நமது உடலில் சிறுநீரகங்கள் தான் பெரும் பங்கு ஆற்றுகின்றது. ரத்தத்திலுள்ள யூரியா போன்ற கழிவு பொருட்களை பிரித்தெடுத்து நீருடன் சேர்த்து சிறுநீராக வெளியேற்றுகிறது. எனவே அதனை நல்ல முறையில் பராமரிப்பது அவசியம். சிறுநீரகத்தை சுத்திகரிக்கும் இயற்கை முறை வீட்டு மருத்துவம் பற்றி இங்கு காணலாம்.
எலுமிச்சை + கொத்தமல்லி + சீரகம்
- எலுமிச்சை – 2 துண்டு
- கொத்தமல்லி – சிறிதளவு (தண்டுடன்)
- சீரகம் – 1 ஸ்பூன்
எலுமிச்சை
எலுமிச்சை பாதி அளவு எடுத்துக்கொண்டு அதனை சிறுசிறு துண்டுகளாக வெட்டி கொள்ளுங்கள்.
கொத்தமல்லி
கொத்தமல்லியை தண்டுடன் சிறிதளவு எடுத்து கொள்ளுங்கள்.
சீரகம்
சீரகம் 1 ஸ்பூன் எடுத்துக்கொள்ளுங்கள்
செய்முறை
மூன்றும் இந்த விகிதத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். பின்பு ஒரு பாத்திரத்தில் 250 மில்லி அளவு நீரை எடுத்துக்கொண்டு அதில் இந்த 3 பொருட்களையும் சேர்த்து 10 நிமிடத்திற்கு நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீரின் அளவு பாதியாக குறையும் அளவிற்கு கொதிக்க வைக்க வேண்டும்.
பின்பு வடிகட்டி நன்றாக ஆறவைத்து குடிக்க வேண்டும்.
200 வகையான காய்கறிகள் பழங்கள் கீரைகள் மாடித்தோட்டம் பற்றிய தகவலை ஒரே இடத்தில அறிய விரும்பும் நண்பர்கள் இந்த லிங்கில் சென்று படிக்கவும். 200 காய்கறிகள், பழங்கள், கீரைகள், மாடிதோட்ட குறிப்புகள் அறிய கிளிக் செய்யவும்
குறிப்பு
இந்த நீரை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். குடித்த பின்பு 1 மணி நேரம் கழித்து தான் காலை உணவை உண்ண வேண்டும்
உடல்சோர்வு, ரத்தம் சம்மந்தமான பிரச்னை உள்ளவர்கள் தொடர்ந்து நான்கு நாட்கள் குடிக்க வேண்டும். அதன்பின்பு மாதம் 1 முறை குடிப்பது உடல் நலத்திற்கு நல்லது
உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள், வாய்வு தொல்லை இருப்பவர்கள் வாரம் மூன்று நாட்கள் குடிக்கலாம். ஒரு சிறிய துண்டு இஞ்சியை அதனுடன் சேர்த்து கொதிக்க வைத்து குடிப்பது நல்லது. தேவைப்பட்டால் குடிப்பதற்கு முன் 1 ஸ்பூன் தேனை சேர்த்துக்கொள்ளலாம்
- அஜீரண கோளாறை போக்கும்.
- உடல் எடையை குறைக்கும்.
- வாயு தொல்லையை போக்கும்.
- சிறுநீரகத்தை சுத்தப்படுத்தும்.
முக்கிய குறிப்பு
3 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம்.
எலுமிச்சையின் மற்ற பயன்கள்
- தினமும் எலுமிச்சைச் சாறு குடிப்பதன் முலம் சிறுநீரில் உள்ள சிட்ராஸ் அளவை குறைத்து சிருநிர்ப்பையில் கல் சேர்வதைத் தடுக்க உதவுகிறது.
- ஏதேனும் பூச்சிக்கடியால் தோலில் அரிப்பு ஏற்பட்டால் எலுமிச்சை பலத்தை சிறிதாக நறுக்கி கடி பட்ட இடத்தில் தடவ வேண்டும். பூச்சிக்கடியால் ஏற்பட்ட அலர்ஜியை இது குறைக்கும்.
- எலுமிச்சை பழசாறு உடலை குளிர்ச்சியாக்கும் தன்மை கொண்டது. இதன் மூலம் தோல் எரிச்சல்,வெப்ப நோய்கள் தாக்குதல் போன்றவற்றிலிருந்து உடலுக்கு பாதுகாப்பு கிடைக்கும்.
- எலுமிச்சைப் பழச்சாறை இளஞ்சூடான தண்ணீரில் கலந்து குடித்தால் வயிற்றுக்கு மிகவும் நல்லது.செரிமானப் பிரச்சனைகள், குமட்டல், வாந்தி, போன்ற சிக்கல்களுக்கெல்லாம் எலுமிச்சைப் பழச்சாறு சரியான நிவாரணியாக செயல்படுகிறது.
- தினமும் ஏதேனும் ஒரு வகையில் எலுமிச்சை சாறை சேர்த்து கொள்ளவதன் முலம் உடல் எடை குறையும்.
மாடித்தோட்டத்தில் எலுமிச்சை பயிரிடும் முறை அறிய கீழுள்ள லிங்கில் சென்று விளக்கமாக படிக்கவும். பயிரிடும் முறை மற்றும் உரங்கள் பற்றி விளக்கமாக கொடுத்துள்ளோம்
மாடித்தோட்டத்தில் எலுமிச்சை பயிரிடும் முறை
வீட்டுத்தோட்டத்தில் எலுமிச்சை பயிரிடும் முறை அறிய கீழுள்ள லிங்கில் சென்று விளக்கமாக படிக்கவும். பயிரிடும் முறை மற்றும் உரங்கள் பற்றி விளக்கமாக கொடுத்துள்ளோம்
வீட்டுத்தோட்டத்தில் எலுமிச்சை பயிரிடும் முறை
மாடித்தோட்டத்தில் காய்கறிகள் பழங்கள் கீரைகள் பயிரிட விரும்பும் நண்பர்கள் இந்த லிங்கில் சென்று படியுங்கள் மாடித்தோட்ட விவசாயம் பற்றி அறிய கிளிக் செய்யவும்
நமது பேஸ்புக் குழுவில் இணைந்து உங்கள் விவசாய சந்தேகங்களை கேட்க விரும்பும் நண்பர்கள் கீழுள்ள லிங்கில் இணையவும் FACEBOOK குரூப்பில் இணைய கிளிக் செய்யவும்
Dialysis patient can you drink it sir
அருமை