விவசாயத்தை பொருத்தவரை பட்டம் என்பது காலநிலை சார்ந்ததாகும். அதனால் குறிப்பிட்ட பட்டத்துக்கு ஏற்றவாறு பயிர் செய்வது மிகவும் முக்கியம்.
ஆடிப்பட்டத்தில் தானியப் பயிர்கள் அனைத்தும் சாகுபடி செய்வார்கள் மற்றும் காய்கறிப் பயிர்களும் பெரும்பாலானவற்றை சாகுபடி செய்வார்கள்.
தொடர்ந்து ஒரே பயிரை சாகுபடி செய்யாமல், மாற்றுப் பயிர்களை விளைவிக்கும்போது மாற்றுப் பயிர்களுக்கு முந்தைய பயிரின் கழிவுகள் எருவாகப் பயன்படுவதோடு முந்தைய பயிரில் தங்கி வாழ்ந்த நோய்க்கிருமிகள் அதிகம் புதுப்பயிரைத் தாக்குவது இல்லை.
காற்கறிகள் மனிதர்களுக்கு சரிவிகித உணவு அளிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அவை சுறுசுறுப்பான வாழ்க்கைக்கு உதவும் உயிர் சத்துக்கள், தாது உப்புக்கள், நார் சத்துக்களை வழங்குவதுடன் சக்திக்கு தேவைப்படும் மாவுச் சத்துக்களையும் அதிகமான அளவில் வழங்குகிறது. எனவே மாதவாரியான உள்நாடு மற்றும் வெளிநாடு சந்தைத் தேவையினை கருத்தில் கொண்டும், அதிக லாபம் பெறும் நோக்கத்தில் மாதாந்திர காய்கறிகளின் விலை விவரத்தினை அறிந்தும் பயிரிட வேண்டும்.
நமது பேஸ்புக் குழுவில் இணைந்து உங்கள் விவசாய சந்தேகங்களை கேட்க விரும்பும் நண்பர்கள் கீழுள்ள லிங்கில் இணையவும் FACEBOOK குரூப்பில் இணைய கிளிக் செய்யவும்
ஜனவரி: (மார்கழி, தை)
கத்தரி, மிளகாய், பாகற்காய், தக்காளி, பூசணி, சுரைக்காய், முள்ளங்கி, கீரைகள், வெங்காயம், அவரை, கொத்தவரை, கரும்பு
பிப்ரவரி: (தை,மாசி)
கத்தரி, தக்காளி, மிளகாய், பாகற்காய், வெண்டை, சுரைக்காய், கொத்தவரை, பீர்க்கங்காய், கீரைகள், கோவைக்காய், அவரை, சூரியகாந்தி, உளுந்து, கம்பு, நாட்டுச்சோளம், கரும்பு, பருத்தி
மார்ச்: (மாசி, பங்குனி)
வெண்டை, பாகற்காய், தக்காளி, கோவை, கொத்தவரை, பீர்க்கங்காய், சூரியகாந்தி, உளுந்து, கம்பு, நாட்டுச்சோளம், பருத்தி, கத்தரி
ஏப்ரல்: (பங்குனி, சித்திரை)
செடி முருங்கை, கொத்தவரை, வெண்டை, பீர்க்கங்காய், புடலை, பாகற்காய், அவரை, எள், கம்பு, நாட்டுச்சோளம்
மே: (சித்திரை, வைகாசி)
செடி முருங்கை, கத்தரி, தக்காளி, கொத்தவரை, வெங்காயம், அவரை, எள், நாட்டுச்சோளம்
ஜூன்: (வைகாசி, ஆனி)
கத்தரி, தக்காளி, கோவை, பூசணி, கீரைகள், வெண்டை, கொத்தவரை, தென்னை
மாடித்தோட்டத்தில் காய்கறிகள், பழங்கள், கீரைகள், பயிரிட விரும்பும் நண்பர்கள் இந்த லிங்கில் சென்று படியுங்கள் மாடித்தோட்ட விவசாயம் பற்றி அறிய கிளிக் செய்யவும்
