• About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Disclaimer
  • September 11, 2025

Agriculture Trip

Best Agriculture Blog in Tamil

  • Home
  • வேளாண்மை
      • காய்கறிகள்
      • கீரைகள்
      • பழங்கள்
      • தானியங்கள்
      • மரங்கள்
      • பூக்கள்
      • கிழங்கு வகைகள்
      • எண்ணெய் வித்துக்கள்
      • மலைத்தோட்டப் பயிர்கள்
      • மூலிகைப் பயிர்கள்
      • இதர சாகுபடி
  • மாடித் தோட்டம்
  • பயிர் பாதுகாப்பு
    • உரங்கள்
    • அரசு மானியம் / திட்டங்கள்
    • மண்
  • கால்நடைகள்
  • இயற்கை மருத்துவம்
    • மருத்துவ பயன்கள்
    • அழகு குறிப்புகள்
    • ஆண்கள்
    • பெண்கள்
    • குழந்தைகள்
  • மற்றவை
    • நெல்
    • விவசாய புகைப்படங்கள்
மல்லிகை

மல்லிகை பூ சாகுபடி முறைகள் மற்றும் பயன்கள்:

November 19, 2017 By Navinkumar V 6 Comments


305 Shares
Share305
Tweet
Share
+1
  • மல்லிகை பூக்கள் நல்ல நறுமணமுடையவை. பெண்கள் பூவினை கட்டி தலையில் சூடிகொள்ளவும், மாலையாக கோவில் பூஜையிலும் பயன்படுகிறது.
  • மல்லிகையானது இந்தியா, இலங்கை, தாய்லாந்து, மியான்மர் போன்ற நாடுகளில் காணப்படுகிறது.
  • மல்லிகை வளர்வதற்கு போதிய அளவு வசதியும், சூரிய வெளிச்சமும் முக்கியத் தேவையாகும்.
  • வாசனை எண்ணெய் தயாரிக்க மல்லிகையின் மொக்குகள் பயன்படுகிறது.
  • தமிழகத்தில் மல்லிகைச்செடியினை வீடுகளிலும், தோட்டங்களிளும் பந்தலிட்டு வளர்த்தி அதன் பூக்களை விற்பனை செய்கின்றனர்.
மல்லிகை எப்படி பயிரிடுவது…?
  • சிங்கிள் மோக்ரா, டபுள் மோக்ரா, குண்டுமல்லி, ராமநாதபுரம் ஆகிய இரகங்கள் சாகுபடிக்கு ஏற்றவை.
  • ஜுன் – நவம்பர் மாதம் வரை மல்லிகை நடவுக்கு ஏற்ற பருவம் ஆகும்.
  • நல்ல வடிகால் வசதியுடைய வளமான இருமண்பாடு கொண்ட செம்மண் நிலங்கள் சாகுபடிக்கு மிகவும் ஏற்றது. மண்ணின் கார அமிலத்தன்மை 6 முதல் 8 வரை இருக்கவேண்டும்.
  • நிலத்தை இரண்டு அல்லது மூன்று முறை நன்கு உழவேண்டும். பிறகு 30 செ.மீ நீளம், அகலம் மற்றும் ஆழம் உள்ள குழிகளை 1.25 மீட்டர் இடைவெளியில் தயார் படுத்திக் கொள்ள வேண்டும். பின்பு ஒவ்வொரு குழியிலும் தொழு உரம் இட்டு ஆற போட வேண்டும்.
  • ஒரு எக்டருக்கு நடவு செய்ய 6400 பதியன்கள் அல்லது வேர் விட்ட குச்சிகள் தேவைப்படும்.
  • தயார் செய்துள்ள குழிகளின் மத்தியில் பதியன்களை நட்டு நீர்ப்பாய்ச்ச வேண்டும்.
நீர் நிர்வாகம்

மூன்றாம் நாள் உயிர்த்தண்ணீர் பாய்ச்ச வேண்டும். செடிகள் வேர்ப்பிடித்து நன்கு வளரும் வரை வாரத்திற்கு ஒரு முறை நீர்ப்பாய்ச்ச வேண்டும். பிறகு மண்ணின் தன்மை மற்றும் காலநிலைக்கேற்ப நீர்ப் பாய்ச்ச வேண்டும்.

