சப்போட்டா வெப்பமண்டலப் பகுதிகளில் அதிகம் காணப்படுகிறது. மெக்ஸிகோ மற்றும் மத்திய அமெரிக்காவை தாயகமாகக் கொண்டது. கடல்வழியே இந்தியாவிற்கு வந்த போர்த்துககீசியர்கள் முலம் தமிழ்நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டது.
தற்போது உலக அளவில் இந்தியாவில் தான் சப்போட்டா பழம் அதிக அளவில் உற்பத்தியாகினறது. இந்திய, இலங்கை, இந்தோனேஷியா, மலேசிய, போன்ற வெப்பமண்டல நாடுகளிலும் சப்போட்டா அதிகமாக விளைகிறது.
பயிரிடும் முறை
- ஜூலை ஆகஸ்ட் மாதங்கள் சாகுபடிக்கு ஏற்றது ஆகும்.
- சப்போட்டா எந்த வகை மண்ணிலும் செழித்து வளரக்கூடியது. நல்ல வடிகால் வசதியான மண் ஏற்றது. அழமான வண்டல் மண் கலந்த நிலங்கள் மிகவும் உகந்தது.
- சாகுடி செய்ய தேர்வு செய்த நிலத்தை 2 அல்லது 3 முறை நன்கு உழவு செய்ய வேண்டும். பின்பு அதில் 8 மீட்டர் இடை வெளியில் 60 செ.மீ நீளம், அகலம், ஆழம் என்ற அளவில் குழிகள் எடுக்க வேண்டும். குழிகளில் ஒரு கிலோ மக்கிய தொழு உரம், ஒரு கிலோ வேப்பம் புண்ணாக்கு, மேல் மண் போட்டு, 10 நாட்களுக்கு ஆறவிட வேண்டும்.
- ஒட்டுக்கட்டிய செடிகள் தான் நடவுக்கு பயன்படுகிறது.
- ஒட்டுகட்டிய சப்போட்டா கன்றுகளை குழியின் நடுவில் ஒட்டுப்பகுதி தரைமட்டத்திலிருந்து அரை அடி உயரத்தில் இருக்குமாறு நடவு செய்ய வேண்டும். ஆதரவுக்கு குச்சி நட்டு தளர்வாகக் கட்டி விட வேண்டும். இதனால் செடிகள் சாய்ந்து விடாமல் பாதுகாக்கப்படும்.
- செடி நட்டவுடன் நீர் பாய்ச்ச வேண்டும். பின்னர் ஒருவாரம் அல்லது 10 நாள் இடைவெளியில் தேவைக்கேற்ப தண்ணிர் பாய்ச்ச வேண்டும்.
- காய்ப்புக்கு வந்த மரங்களுக்கு 6 மாதங்களுக்கு ஒருமுறை 10 கிலோ தொழுவுரம் மற்றும் 2 கிலோ மண்புழு உரம் மற்றும் வேப்பம் புண்ணாக்கு ஆகியவற்றை ஒன்றாக கலந்து ஒவ்வொரு செடியை சுற்றிலும் மண் வைத்து அணைத்து, நீர் பாய்ச்ச வேண்டும். இவ்வாறு செய்து பராமரிப்பதினால் நல்ல விளைச்சல் கிடைக்கும்.
- முதிர்ந்த காய்கள், வெளிறிய பழுப்பு நிறத்தில் இருக்கும். அதன் சதைப்பகுதி வெளிறிய மஞ்சள் நிறத்தில் இருப்பது அறுவடைக்கான அறிகுறி ஆகும். ஒரு வருடத்தில் ஒரு ஏக்கருக்கு 25 டன் பழங்கள் வரை கிடைக்கும்.

பயன்கள் :
- சப்போட்டா பழத்தை அரைத்து அதன் சாற்றை தேனில் கலந்து சாப்பிட்டு வர வயிற்று சம்பந்தமான கோளாறுகள், வயிறு வலி ஆகியவை குணமாகும்.
- சப்போட்டா பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், மேனியைப் பளபளப்பாக வைக்க உதவும்.
- சப்போட்டா கூழுடன், எலுமிச்சம் பழச்சாறு சேர்த்துப் பருகினால் சளி குணமாகும்.
- சப்போட்டா பழத்தைத் தொடந்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் குடல்புண், குடல் எரிச்சல், வயிற்றுவலி, வயிற்றெரிச்சல் இவற்றை போக்கும். சப்போட்டா பழத்தை அடிக்கடி சாப்பிட்டால் குடல் புற்று நோய் ஏற்படாது.
தயவு செய்து உங்களுடைய கருத்துக்களை கீழே உள்ள கமெண்ட் ஏரியாவில் பதிவிடவும். தவறுகளை சுட்டிக்காட்டி, உங்கள் கருத்துக்களை பரிமாறி இவ்வலைத்தளத்தை திறன்பட நடத்த உதவவும்.
Awesome site design in Tamil language
More over it has good content
Add the details that where we can get these plants to plant
Sure we will collect information about seeds and plants will post it asap…. Thanks for your support and encouragement…
இலங்கையில் எங்கே இருக்கிறது. கிடைக்கும் இடங்கள் தெரிந்து கொள்ளலாமா
ஒவ்வொரு மரமும் நட்டத்தில் இருந்து எவ்வளவு நாட்களில் காய்ப்புக்கு வரும் என்ற தகவல். தற்போதைய விலை உள்ளிட்ட கூடுதல் தகவல்களை சேர்க்கவும்
The big tree which is more than 3years old is flowering all time but no fruits are being borne by the tree.what to do? Please reply
சப்போட்டா பயிரிடுதல் தொடர்பான ஐயங்களை கேட்க தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி எண்ணை தெரிவிக்க முடியுமா? என் தொலைபேசி எண் 7708697293.
சப்போட்டா மரம் வயது 10 ஆண்டுகள். நிறைய பூ வைக்கிறது. ஆனால் பூக்கள் கருகி உதிர்ந்துவிடுகின்றன. பழங்கள் 1 அல்லது 2 நிற்கிறது. மரம் செழிப்பாக பசுமையாக உள்ளது. என்ன செய்ய வேண்டும் ஆலோசனை கூற முடியுமா?