ஜூலை: (ஆனி, ஆடி)
மிளகாய், பாகற்காய், சுரைக்காய், பூசணி, பீர்க்கங்காய், முள்ளங்கி, வெண்டை, கொத்தவரை, தக்காளி, புடலை, எள், சூரியகாந்தி, உளுந்து, தென்னை, தட்டப்பயறு, துவரை, மொச்சை, பாசிப்பயறு
ஆகஸ்ட்: (ஆடி, ஆவணி)
முள்ளங்கி, பீர்க்கங்காய், பாகற்காய், மிளகாய், வெண்டை, சுரைக்காய், அவரை, கத்தரி, மிளகாய், சூரியகாந்தி, பருத்தி, பாசிப்பயறு, துவரை, மொச்சை
செப்டம்பர்: (ஆவணி, புரட்டாசி)
செடிமுருங்கை, கத்தரி, முள்ளங்கி, கீரை, பீர்க்கங்காய், பூசணி, புடலை, அவரை, மிளகாய், நெல், பருத்தி
அக்டோபர்: (புரட்டாசி, ஐப்பசி)
செடிமுருங்கை, கத்தரி, முள்ளங்கி, வெங்காயம், கொத்தவரை, சுண்டல், நெல், பருத்தி
நவம்பர்: (ஐப்பசி, கார்த்திகை)
செடிமுருங்கை, கத்தரி, தக்காளி, முள்ளங்கி, பூசணி, மிளகாய், கொத்தவரை, சூரியகாந்தி, சுண்டல், நெல், நாட்டுச்சோளம், தென்னை, கரும்பு, வாழை, மரவள்ளி
டிசம்பர்: (கார்த்திகை, மார்கழி)
கத்தரி, சுரைக்காய், தக்காளி, பூசணி, முள்ளங்கி, மிளகாய், சுண்டல், நெல், நாட்டுச்சோளம், தென்னை, வாழை, மரவள்ளி ஆகிய காய்கறிகளை பயிரிடலாம்.
200 வகையான காய்கறிகள், பழங்கள், கீரைகள், மாடித்தோட்டம் பற்றிய தகவலை ஒரே இடத்தில அறிய விரும்பும் நண்பர்கள் இந்த லிங்கில் சென்று படிக்கவும். 200 காய்கறிகள், பழங்கள், கீரைகள், மாடிதோட்ட குறிப்புகள் அறிய கிளிக் செய்யவும்
மானியம் :-
தோட்டக்கலைத் துறையில் உள்ள துல்லிய பண்ணைத் திட்டத்தின் கீழ் 65 சதவீத மானிய விலையில் சொட்டு நீர்ப்பாசன உதவிகள் மற்றும் ரூ. 15,000 மதிப்பில் நீரில் கரையும் உரம் ஆகிய இடுபொருள்களுக்கான மானிய உதவிகளைப் பெற்று காய்கறி சாகுபடி செய்ய முன்வருமாறு விவசாயிகள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் துறை மூலமாக உதவிகளைப் பெற்று சீரிய முறையில் காய்கறி உற்பத்தி செய்ய தங்கள் ஒன்றியத்திலுள்ள தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர்களை விவசாயிகள் தொடர்பு கொள்ளலாம்.
குறிப்பு :-
எலுமிச்சை விதைகள் பழத்திலிருந்து எடுத்த 1 வாரத்திற்குள் நடப்பட வேண்டும். இந்த எலுமிச்சை விதைகளுடன் சாம்பலைச் சேர்த்து பாதுகாத்தால் இன்னும் சிறிதுகாலம் விதைகள் தாக்குப்பிடிக்கும்.
நாவல் பழ விதைகள் பழத்திலிருந்து எடுக்கப்பட்ட 2 நாட்களுக்குள் நடப்பட வேண்டும். மாவிதைகள் 15 நாட்களிலும், கொய்யா விதைகள் 16 நாள் வரையிலும் வைத்து நடவு செய்யலாம்.
