கொரோனா வைரஸ் பீதியில் நாடு முழுவதும் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். கொரோனாவிலிருந்து மக்கள் தங்களை தற்காத்துக் கொள்ள சித்தமருத்துவத்தில் கூறப்பட்டுள்ள வழிமுறைகள் குறித்து விளக்குகிறார் சித்த மருத்துவர் மைக்கேல் செயராசு.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்கிறது. இத்தாக்குதலில் இருந்து மக்களை தற்காத்துக் கொள்ள மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் வரும் ஏப்ரல் 14-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து மக்கள், தங்களை தற்காத்துக் கொள்ள சித்த மருத்துவத்தில் வழி கூறப்பட்டுள்ளது என கூறி வருகிறார்கள் சித்த மருத்துவர்கள்.
2009-ம் ஆண்டில் ’சிக்கன்குனியா’
கடந்த 2009-ம் ஆண்டில் ’சிக்கன்குனியா’ தாக்கப்பட்ட நிலையில், நெல்லை மாவட்டம் முழுவதும் 400-க்கும் மேற்பட்ட இடங்களில் தனியாகவும், தொண்டு நிறுவனங்களுடன் இணைந்தும் நிலவேம்புக் குடிநீர் தயார் செய்து பொது மக்களுக்கு வழங்கினார்.
யார் இந்த மைக்கேல் செயராசு அவர்கள்
நெல்லை மாவட்டம் பாபநாசத்தைச் சேர்ந்த சித்தமருத்துவரும், உலகத்தமிழ் மருத்துவக் கழகத்தின் நிறுவனர் தலைவருமான மைக்கேல் செயராசு. ’பசுமை விகடன்’ இதழில் ‘நல் மருந்து’ என்ற தொடரில், மூலிகைகளின் பயன்பாடுகள் குறித்து இரண்டாம் பாகத்தை எழுதி வருகிறார். அவரிடம் இதுகுறித்துப் பேசினோம்.
விளக்கமாக பேசிய அவர், “கொரானாவுக்கு எதிராக இன்று உலக நாடுகள் அனைத்தும் ஒரு பெரும் போரையே நிகழ்த்தி வருகின்றன. இக்கொடிய கொள்ளை நோயின் பிடியிலிருந்து நம்மை நாம் தற்காத்துக் கொள்வதற்காக, அரசு அறிவுறுத்தும் அனைத்து தற்காப்புச் செயல்களான
- அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவுதல்
- முகக்கவசம் அணிதல்
- பிற மனிதர்களிடமிருந்து ஒரு மீட்டர் தொலைவில் விலகியிருத்தல்
- கூட்டம் கூடுவதைத் தவிர்த்தல்
ஆகிய அனைத்தையும் கடைபிடிப்போம்.
நமது பேஸ்புக் குழுவில் இணைந்து உங்கள் விவசாய சந்தேகங்களை கேட்க விரும்பும் நண்பர்கள் கீழுள்ள லிங்கில் இணையவும் FACEBOOK குரூப்பில் இணைய கிளிக் செய்யவும்
இந்த வைரஸ் தாக்குதலால் நோய் எதிர்ப்பு ஆற்றலும், மருந்துகளும் வலுவிழந்து மக்களை மரண பயத்திற்குள் நகர்த்திக் கொண்டிருக்கும் இச்சூழலில், கடந்த 10 ஆண்டுகளாக பல்வேறு விதமான புதுப்புது நச்சுக் காய்ச்சல்களையும் சுவாசப்பாதை தொற்றுகளையும் கட்டுப்படுத்திய நிலவேம்புக் குடிநீரை தற்காப்புக்காக கையில் எடுக்க வேண்டிய முக்கியமான தருணம் இது.
”இந்த சித்த மருத்துவர்களுக்கு வேற வேலையே இல்லை. ஏதாவது ஒன்னுன்னாக்கூட கசாயத்தைக் குடி என பேச ஆரம்பிச்சுடுவாங்க” என்று சிலர் முணுமுணுப்பது நன்றாகவே கேட்கிறது.
நிலவேம்புக்குடிநீர்’ என்றால் என்ன?
‘நிலவேம்புக்குடிநீர்’ என்றால் என்னவென்றே தெரியாமலேயே, ”இதெல்லாம் எப்படி வைரஸ் நோய்களைக் குணமாக்கும்?” என்று சிலர் கேள்வி கேட்கிறார்கள்.
ஐம்பூதங்கள், அறுசுவைக் கோட்பாடுகளின்படி கட்டமைக்கப்பட்டுள்ள நமது சித்த மருத்துவம், கசப்புச்சுவையுள்ள மருந்துகள் மற்றும் உணவுகளையே நோய்க்கிருமிகளுக்கு எதிரானது எனக் கூறியுள்ளது. இதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக வேம்பைக் கூறலாம்.
