- மல்லிகை பூக்கள் நல்ல நறுமணமுடையவை. பெண்கள் பூவினை கட்டி தலையில் சூடிகொள்ளவும், மாலையாக கோவில் பூஜையிலும் பயன்படுகிறது.
- மல்லிகையானது இந்தியா, இலங்கை, தாய்லாந்து, மியான்மர் போன்ற நாடுகளில் காணப்படுகிறது.
- மல்லிகை வளர்வதற்கு போதிய அளவு வசதியும், சூரிய வெளிச்சமும் முக்கியத் தேவையாகும்.
- வாசனை எண்ணெய் தயாரிக்க மல்லிகையின் மொக்குகள் பயன்படுகிறது.
- தமிழகத்தில் மல்லிகைச்செடியினை வீடுகளிலும், தோட்டங்களிளும் பந்தலிட்டு வளர்த்தி அதன் பூக்களை விற்பனை செய்கின்றனர்.
மல்லிகை எப்படி பயிரிடுவது…?
- சிங்கிள் மோக்ரா, டபுள் மோக்ரா, குண்டுமல்லி, ராமநாதபுரம் ஆகிய இரகங்கள் சாகுபடிக்கு ஏற்றவை.
- ஜுன் – நவம்பர் மாதம் வரை மல்லிகை நடவுக்கு ஏற்ற பருவம் ஆகும்.
- நல்ல வடிகால் வசதியுடைய வளமான இருமண்பாடு கொண்ட செம்மண் நிலங்கள் சாகுபடிக்கு மிகவும் ஏற்றது. மண்ணின் கார அமிலத்தன்மை 6 முதல் 8 வரை இருக்கவேண்டும்.
- நிலத்தை இரண்டு அல்லது மூன்று முறை நன்கு உழவேண்டும். பிறகு 30 செ.மீ நீளம், அகலம் மற்றும் ஆழம் உள்ள குழிகளை 1.25 மீட்டர் இடைவெளியில் தயார் படுத்திக் கொள்ள வேண்டும். பின்பு ஒவ்வொரு குழியிலும் தொழு உரம் இட்டு ஆற போட வேண்டும்.
- ஒரு எக்டருக்கு நடவு செய்ய 6400 பதியன்கள் அல்லது வேர் விட்ட குச்சிகள் தேவைப்படும்.
- தயார் செய்துள்ள குழிகளின் மத்தியில் பதியன்களை நட்டு நீர்ப்பாய்ச்ச வேண்டும்.
நீர் நிர்வாகம்
மூன்றாம் நாள் உயிர்த்தண்ணீர் பாய்ச்ச வேண்டும். செடிகள் வேர்ப்பிடித்து நன்கு வளரும் வரை வாரத்திற்கு ஒரு முறை நீர்ப்பாய்ச்ச வேண்டும். பிறகு மண்ணின் தன்மை மற்றும் காலநிலைக்கேற்ப நீர்ப் பாய்ச்ச வேண்டும்.
உரங்கள்
மல்லிகைச் செடிக்கு 60 கிராம் தழைச்சத்து, 120 கிராம் மணிச்சத்து மற்றும் 120 கிராம் சாம்பல் சத்து கொடுக்கக்கூடிய உரங்களை இரு பகுதிகளாகப் பிரித்து கவாத்து செய்தவுடன் ஒரு முறையும் பின்பு ஜுன் – ஜுலை மாதத்தில் மறுமுறையும் செடியினைச் சுற்றி இட்டு மண்ணோடு கலக்கச் செய்யவேண்டும்.
பாதுகாப்பு முறைகள் :
- செடிகள் வளரும் வரை களை இல்லாமல் பராமரிக்க வேண்டும். தரையிலிருந்து 50 செ.மீ உயரத்தில் நவம்பர் இறுதி வாரத்தில் மல்லிகைச் செடிகளைக் கவாத்து செய்யவேண்டும். கவாத்து செய்யும் போது நோயுற்ற உலர்ந்த குச்சிகள் மற்றும் குறுக்காக வளர்ந்த கிளைகளையும் வெட்டி விட்டு சூரிய ஒளி நன்கு படுமாறு செய்யவேண்டும்.
