவெளியை குறைக்க வேண்டாம். ஏனெனில் வேப்பமரம் பரந்து வளரக்கூடிய மரவகையை சார்ந்தது.
சந்தன மரம் – 15 அடி × 15 அடி
15 அடி இடைவெளி விட்டு நடுவதன் மூலம் ஒரு ஏக்கரில் 194 சந்தன மர கன்றுகள் நடலாம்.
12 அடி இடைவெளி விட்டு நடுவதன் மூலம் ஒரு ஏக்கரில் 303 சந்தன மர கன்றுகள் நடலாம்.
10 அடி இடைவெளி விட்டு நடுவதன் மூலம் ஒரு ஏக்கரில் 436 சந்தன மர கன்றுகள் நடலாம்.
வாழை மரம் – 8 அடி × 8 அடி
8 அடி இடைவெளி விட்டு நடுவதன் மூலம் ஒரு ஏக்கரில் 681 வாழை மர கன்றுகள் நடலாம்.
6 அடி இடைவெளி விட்டு நடுவதன் மூலம் ஒரு ஏக்கரில் 1210 வாழை மர கன்றுகள் நடலாம்.
தென்னை மரம் – 24 அடி × 24 அடி
தென்னை மரங்களில் பல வகை உண்டு குட்டை, நெட்டை மற்றும் இளநீர் ரகங்கள் என்று. … தென்னை எல்லா வகை மண்ணிலும் வளரக் கூடியது. தென்னை நடவு செய்யும்பொழுது விடவேண்டிய இடைவெளி குறைந்தது மரத்திற்கு மரம் இருபது அடி அதிகபட்சம் முப்பது அடி இருக்குமாறு நடவேண்டும்.
விபரம் |
இடைவெளி |
நெட்டை இரகங்கள் |
25 அடி × 25 அடி |
30 அடி இடைவெளி விட்டு நடுவதன் மூலம் ஒரு ஏக்கரில் 50 தென்னை மர கன்றுகள் நடலாம்.
28 அடி இடைவெளி விட்டு நடுவதன் மூலம் ஒரு ஏக்கரில் 58 தென்னை மர கன்றுகள் நடலாம்.
26 அடி இடைவெளி விட்டு நடுவதன் மூலம் ஒரு ஏக்கரில் 65 தென்னை மர கன்றுகள் நடலாம்.
24 அடி இடைவெளி விட்டு நடுவதன் மூலம் ஒரு ஏக்கரில் 76 தென்னை மர கன்றுகள் நடலாம்.
22 அடி இடைவெளி விட்டு நடுவதன் மூலம் ஒரு ஏக்கரில் 90 தென்னை மர கன்றுகள் நடலாம்.
20 அடி இடைவெளி விட்டு நடுவதன் மூலம் ஒரு ஏக்கரில் 109 தென்னை மர கன்றுகள் நடலாம்.
18 அடி இடைவெளி விட்டு நடுவதன் மூலம் ஒரு ஏக்கரில் 134 தென்னை மர கன்றுகள் நடலாம்.
15 அடி இடைவெளி விட்டு நடுவதன் மூலம் ஒரு ஏக்கரில் 194 தென்னை மர கன்றுகள் நடலாம்.
தென்னை மரம் வளர்ப்பு பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கில் சென்று படியுங்கள் தென்னை மரம் சாகுபடி முறை மற்றும் பயன்கள்
பப்பாளி மரம். 7 அடி × 7 அடி
மாமரம் உயர் ரகம். 30 அடி × 30 அடி
மாமரம் சிறிய ரகம். 15 அடி × 15 அடி
பலா மரம். 22 அடி × 22 அடி
கொய்யா மரம். 14 அடி × 14 அடி
மாதுளை மரம். 9 அடி × 9 அடி
சப்போட்டா மரம். 24 அடி × 24 அடி
முந்திரிகை மரம். 14 அடி × 14 அடி
முருங்கை மரம். 12 அடி × 12 அடி
நாவல் மரம். 30 அடி × 30 அடி
Vivasayi says
Nice article
Navinkumar V says
Thank you.