இன்றுவரை அனைத்து கிருமிகளையும் அழிக்கக்கூடிய சக்தி வேம்புக்கு உள்ளதை நான் அனைவரும் ஏற்றுக் கொள்கிறோம். வேம்பு என்று முடியக்கூடிய பெயர்களுடைய பிற மூலிகை இனங்களான மலைவேம்பு, சிவனார் வேம்பு, நிலவேம்பு, கறிவேம்பு, சர்க்கரை வேம்பு, துலுக்க வேம்பு, நாய் வேம்பு என இதன் பட்டியல் நீண்டு கொண்டே செல்லும். இவற்றில் வேம்பை விட மிகவும் அதிகமான கசப்புச்சுவையுடைய நிலவேம்பைத்தான் நமது தமிழ் சித்த மருத்துவம் நச்சுக்காய்ச்சல்களுக்கு எதிராகப் பரிந்துரை செய்கிறது.
2009-ல் சிக்கன்குனியா
2010-ல் பன்றிக்காய்ச்சல்
2011-ல் பறவைக் காய்ச்சல்
2012-ல் டெங்கு.
என தமிழகத்தை காய்ச்சல்கள் வரிசையாகப் புரட்டிப்போட்ட போது இந்த நிலவேம்புக் குடிநீர்தான் நமக்கு மிகவும் கைகொடுத்தது என்பதை மறந்துவிடக்கூடாது.
நிலவேம்பு பற்றி மற்ற ஆராய்ச்சிகள் கூறும் தகவல்
2012-ம் ஆண்டு தமிழக அரசே, நிலவேம்புக் குடிநீரை டெங்கு முதலான வைரஸ் காய்ச்சல்களைக் கட்டுப்படுத்தும் மருந்தாக அறிவித்ததை தொடர்ந்து
ஆராய்ச்சி – சென்னை கிங்ஸ் ஆய்வு நிறுவனம்
சென்னை கிங்ஸ் ஆய்வு நிறுவனம், நிலவேம்புக் குடிநீருக்கு, வைரஸுக்கு எதிராகச் செயல்படும் தன்மை இருப்பதை, அதன் முதல்கட்ட ஆய்வறிக்கையில் உறுதி செய்துள்ளது. இந்நிறுவன இயக்குனர், பேராசிரியர் மற்றும் மருத்துவர் குணசேகரன், சென்னையில் நடைபெற்ற ஒரு நூல் வெளியீட்டு விழாவில், “ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலங்களான நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் சுவாசப்பாதை தொற்றுநோய்கள் அதிகரித்துக் காணப்படும். புதுடெல்லியில் இதுகுறித்து மாநில வாரியாக தொடர்ந்து அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படும். 2012, 2013-ம் ஆண்டுகளில் இந்தியாவிலுள்ள மற்ற மாநிலங்களை விட, தமிழகத்தில் சுவாசப்பாதை, தொற்றுநோய்கள் மிகவும் குறைந்து காணப்பட்டன. இதற்கு முக்கிய காரணம், அந்தக்கால கட்டங்களில்தான் தமிழகம் முழுவதும் நிலவேம்புக் குடிநீர் மக்களுக்கு அதிகமாக வழங்கப்பட்டது” எனப் பேசினார்.
இந்த இரண்டு ஆய்வுத் தகவல்களுமே நிலவேம்புக் குடிநீரின் வைரஸ் நோய்களுக்கு எதிரான மருத்துவ குணங்களை உறுதி செய்கின்றன.
எனவே, நிலவேம்புக் குடிநீர் சுவாசப்பாதை தொற்றுநோய்களுக்கு எதிராக செயல்படுவதால், சுவாசப்பாதை தொற்றுநோயான தற்போதைய கொரோனாவுக்கு எதிராகவும், நிலவேம்பு சேர்ந்த நிலவேம்புக்குடிநீர், கபசுரக்குடிநீர், சர்வசுரக்குடிநீர், தொந்தசுரக்குடிரோர் முதலான அனைத்துக் குடிநீர்களுமே கட்டுப்படுத்தும் என்று கருதலாம். இந்தக் குடிநீர் தயாரிப்பு முறைகளெல்லாம் கடந்த நூற்றாண்டில் வாழ்ந்த சித்த மருத்துவரான கண்ணுசாமிப் பிள்ளை எழுதிய நூற்களிலும் அதிகமாகக் கூறப்பட்டுள்ளது. நிலவேம்புக்குடிநீர் சரக்குளுடன் கூடுதலாக ஆடாதோடை இலை, துளசியிலை சேர்த்து இக்குடிநீர் தயாரித்து கடந்த 20 ஆண்டுகளாக வழங்கிய எனது அனுபவத்தை சான்றாக முன்வைக்கிறேன்.
நமது பேஸ்புக் குழுவில் இணைந்து உங்கள் விவசாய சந்தேகங்களை கேட்க விரும்பும் நண்பர்கள் கீழுள்ள லிங்கில் இணையவும் FACEBOOK குரூப்பில் இணைய கிளிக் செய்யவும்
இவையெல்லாம் வைரஸ் நோய்களில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ளும் முயற்சிதான்.
கொரோனா வைரஸ் மனித உடலில் நுழைந்த முதல் 6 நாட்கள் தாக்குதலை வெளிப்படுத்தாமல் அமைதியாக இருக்கும் என்று அறிவியலாளர்கள் கூறுகிறார்கள்.