Oru mango try vachi kaapatha mudila ji Enakey asingama iruku sethuruthu epdi vaikalam
Neenga atha entha mathiri place la vachinga
பல காரணங்கள் இருக்கலாம். அதிக தண்ணீர் விட்டு இருந்தால் வேர் அழுகி இருக்கலாம் , அல்லது அதிக உரங்களை சிறு செடிக்கு இட்டு இருக்கலாம். எனவே இன்னோரு முறை முயற்சிக்கவும்
கேழ்வரகு நடவு எப்பொழுது சிறந்தது
தை.மாசி
ஆமணக்கு விதை எப்போது பயிரிடலாம்
கத்தரியில் தண்டு துளைப்பான் கட்டுபடுத்துவது எப்படி
ஒரு செடி கிளை இன்னொருசெடி கிளையில் ஒட்டாதவாறு இடை இடைவெளி இருந்தாலே தண்டு துளைப்பான் போன்ற எந்த ஒரு நோயும் வர வாய்ப்பு குறைவு
Namudaiya nattu vidhaikal engage kidaikum endru post panunga for all kinds of vegetables and rice
கண்டிப்பாக பதிவிடுகிறேன்
ULAVAR ANAND
98409 60650
நான் முல்லை பூச்செடி 500 செடிகள் இரண்டு வருடங்களாக வளர்த்து வருகிறேன் ஆனால் செடிகள் வளர்ச்சி இல்லை மற்றும் மஞ்சள் நிறத்தில் காணப்படுகிறது மற்றும் பூக்கள் அதிகமாக வரவில்லை மண் கரிசல் மண் மருந்து கடைகளில் கேட்டால் மண்ணில் இரும்புச்சத்து இல்லை என்று சொல்கிறார்கள் இதற்கு என்ன தீர்வு உரங்களும் முப்பது நாளைக்கு ஒருமுறை வைத்துக் கொண்டிருக்கிறோம் ஆனால் செடிகள் பிரச்சினையா மண் பிரச்சினையா என்று தெரியவில்லை
பழைய கிளைகளை பாதியில் வெட்டி விட்டு (கவாத்து) உரம் வைத்து இருநாளுக்கொருமுறை நீர் பாய்ச்சுங்கள். முதிர்ந்த இலைகள் கூட மஞ்சள் கலராக மாறி மொட்டு விடும் திறனை பாதிக்கலாம்.
எங்கள் வீட்டு பகுதிகளில் எலுமிச்சை செடி வருவதேயில்லை….please help me…
வளர்வது இல்லையா? என்ன வகை மண் என்று கூறுங்கள்
என்னோட 40 நாள் கத்தரி தோட்டம் சமீபத்தில் பெய்த மழையில் தண்ணீர் தேங்கி அனைத்தும் இறந்துவிட்டது.
இந்த மழை காலத்திற்கு ஏற்ற பயிர் வகைகள் இருந்தால் சொல்லுங்க..
விவசாயம் எனது புது முயற்சி..
எனவே உங்கலுடைய ஆலோசனை வேண்டும்.
செடி வகைகள் அல்லாது புல் வகை நெல், கேழ்வரகு சோளம் இவைகள் தாங்கும்
மருத்துவ தாவர மார்கேட்டிங் கிடைக்குமா என்று சொல்லுங்க என்றும் விவசாயிகளின் ஒருவன்.. நன்றி
என்னென்ன தாவரங்கள் உங்களிடம் உள்ளது
பூசணியில் ஊடு பயிர் செய்ய முடியுமா.
ஆங்காங்கே வாழை வைத்து கொள்ளலாம். பக்கக்கன்றுகள் இல்லாமல்
ஐயா குட்டை ரக தென்னை கன்றுகள் எங்கு கிடைக்கும் மற்றும் தேங்காய்க்கு ஏற்றதா
நீங்கள் எந்த ஊர்