உரங்கள்

மல்லிகைச் செடிக்கு 60 கிராம் தழைச்சத்து, 120 கிராம் மணிச்சத்து மற்றும் 120 கிராம் சாம்பல் சத்து கொடுக்கக்கூடிய உரங்களை இரு பகுதிகளாகப் பிரித்து கவாத்து செய்தவுடன் ஒரு முறையும் பின்பு ஜுன் – ஜுலை மாதத்தில் மறுமுறையும் செடியினைச் சுற்றி இட்டு மண்ணோடு கலக்கச் செய்யவேண்டும்.

பாதுகாப்பு முறைகள் :
  • செடிகள் வளரும் வரை களை இல்லாமல் பராமரிக்க வேண்டும். தரையிலிருந்து 50 செ.மீ உயரத்தில் நவம்பர் இறுதி வாரத்தில் மல்லிகைச் செடிகளைக் கவாத்து செய்யவேண்டும். கவாத்து செய்யும் போது நோயுற்ற உலர்ந்த குச்சிகள் மற்றும் குறுக்காக வளர்ந்த கிளைகளையும் வெட்டி விட்டு சூரிய ஒளி நன்கு படுமாறு செய்யவேண்டும்.
  • மொட்டுப்புழுக்களை கட்டுப்படுத்த மோனோகுரோட்டோபாஸ் 2 மில்லி மருந்தை, ஒரு லிட்டர் நீரில் கலந்து தெளிக்கவேண்டும்.
  • வேர்ப்புழு தாக்குதலுக்கு 5 கிராம் பியூரடான் குருணை மருந்தை செடியைச் சுற்றி இட்டு மண்ணுடன் கலந்து, நீர்ப்பாய்ச்ச வேண்டும்.
  • வேர் அழுகளுக்கு காப்பர் ஆக்ஸி குளோரைடு 0.25 சதம் கரைசலை, ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து செடியினைச் சுற்றி மண்ணில் ஊற்றவேண்டும்.
  • இரும்புச்சத்து குறைபாட்டினால் இலைகள் மஞ்சளாவதைத் தடுக்க லிட்டருக்கு 5 கிராம் பெர்ரஸ் சல்பேட் கரைசலை 3 மாதங்களுக்கு ஒரு முறை தெளிக்கவேண்டும்.
  • மல்லிகைச் செடி மார்ச் – ஏப்ரல் மாதங்களில் பூக்க ஆரம்பிக்கும். செடிகள் நட்ட முதல் ஆண்டிலேயே பூக்க ஆரம்பிக்கும். இரண்டாம் ஆண்டிலிருந்து சீரான விளைச்சல் இருக்கும்.
  • சரியான பராமரிப்பு இருந்தால் எக்டருக்கு 8700 கிலோ பூ மொக்குகள் கிடைக்கும்.
மல்லிகை பயன்கள்:
  • 4 மல்லிகைப் பூவை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை அருந்தி வந்தால் வயிற்றில் உள்ள கொக்கி புழு, நாடாப் புழு போன்றவை அழியும்.
  • மல்லிகைப் பூக்களை நிழலில் வைத்து உலர்த்தி அவை காகிதம் போல ஆனதும், அவற்றை பொடியாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். இதனை தண்ணீரில் கலந்து குடித்து வர சிறுநீரக கற்கள் தானாகவே கரைந்து போகும். எந்த உயர் சிகிச்சையும் தேவைப்படாது.
  • அடிபட்டு அல்லது சுளுக்குப் பிடித்து வீக்கம் காணப்பட்டாலும், நாள்பட்ட வீக்கமாக இருந்தாலும், மல்லிகைப் பூவை அரைத்துப் பூசினால் வீக்கம் குறையும்.
  • நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள் மல்லிகைப் பூக்கள் ஒன்றிரண்டை உண்டு வர நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.
  • மன அழுத்தம், உடல் சூடு போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள், ஒன்றுமே செய்ய வேண்டாம். பிடித்த அளவிற்கு மல்லிகைப் பூவை வாங்கி தலையில் சூடினால் போதும். மன அழுத்தமும் குறையும், உடல் சூடும் மாறும்.

