• About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Disclaimer
  • February 1, 2023

Agriculture Trip

Best Agriculture Blog in Tamil

  • Home
  • வேளாண்மை
      • காய்கறிகள்
      • கீரைகள்
      • பழங்கள்
      • தானியங்கள்
      • மரங்கள்
      • பூக்கள்
      • கிழங்கு வகைகள்
      • எண்ணெய் வித்துக்கள்
      • மலைத்தோட்டப் பயிர்கள்
      • மூலிகைப் பயிர்கள்
      • இதர சாகுபடி
  • மாடித் தோட்டம்
  • பயிர் பாதுகாப்பு
    • உரங்கள்
    • அரசு மானியம் / திட்டங்கள்
    • மண்
  • கால்நடைகள்
  • இயற்கை மருத்துவம்
    • மருத்துவ பயன்கள்
    • அழகு குறிப்புகள்
    • ஆண்கள்
    • பெண்கள்
    • குழந்தைகள்
  • மற்றவை
    • நெல்
    • விவசாய புகைப்படங்கள்
மாடித்தோட்டத்தில் அவரைக்காய் பயிரிடும் முறை

மாடித்தோட்டத்தில் அவரைக்காய் பயிரிடும் முறை

October 11, 2018 By Navinkumar V 5 Comments


0 Shares
Share
Tweet
Share
+1

நாம் அனைவரும் அன்றாட காய்கறிகளை நமது வீட்டு மாடியில் பயிர் செய்யலாம். இவ்வாறு பயிர் செய்வதினால் நமக்கு உடல் நலத்தை காப்பதுடன் இயற்கை முறையில் விளைந்த காய்கறிகளை உண்ட திருப்தியும் ஏற்படும். எனவே நம்மால் முடிந்த அளவுக்கு மாடித்தோட்டங்களை ஏற்படுத்தலாம். மாடித்தோட்டத்தில் அவரைக்காய் பயிரிடும் முறை யை இங்கு காணலாம்.

தேவையான பொருட்கள்
  • Grow Bags அல்லது Thotti
  • .

  • அடியுரமாக இட மணல், தென்னை நார் கழிவு மக்கியது, மண் புழு உரம், செம்மண், உயிர் உரங்கள், வேப்பம் பிண்ணாக்கு, பஞ்சகாவ்யா.
  • விதைகள்
  • நீர் தெளிக்க பூவாளி தெளிப்பான்
  • பந்தல் போடுவதற்கான உபகரணங்கள்

தொட்டிகள்

தேங்காய் நார் கழிவு இரண்டு பங்கு, மாட்டுச்சாண‌ம் ஒரு பங்கு, சமையலறை கழிவு ஒரு பங்கு இட்டு தொட்டியை நிரப்ப வேண்டும். இந்த கலவை தயாரானதும் உடனே விதைக்க கூடாது. 7-10 நாட்கள் கழித்து விதைப்பு செய்ய வேண்டும். செடிகள் வளர்ப்பதற்காக பைகளில் நிரப்பும்போது, பையின் நீளத்தில் ஒரு அங்குலத்துக்குக் கீழ் இருக்குமாறு நிரப்ப வேண்டும், முழுமையாக நிரப்பக் கூடாது.

விதைத்தல்

நோய் தாக்காத ஆரோக்கியமான விதைகளை தேர்ந்தெடுத்து விதைக்க வேண்டும். அவரையில் செடி அவரை, கொடி அவரை உள்ளன. செடி அவரைக்கு 3 விதைகள் வரை ஒரு தொட்டியில் ஊன்றலாம். கொடி அவரைக்கு 3 முதல் 4 விதைகள் வரை ஊன்றலாம்.

நீர் நிர்வாகம்

விதைகளை விதைத்தவுடன் பூவாளியால் நீர் தெளிக்க வேண்டும். இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை நீர் ஊற்ற வேண்டும்.

பந்தல் முறை

மாடித்தோட்டத்தில் பந்தல் போடுவது சுலபமான வேலை. அதற்கு நான்கு சாக்குகளில் மணலை நிரப்பி ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு மூங்கில் கம்பை ஆழமாக ஊன்றி மூலைக்கு ஒன்றாக நான்கு சாக்குகளையும் நான்கு மூலைகளில் வைக்க வேண்டும். பின்னர் இதில் கயிறு/கம்பிகளை குறுக்கு நெடுக்காக கட்ட வேண்டும். இந்த பந்தலில் கொடிகளை படர விட வேண்டும்.

உரங்கள்

செடிகளைக் காக்கும் இயற்கை பூச்சிக் கொல்லியான வேப்ப எண்ணையை மாதம் ஒரு முறை தெளிக்க வேண்டும். வேப்ப இலைகளைச் சேமித்து நன்கு காய வைத்துத் தூள் செய்துகொள்ள வேண்டும். இந்தத் தூளைச் செடி ஒன்றுக்கு ஒரு பிடி வீதம் செடியின் வேர் பகுதியில் போட்டு கிளறிவிட வேண்டும். இதுவே அடி உரமாகவும், பூச்சிக் கொல்லியாகவும் செயல்படும்.