இந்தக் காலகட்டத்தில் நிலவேம்பு கலந்த இந்தக் குடிநீர் வகைகளில் ஏதாவது ஒன்றை 3 முதல் 5 நாட்களுக்கு ஒருமுறை குடித்து வந்தால் நன்மை பயக்கும் என்று கருதுகிறேன். 2012-ல் டெங்குவால் பச்சிளம் குழந்தைகள் படபடவென இறந்து விழுந்தபோது அப்போதைய தமிழக முதல்வர் மறைந்த ஜெயலலிதா, நிலவேம்புக் குடிநீரை அறிவித்ததுபோல, தற்போதும் ரேசன்கடைகள் மூலமாகவோ அல்லது வீதிவீதியாகவோ இக்குடிநீர் பொட்டலங்களை மக்களுக்கு வழங்கலாம்.
குடிநீர் தயாரிக்கும் முறையும், குடிக்கும் அளவும்
இந்த குடிநீர் தயாரிக்கும் முறையும், குடிக்கும் அளவும் மிகமிக முக்கியமாகும்.
குறைந்தபட்சம் 30 கிராம் கசாயப்பொடியுடன் 1 லிட்டர் தண்ணீர் சேர்த்து அடுப்பிலேற்றி கால் லிட்டராக வற்றவைத்து வடிகட்டி பிளாஸ்க்கில் வைத்துக் கொண்டு 50 மி.லி ஆக ஒரு வேளை உணவுக்குப்பின் குடித்து வரலாம்.
நிலவேம்பு இல்லாதவர்களுக்கு மாற்று மருந்து
இவையெல்லாம் தங்களுக்கு கிடைக்கவில்லை என்றால்
- துளசியிலை 50 கிராம்
- மிளகு 50 கிராம்
சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்து துவையல் பக்குவத்தில் எடுத்து பாசிப்பயறளவு மாத்திரையாக உருட்டி நிழலில் காயவைத்துக் கொண்டு, மூன்று வேளையும் உணவுக்குப்பின், ஒரு மாத்திரையை வாயில் போட்டு வெந்நீர் குடிக்கவும்.
மற்றொரு மாற்று மருந்து
- வேப்பம்பட்டை 10 கிராம்
- துளசி 10 கிராம்
- மிளகு 5 கிராம்
- வெற்றிலை 5 கிராம்
ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு ஒன்றிரண்டாக அரைத்து 1 லிட்டர் தண்ணீர் சேர்த்து, அடுப்பிலேற்றி கால் லிட்டராக வற்றவைத்து வடிகட்டி, தினமும் 50 மி.லி எடுத்து உணவுக்குபின் ஒருவேளை வீட்டிலுள்ள அனைவருமே குடித்து வரவும்.
இந்தக் குடிநீர்கள் தயாரிப்பதற்கு கேஸ் அடுப்பை தவிர்த்துவிட்டு, மின்சார அடுப்பை பயன்படுத்துவது நல்லது.
நோய்க்கான அறிகுறிகள் தோன்றி விட்டால் சித்த மருத்துவரின் கண்காணிப்பில் லிங்கம் அதிகமாகச் சேர்கின்ற வஜ்ஜிரகண்டி மாத்திரை, வெட்டுமாரன் மாத்திரை ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை எடுத்துக் கொள்ளலாம். நவீன மருத்துவக் கருவிகள், உயிர்காக்கும் மருந்துகளுடன் கூட, இந்த சித்த மருந்துகளையும் வேளைக்கு ஒன்று என்ற அளவில் ஒருநாளைக்கு இரண்டு அல்லது மூன்று வேளை தொடர்ந்து மூன்று நாட்கள் கொடுத்துவர நன்மை பயக்கும் என நம்புகிறேன்.
மேலே குறிப்பிட்ட அனைத்து மருந்துகளுமே, மலேரியா, டைபாய்டு போன்ற நோய்களின் அதிதீவிர நிலையில், நான் நோயாளிகளுக்கு வழங்கி நல்ல பலனைக் கண்டுள்ளேன். இப்போதும்கூட மலேரியாவுக்கு வழங்கும் மருந்துகளையே இந்தக் கொரோனாவுக்கு வழங்கலாம் என ஐரோப்பிய நாடுகள் பரிந்துரை செய்துள்ளதை ஒருமுறை நினைவுபடுத்துகிறேன். எனவே, அனைத்து வைரஸ் காய்ச்சல்களுக்கும் சித்த மருத்துவ நூல்களில் மருத்துவம் கூறப்பட்டிருப்பதால், அவற்றை இன்றைய அறிவியல் கண்ணோட்டத்துடன் உறுதி செய்து வழங்கினால் கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ளலாம்” என்றார்.
மருந்தே உணவு – இயற்கையே நமது கடவுள்
நமது பேஸ்புக் குழுவில் இணைந்து உங்கள் விவசாய சந்தேகங்களை கேட்க விரும்பும் நண்பர்கள் கீழுள்ள லிங்கில் இணையவும் FACEBOOK குரூப்பில் இணைய கிளிக் செய்யவும்
Leave a Reply