தவனம் என்றழைக்கப்படும் மரிக்கொழுந்து ஒரு நறுமணத் தாவரமாகும்.
இச்செடிகள் இவற்றின் மணமுள்ள இலைகளுக்காகவும், அதிலிருந்து தயாரிக்கக் கூடிய நறுமண எண்ணெய்க்காகவும் சாகுபடி செய்யப்படுகிறது.
மாலைகளிலும், மலர் செண்டுகளிலும் இதன் இலைகள் அவற்றின் நறுமணத்திற்காக அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கேக், புகையிலை மற்றும் பானங்களுக்கு நறுமணமூட்ட அதிக அளவில் உபயோகிக்கப்படுகிறது.
எப்படி பயிரிடுவது…?
இரகங்கள் :
சின்னமனூர், பி கே எம்-1 ஆகிய இரகங்கள் உள்ளன.
பருவம்
ஜீன், ஜீலை மாதங்களில் நடவு செய்ய வேண்டும்.
மண்
இப்பயிர் வளம் செறிந்த செம்மண் நிலங்களிலும், நல்ல வடிகால் வசதியுள்ள வண்டல் நிலங்களிலும் நன்கு வளரும். மிதமான மழை, நல்ல சூரிய ஒளி, காலை பனி ஆகியவை நல்ல விளைச்சல் கிடைக்க உதவுகின்றன.
விதையளவு
மரிக்கொழுந்து செடிகள் விதை மூலம் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஒரு ஏக்கரில் விதைக்க 1.50 கிலோ விதைகள் வீதம் தேவைப்படும். ஓராண்டுக்கு மேலான பழைய விதைகள் முளைப்புத் தன்மையை இழந்து விடுவதால் முந்தின பருவத்து பயிரிலிருந்து எடுக்கப்பட்ட விதைகளை பயன்படுத்த வேண்டும்.
விதைநேர்த்தி
1 கிலோ விதைக்கு 50 கிராம் சூடோமோனாஸ் கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
நாற்றங்கால் தயாரித்தல்
நாற்றங்கால் பாத்திகள் 2 மீட்டர் நீளமும், 1 மீட்டர் அகலமும் உடையதாக அமைக்க வேண்டும். ஒரு பாத்திக்கு 5 கிலோ மக்கிய தொழுஉரம், 2 கிலோ வேப்பம் புண்ணாக்கு வீதம் இட்டு மண்ணோடு நன்றாக கலக்க வேண்டும். விதைகளை 10 கிலோ மணலுடன் கலந்து, சுமார் 3 கிராம் விதை 1 சதுர மீட்டர் பரப்பளவில் விழுமாறு தூவி விதைக்க வேண்டும். பின்பு விதைகளை மணல் தூவி மூடவேண்டும். பூவாளி கொண்டு ஒரு நாளைக்கு இருமுறை தண்ணீர் தெளிக்க வேண்டும். விதைத்த 3-4 நாட்களில் விதைகள் முளைக்க ஆரம்பிக்கும்.
விதைகளை ஈரத்துணியில் 48 மணி நேரம் ஊறவைத்து, முளைக்கட்டியும் விதைக்கலாம்.
நிலம் தயாரித்தல்
நிலத்தை இரண்டு அல்லது மூன்று முறை உழுது ஏக்கருக்கு 15 டன் தொழு உரம் இட்டு, சமன் செய்து கொள்ள வேண்டும். பின் 2 x 2 மீட்டர் அளவில் பாத்திகள் அமைத்துக் கொள்ளவேண்டும்.
விதைத்தல்
விதைத்த 30 நாட்கள் ஆன நாற்றுக்களை செடிக்கு செடி 10 செ.மீ இடைவெளியும், வரிசைக்கு வரிசை 15 செ.மீ இடைவெளியிலும் நடவு செய்ய வேண்டும்.