Filed Under: பூக்கள்

About Navinkumar V

ஹலோ நண்பர்களே,
AgricultureTrip வலைத்தளத்திற்கு உங்களை வரவேற்கிறேன். நான் கணினி பொறியாளராகவும் பகுதி நேர வலைதள நிர்வாகமும் செய்துகொண்டிருக்கிறேன். நான் இங்கு எனக்கு தெரிந்த விவசாய செய்திகளும், இயற்கை விவசாய சாகுபடி முறைகளையும் விவசாய குறிப்புகளையும் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். மேலும் தொடர்புக்கு என்னுடைய சமூகவலைத்தளங்களான முகநூல் மற்றும் ட்விட்டர் வலைதங்களை பார்க்கவும். உடனடி தொடர்புக்கு கிளிக் செய்யவும்

Comments

  1. நாராயணசாமி. says

    December 7, 2018 at 2:50 pm

    நல்ல பணி.பாராட்டுக்கள்.

    Reply
  2. Manoj says

    February 28, 2020 at 2:56 am

    Malligai natrugal enga kidaikkum sir
    Manoj
    9994080909

    Reply
  3. Palpandi says

    May 4, 2020 at 3:15 pm

    வணக்கம் விவசாயம் செய்யக்கூடிய அனைத்து நண்பர்களுக்கும் எனது நன்றி,நான் ஒரு உழவன் என்பதில் பெருமை கொள்கிறேன்,மல்லிகை விவசாகிகலுக்கு ஒரு வேண்டுகோள் என்னிடம் மல்லிகை செடி நாற்றுகள் உள்ளன தரமான உள்ளுர் தாய் செடி நாற்றுகள்,நல்ல லாபகரமான விவசாயம் இது ,தேவைபடும் நண்பர்கள் தொடர்புக்கு 8438125200 whats uphttps://youtu.be/v7NMObwiovI

    Reply
  4. Ramesh Kumar U says

    December 17, 2021 at 11:15 am

    ஐயா,
    மல்லிகை மொட்டுக்கள் விரியாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்..
    ஏதோ ஒரு மூலிகையை தெளித்தால் பல நாட்கள் விரியாமல் இருக்குமாம்.
    அது எந்த மாதிரியான மூலிகை என்று கூறவும்..
    மிக்க நன்றிகள்…🙏🙏
    9894296427

    Reply
    • Priyanka says

      April 3, 2022 at 7:52 am

      Therinthaal enakum sollungal

      Reply

Leave a Reply to Palpandi Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

உங்களின் சந்தேகங்களை இங்கு தேடுங்கள்

சந்தேகங்களை கேட்க Facebook குரூப்பில் இணையவும்

Categories

  • அரசு மானியம் / திட்டங்கள் (5)
  • அழகு குறிப்புகள் (6)
  • ஆண்கள் (3)
  • இதர சாகுபடி (8)
  • உரங்கள் (8)
  • எண்ணெய் வித்துக்கள் (4)
  • காய்கறிகள் (29)
  • கால்நடைகள் (9)
  • கிழங்கு வகைகள் (6)
  • கீரைகள் (18)
  • குழந்தைகள் (3)
  • தானியங்கள் (10)
  • நெல் (4)
  • நோய்களும் அதன் தீர்வும் (3)
  • பயிர் பாதுகாப்பு (1)
  • பழங்கள் (24)
  • பூக்கள் (12)
  • பெண்கள் (4)
  • மண் (2)
  • மரங்கள் (7)
  • மருத்துவ பயன்கள் (48)
  • மலைத்தோட்டப் பயிர்கள் (4)
  • மாடித் தோட்டம் (70)
  • மூலிகைப் பயிர்கள் (8)
  • விவசாய புகைப்படங்கள் (3)