பாதுகாப்பு முறைகள்

கொடி அவரையில் வளரும் நுனி கிளைகளை கவாத்து செய்வதால் அதிக கிளைகள் தோன்றும். செடியைச் சுற்றி அடி மண்ணை வாரம் ஒரு முறை கிளறி விட வேண்டும். பூச்சி தாக்குதலை தவிர்க்க வாரம் ஒரு முறை வேம்பு பூச்சிவிரட்டியை 2 மில்லி என்ற அளவில் 1 லிட்டர் நீரில் கரைத்து மாலை வேளையில் செடிகளின் மேல் தெளிக்க வேண்டும்.

பஞ்சகாவ்யா 50 மில்லி என்ற அளவில் ஒரு லிட்டர் நீரில் கரைத்து பைகளில் ஊற்ற வேண்டும். இது சிறந்த நோய் தடுப்பானாக செயல்படும்.

அறுவடை

காய்களை முற்றி விடாமல் சரியான பருவத்தில் இருநாட்களுக்கு ஒருமுறை அறுவடை செய்ய வேண்டும். இது 3 முதல் நான்கு மாதம் வரை பலன் கொடுக்கும்.

அவரைக்காய் பயன்கள்:
  • அவரை பிஞ்சை வாரம் இருமுறை சேமித்து உண்பதினால் உடல் ஆரோக்கியம் பெறும், பித்தம் குறையும்.
  • அவரை பிஞ்சில் துவர்புச் சுவை உள்ளதால் இது ரத்தத்தை சுத்திகரிக்கும்.
  • ரத்த நாளங்களில் அதிகப்படியாக சேரும் கொழுப்புகளை குறைக்கும் தன்மை உடையதால் இதனை ரத்த அழுத்தம், இதயநோயால் பாதிக்கப்பட்டவர்கள் அன்றாட உணவில் அவரைக்காய் சேர்த்துக்கொள்வது நல்லது.
  • சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் அவரைக்காய் உண்பதினால் நீரிழிவு நோயால் உண்டாகும் மயக்கம்,தலைசுற்றல் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

Filed Under: மாடித் தோட்டம்

About Navinkumar V

ஹலோ நண்பர்களே,
AgricultureTrip வலைத்தளத்திற்கு உங்களை வரவேற்கிறேன். நான் கணினி பொறியாளராகவும் பகுதி நேர வலைதள நிர்வாகமும் செய்துகொண்டிருக்கிறேன். நான் இங்கு எனக்கு தெரிந்த விவசாய செய்திகளும், இயற்கை விவசாய சாகுபடி முறைகளையும் விவசாய குறிப்புகளையும் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். மேலும் தொடர்புக்கு என்னுடைய சமூகவலைத்தளங்களான முகநூல் மற்றும் ட்விட்டர் வலைதங்களை பார்க்கவும். உடனடி தொடர்புக்கு கிளிக் செய்யவும்

Comments

  1. S.S. PAUL SUBBU REDDY says

    December 21, 2019 at 1:40 pm

    There are so many valuable information. Themurkaraisal is little different from Namazhvar method I suppose. It would be much better if you had mentioned the size of grow bags for particular plant.

    Reply
    • Navinkumar V says

      December 23, 2019 at 6:25 am

      Sure i will update soon in blog with those details.. thanks

      Reply
  2. Divya Shankar says

    April 4, 2020 at 7:13 pm

    Ennoda terrace garden la yeli tholla romba jaasthiya iruku.. Pls provide me any solution for this.. Thanks in advance

    Reply
  3. Ganesan Muthukumar says

    April 7, 2021 at 8:19 am

    அன்பரே, எனக்கு கொடி அவரை, கொடி பீன்சு ஹைப்ரிட் இல்லாத விதைகள் வேண்டும் . எங்கு வாங்குவது என பல குழப்பங்கள். இங்கிருக்கும் கடைகளில் ஒரு விதமான பட்டை கொடி அவரை வாங்கி பயிரிட்டேன். காய்கள் காய்த்தாலும் மணம் என்பது பெயரளவிற்கு கூட இல்லை.. வேறு ரகங்களாகிய கோழி அவரை, கிளிப்பச்சை நிறத்தில் சின்னதாக கடைகளில் கிடைக்கும் நல்ல ருசியுடன் இருக்கும் அவரை மற்றும் உங்கள் படத்தில் போட்டிருக்கும் ரகம் போன்ற விதைகளும் நல்ல பீன்சு கொடி விதையும் கிடைக்க உதவுவீர்களா