நீர் நிர்வாகம்
செடிகளை நட்ட முதல் மாதத்தில் வாரம் இரு முறையும் பிறகு வாரம் ஒரு முறையும் நீர்ப்பாசனம் செய்ய வேண்டும்.
உரங்கள்
ஒரு ஏக்கருக்கு 15 டன் நன்கு மக்கிய தொழு உரம், 125 கிலோ தழைச்சத்து, 125 கிலோ மணிச்சத்து மற்றும் 75 கிலோ சாம்பல்ச் சத்து உரங்களை அளிக்க வேண்டும். தொழு உரம், மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்தினை அடியுரமாகவும், 50 கிலோ தழைச்சத்தினை நடவு செய்த 25வது நாளில் முதல் மேலுரமாகவும், பின்னர் 25 கிலோ தழைச்சத்தினை ஒவ்வொரு முறையும் அறுவடை செய்த பின்னர் மேலுரமாக இடவேண்டும்.
பாதுகாப்பு முறைகள்
களை நிர்வாகம்
செடிகள் நட்ட 30 நாட்களில் முதல் களை எடுக்க வேண்டும். பின்னர் தேவைப்படும் போது களை எடுக்க வேண்டும்.
பயிர் பாதுகாப்பு
அழுகல் நோய்
இதனைக் கட்டுப்படுத்த காப்பர் ஆக்ஸிக் குளோரைடு இரண்டு கிராம் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து வேரின் அருகில் ஊற்ற வேண்டும்.
சாறு உறிஞ்சும் பூச்சி
சாறு உறிஞ்சும் பூச்சிகளின் தாக்குதல் தென்பட்டால் அதனை கட்டுப்படுத்த ஒரு லிட்டர் நீரில் 2 மில்லி டைமீத்தோயேட் பூச்சி கொல்லியினை கலந்து மாலை வேளையில் தெளிக்க வேண்டும்.
அறுவடை
விதைத்த 5 – 6 மாதங்கள் வரை இப்பயிரை அறுவடை செய்யலாம். விதைத்த 45 வது நாளில் முதல் அறுவடையும், அதன் பின் 30 – 40 நாட்கள் இடைவெளியில் தொடர்ச்சியாக அறுவடை செய்ய வேண்டும்.
எண்ணெய் உற்பத்திக்கு, செடிகளில் அதிகளவு பூக்கள் வெடிக்கின்ற தருணத்தில் அதாவது பிப்ரவரி மாதத்தில் தரையிலிருந்து 10 செ.மீ உயரத்தில் அறுத்து எடுக்க வேண்டும்.
மகசூல்
ஒரு ஏக்கருக்கு 9,000 முதல் 10,000 கிலோ உலர்ந்த இலைகளும், 10-12 கிலோ வாசனை எண்ணெயும் மகசூலாகக் கிடைக்கும்.
பயன்கள்:
- மரிக்கொழுந்து இலையையும் நிலாவரை இலையையும் சம அளவு எடுத்து அரைத்து தலைக்கு தடவினால் செம்பட்டை முடியின் நிறம் மாறும்.
- மாலை, கதம்பம் இவற்றில் வாசனைக்காக மரிக்கொழுந்து சேர்க்கப்படுகிறது.
- மரிக்கொழுந்துகள் அழகு சாதனைகள், நறுமணபொருட்கள், புகையிலை மற்றும் வாசனை திரவியங்கள் தயாரிக்க பயன்படுகின்றன.
Syed says
I am looking for Coconut hybrid plants. around 150 Nos. Plz send details. At bestfaarms@gmail.com
cell no 9884036669.
Theni district.
Navinkumar V says
We will let you know nanba….
Please post this news in our facebook group also..
Sathish says
ஐயா அது ஜூன், ஜூலை மாதம் ஜூன். ஜீலை | இல்லை ,,,நன்றி
Siva priya says
தஞ்சாவூர் மாவட்டம்
சுவாமிமலை
மரிகொழுந்து
வளருமா
Hemachandar says
Please share the info with pictures. It will be useful for understanding clearly