Recent Posts

  • சித்தரத்தை மருத்துவ பயன்கள்
  • தமிழ்நாட்டிலுள்ள நெல் ரகங்களும் அதற்கான பருவங்களும் (மாவட்டம் வாரியாக )
  • இது உங்கள் தோட்டம் – புகைப்பட தொகுப்பு (Part 3)
  • ஆடிப்பட்டம் தேடி விதை பழமொழியின் பொருள் என்னெவென்று தெரியுமா
  • TNAU – தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் Courses பற்றிய முழு தகவல் இதோ.
  • ஒவ்வொரு மரத்திற்கும் எவ்வளவு இடைவெளி விட்டு நடவேண்டும் என்று தெரியுமா?
  • தமிழ்நாட்டில் உள்ள அரசு வேளாண் கல்லூரிகள் பற்றிய விவரங்கள் இதோ
  • தமிழ்நாட்டில் உள்ள தனியார் வேளாண் கல்லூரிகள் மற்றும் அவற்றில் உள்ள படிப்புகள் இதோ
  • சளி, இருமலைப் போக்கும் கற்பூரவள்ளி டீ : எப்படி போடுவது..?
  • அகத்தி மரம் வளர்ப்பு முறை மற்றும் பயன்கள்

Tags

Cotton (1) அன்னாசிப்பழம் (1) அவரைக்காய் (1) ஆரஞ்சு பழம் (1) இஞ்சி (1) இயற்கை விவசாயம் (9) இலந்தை பழம் (1) எலுமிச்சை (1) கத்தரிக்காய் (1) கம்பு (1) கறிவேப்பிலை (1) காப்பி (1) கொய்யா செடி (1) கோதுமை (1) கோவைக்காய் (1) சப்போட்டா பழம் (1) சோற்று கற்றாழை (1) சோளம் (1) தக்காளி (1) தக்காளி சாகுபடி (1) தர்பூசணி (1) திராட்சை பழம் (1) தென்னைமரம் (1) தேங்காய் சாகுபடி (1) தேயிலை (1) நெல் (2) நெல் சாகுபடி (1) பப்பாளி (1) பருத்தி (1) பலாப்பழம் (1) பீன்ஸ் (1) பீன்ஸ் சாகுபடி (1) புதினா (1) மகசூல் (1) மருத்துவ பயன்கள் (2) மாடித் தோட்டம் (6) மாடித்தோட்டம் (1) மாதுளைப்பழம் (1) மாம்பழம் (1) மாம்பழம் உற்பத்தி (1) முருங்கைக்காய் (Drumstick) (1) விதை (1) வீட்டு காய்கறி தோட்டம் (1) வெண்டைக்காய் (1) வெற்றிலை (1)

About Agriculturetrip

AgricultureTrip வலைத்தளத்திற்கு உங்களை வரவேற்கிறேன். நான் நவீன்குமார் கணினி பொறியாளராக பணியாற்றி கொண்டிருக்கிறேன். பகுதி நேர வலைதள நிர்வாகமும் செய்துகொண்டிருக்கிறேன். இந்த வலைத்தளத்தில் விவசாய உற்பத்தி முறைகள் மற்றும் விவசாய பயன்பாடு முறைகள் பற்றி தகவல்களை திரட்டி இங்கு பதிவிட்டுள்ளேன். மேலும் படிக்க…

Contact

Mahindra service station opp
Behind CSI Church
Chikkathogur
Bangalore – 560100

blogbynavin@gmail.com

Subscribe Our Newsletter

Join Our Newsletter
  Thank you for Signing Up
Please correct the marked field(s) below.
1,true,6,Contact Email,2 1,false,1,First Name,2 1,false,1,Last Name,2

Copyright © 2025 by Agriculture Trip. Developed by Navinblog