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

உங்களின் சந்தேகங்களை இங்கு தேடுங்கள்

சந்தேகங்களை கேட்க Facebook குரூப்பில் இணையவும்

Categories

  • அரசு மானியம் / திட்டங்கள் (4)
  • அழகு குறிப்புகள் (6)
  • ஆண்கள் (3)
  • இதர சாகுபடி (7)
  • உரங்கள் (8)
  • எண்ணெய் வித்துக்கள் (4)
  • காய்கறிகள் (29)
  • கால்நடைகள் (9)
  • கிழங்கு வகைகள் (6)
  • கீரைகள் (18)
  • குழந்தைகள் (3)
  • தானியங்கள் (10)
  • நெல் (3)
  • நோய்களும் அதன் தீர்வும் (3)
  • பயிர் பாதுகாப்பு (1)
  • பழங்கள் (24)
  • பூக்கள் (12)
  • பெண்கள் (4)
  • மண் (2)
  • மரங்கள் (7)
  • மருத்துவ பயன்கள் (47)
  • மலைத்தோட்டப் பயிர்கள் (4)
  • மாடித் தோட்டம் (70)
  • மூலிகைப் பயிர்கள் (7)
  • விவசாய புகைப்படங்கள் (2)

Recent Posts

  • ஒவ்வொரு மரத்திற்கும் எவ்வளவு இடைவெளி விட்டு நடவேண்டும் என்று தெரியுமா?
  • தமிழ்நாட்டில் உள்ள அரசு வேளாண் கல்லூரிகள் பற்றிய விவரங்கள் இதோ
  • தமிழ்நாட்டில் உள்ள தனியார் வேளாண் கல்லூரிகள் மற்றும் அவற்றில் உள்ள படிப்புகள் இதோ
  • சளி, இருமலைப் போக்கும் கற்பூரவள்ளி டீ : எப்படி போடுவது..?
  • அகத்தி மரம் வளர்ப்பு முறை மற்றும் பயன்கள்
  • இது உங்கள் தோட்டம் – புகைப்பட தொகுப்பு (Part 2)
  • இது உங்கள் தோட்டம் – புகைப்பட தொகுப்பு (Part 1)
  • புதிய பயிர் ரகங்களை வெளியிட்டுள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் விவரம் இதோ
  • மண் மூலம் பரவும் நோய்களை கட்டுப்படுத்தும் முறைகள் இதோ
  • விவசாயிகளின் நிலங்களை இலவசமாக உழவு செய்து தரும் திட்டம்

Tags

Cotton (1) அன்னாசிப்பழம் (1) அவரைக்காய் (1) ஆரஞ்சு பழம் (1) இஞ்சி (1) இயற்கை விவசாயம் (9) இலந்தை பழம் (1) எலுமிச்சை (1) கத்தரிக்காய் (1) கம்பு (1) கறிவேப்பிலை (1) காப்பி (1) கொய்யா செடி (1) கோதுமை (1) கோவைக்காய் (1) சப்போட்டா பழம் (1) சோற்று கற்றாழை (1) சோளம் (1) தக்காளி (1) தக்காளி சாகுபடி (1) தர்பூசணி (1) திராட்சை பழம் (1) தென்னைமரம் (1) தேங்காய் சாகுபடி (1) தேயிலை (1) நெல் (1) நெல் சாகுபடி (1) பப்பாளி (1) பருத்தி (1) பலாப்பழம் (1) பீன்ஸ் (1) பீன்ஸ் சாகுபடி (1) புதினா (1) மகசூல் (1) மருத்துவ பயன்கள் (2) மாடித் தோட்டம் (6) மாடித்தோட்டம் (1) மாதுளைப்பழம் (1) மாம்பழம் (1) மாம்பழம் உற்பத்தி (1) முருங்கைக்காய் (Drumstick) (1) விதை (1) வீட்டு காய்கறி தோட்டம் (1) வெண்டைக்காய் (1) வெற்றிலை (1)

About Agriculturetrip

AgricultureTrip வலைத்தளத்திற்கு உங்களை வரவேற்கிறேன். நான் நவீன்குமார் கணினி பொறியாளராக பணியாற்றி கொண்டிருக்கிறேன். பகுதி நேர வலைதள நிர்வாகமும் செய்துகொண்டிருக்கிறேன். இந்த வலைத்தளத்தில் விவசாய உற்பத்தி முறைகள் மற்றும் விவசாய பயன்பாடு முறைகள் பற்றி தகவல்களை திரட்டி இங்கு பதிவிட்டுள்ளேன். மேலும் படிக்க…

Contact

Mahindra service station opp
Behind CSI Church
Chikkathogur
Bangalore – 560100

blogbynavin@gmail.com
Phone: (+91) 80508 15727
Fax: (+91) 99432 12913

Subscribe Our Newsletter

Join Our Newsletter
  Thank you for Signing Up
Please correct the marked field(s) below.
1,true,6,Contact Email,2 1,false,1,First Name,2 1,false,1,Last Name,2

Copyright © 2023 by Agriculture Trip. Developed by Navinblog