- மொட்டுப்புழுக்களை கட்டுப்படுத்த மோனோகுரோட்டோபாஸ் 2 மில்லி மருந்தை, ஒரு லிட்டர் நீரில் கலந்து தெளிக்கவேண்டும்.
- வேர்ப்புழு தாக்குதலுக்கு 5 கிராம் பியூரடான் குருணை மருந்தை செடியைச் சுற்றி இட்டு மண்ணுடன் கலந்து, நீர்ப்பாய்ச்ச வேண்டும்.
- வேர் அழுகளுக்கு காப்பர் ஆக்ஸி குளோரைடு 0.25 சதம் கரைசலை, ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து செடியினைச் சுற்றி மண்ணில் ஊற்றவேண்டும்.
- இரும்புச்சத்து குறைபாட்டினால் இலைகள் மஞ்சளாவதைத் தடுக்க லிட்டருக்கு 5 கிராம் பெர்ரஸ் சல்பேட் கரைசலை 3 மாதங்களுக்கு ஒரு முறை தெளிக்கவேண்டும்.
- மல்லிகைச் செடி மார்ச் – ஏப்ரல் மாதங்களில் பூக்க ஆரம்பிக்கும். செடிகள் நட்ட முதல் ஆண்டிலேயே பூக்க ஆரம்பிக்கும். இரண்டாம் ஆண்டிலிருந்து சீரான விளைச்சல் இருக்கும்.
- சரியான பராமரிப்பு இருந்தால் எக்டருக்கு 8700 கிலோ பூ மொக்குகள் கிடைக்கும்.
மல்லிகை பயன்கள்:
- 4 மல்லிகைப் பூவை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை அருந்தி வந்தால் வயிற்றில் உள்ள கொக்கி புழு, நாடாப் புழு போன்றவை அழியும்.
- மல்லிகைப் பூக்களை நிழலில் வைத்து உலர்த்தி அவை காகிதம் போல ஆனதும், அவற்றை பொடியாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். இதனை தண்ணீரில் கலந்து குடித்து வர சிறுநீரக கற்கள் தானாகவே கரைந்து போகும். எந்த உயர் சிகிச்சையும் தேவைப்படாது.
- அடிபட்டு அல்லது சுளுக்குப் பிடித்து வீக்கம் காணப்பட்டாலும், நாள்பட்ட வீக்கமாக இருந்தாலும், மல்லிகைப் பூவை அரைத்துப் பூசினால் வீக்கம் குறையும்.
- நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள் மல்லிகைப் பூக்கள் ஒன்றிரண்டை உண்டு வர நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.
- மன அழுத்தம், உடல் சூடு போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள், ஒன்றுமே செய்ய வேண்டாம். பிடித்த அளவிற்கு மல்லிகைப் பூவை வாங்கி தலையில் சூடினால் போதும். மன அழுத்தமும் குறையும், உடல் சூடும் மாறும்.
நல்ல பணி.பாராட்டுக்கள்.
Malligai natrugal enga kidaikkum sir
Manoj
9994080909
வணக்கம் விவசாயம் செய்யக்கூடிய அனைத்து நண்பர்களுக்கும் எனது நன்றி,நான் ஒரு உழவன் என்பதில் பெருமை கொள்கிறேன்,மல்லிகை விவசாகிகலுக்கு ஒரு வேண்டுகோள் என்னிடம் மல்லிகை செடி நாற்றுகள் உள்ளன தரமான உள்ளுர் தாய் செடி நாற்றுகள்,நல்ல லாபகரமான விவசாயம் இது ,தேவைபடும் நண்பர்கள் தொடர்புக்கு 8438125200 whats uphttps://youtu.be/v7NMObwiovI
ஐயா,
மல்லிகை மொட்டுக்கள் விரியாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்..
ஏதோ ஒரு மூலிகையை தெளித்தால் பல நாட்கள் விரியாமல் இருக்குமாம்.
அது எந்த மாதிரியான மூலிகை என்று கூறவும்..
மிக்க நன்றிகள்…🙏🙏
9894296427
Therinthaal enakum sollungal