இந்தியாதான் கறிவேப்பிலையின் தாயகம் ஆகும். இதன் தாவரவியல் பெயர் முறையா கோயிங்கி ஆகும். கறிவேப்பிலை தென்னிந்திய மற்றும் இலங்கை உணவு வகைகளில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.
கறிவேம்பு அல்லது கருவேப்பிலை என்று அழைக்கப்படும் இது பல மருத்துவ குணங்கள் கொண்ட தாவரம் ஆகும்.
பயிரிடும் முறை:
- ஜூலை – ஆகஸ்ட் மாதம் நடவு செய்ய ஏற்ற பருவம் ஆகும்.
- கருவேப்பிலை பொதுவாக எல்லா வகையான மண் வகைகளிலும் வளர்ந்து மகசூல் கொடுக்கும் தன்மை உடையது. ஆனால் ஊட்டமிக்க செம்மண் வகை நிலங்கள் மிகவும் ஏற்றது. பொதுவாக நீர் தேங்காத மண் வகையாக இருந்தால் நன்றாக வளரும் தன்மை உடையது.
- கருவேப்பிலை பொதுவாக விதை மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது. நன்கு பழுத்த பழங்களை பறித்து உடனே தோல் நீக்கி அல்லது அப்படியே நில மேடை பாத்திகளில் வரிசையாக ஊன்ற வேண்டும், விதைத்த 20 நாட்கள் கழித்து முளைக்க ஆரம்பிக்கும். பின்பு இரண்டு அல்லது மூன்று மாத நாற்றுகளை எடுத்து கலவை மண் நிரப்பிய பொலித்தீன் பைகளில் நட்டு, பாதுகாக்க வேண்டும். ஒரு ஆண்டு முதல் இரண்டு ஆண்டு வயதுடைய நாற்றுகளையே நடவுக்கு பயன்படுத்த வேண்டும்.
- நிலத்தை மூன்று அல்லது நான்கு முறை நன்றாக உழவு செய்ய வேண்டும். கடைசி உழவின் பொது 5 டன் தொழு உரம் இட வேண்டும். பெரிய செடிகளாக வளர்க்க 2 . 5 மீட்டர் இடைவெளி தேவைப்படும்.குத்துக் செடிகளாக வளர்க்க 1 . 2 மீட்டர் இடைவெளி வேண்டும். அதிக மகசூல் பெற 60 செ.மீ இடைவெளியில் குழிகளை எடுக்க வேண்டும்.
- தயார் செய்துள்ள குழிகளில் ஒன்று முதல் இரண்டு வயதுடைய நாற்றுகளை நடவு செய்ய வேண்டும். தேர்வு செய்யும் நாற்றுகள் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும்.
- நாற்றுகளை நட்டவுடன் நீர் பாய்ச்சுதல் அவசியமாகும். பின்பு நட்ட மூன்று நாட்கள் கழித்து உயிர்த் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். அதன் பின்னர் வாரம் ஒரு முறை நீர்ப்பாசனம் செய்ய வேண்டும்.
உரமிடும் முறை :
- 1 அடி ஆழத்தில் சதுர குழிதோண்டி நாற்றுகளை சுற்றி மக்கிய தொழுஉரம் இட வேண்டும். பின்னர் உரத்தை மண்ணுடன் சேர்த்து கிளறி விட வேண்டும். ஒவ்வொரு அறுவடைக்கு பின்னரும் ஒரு செடிக்கு 20 கிலோ தொழுஉரம் இட வேண்டும்.
- வருடம் ஒரு மரத்திற்கு 15 முதல் 20 கிலோ வரை தொழுஉரம் அல்லது மண்புழு உரம் இட வேண்டும். மேலும் 150 கிராம் தழைச்சத்து, 25 கிராம் மணிச்சத்து 50 கிராம் சாம்பல் சத்து கொடுக்கக்கூடிய உரங்களை இட்டு மண் அணைக்க வேண்டும். அதன்பின் தேவைக்கேற்ப வருடத்திற்கு வருடம் உர அளவினை அதிகப்படுத்த வேண்டும். 100 ம் நாள் ஒவ்வொரு செடியின் வேர்ப்பகுதியிலும் 50 கிராம் வேப்பம் பிண்ணாக்கை வைக்க வேண்டும்.
- பொதுவாக கறிவேப்பிலை தோட்டத்தில் களைகள் இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும். ஆகையால் செடியை சுற்றியுள்ள களைகளை வெட்டி சுத்தம் செய்து வட்டம் போட்டு தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.
- செடிகள் 1 மீட்டர் வளர்ந்தவுடன் நுனிக்கொழுந்தினை கிள்ளி விட வேண்டும். இவ்வாறு செய்வதினால் பக்க கிளைகள் வளர்ச்சி அதிகரிக்கும். ஒரு செடிக்கு 5 – 6 கிளைகள் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
- நடவு செய்த 6 – ம் மாதத்தில் இருந்து அறுவடை செய்யலாம். தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அறுவடை செய்யலாம். பூமியில் இருந்து 10 செ.மீ உயரம் விட்டு அறுக்கடை செய்ய வேண்டும்.
- ஒரு ஆண்டு கழித்து, ஒரு ஏக்கர் நிலத்தில் 400 கிலோ கருவேப்பிலை கிடைக்கும். ஐந்து வருடம் கழித்து 3500 – 5000 கிலோ வரை நல்ல மகசூல் கிடைக்கும்.
பயன்கள்:
- பித்தத்தை தனித்து உடல் சூட்டை ஆற்றும் தன்மை உடையது. அதோடு கருவேப்பிலை கீரை மனதுக்கு உற்சாகத்தை தரக்கூடியது.
- குமட்டல், சீதபேதியால் உண்டான வயிற்று உளைச்சல், நாள்பட்ட காய்ச்சல் ஆகியவற்றை கருவேப்பிலை குணப்படுத்துகிறது. பித்த மிகுதியால் உண்டாகும் பைத்தியத்தை குணப்படுத்த கருவேப்பிலை உதவுகின்றது.
- வாந்தி, நாக்கு ருசியற்று போகுதல், பசியற்ற நிலை, சளி ஆகியவற்றை கறிவேப்பிலை குணப்படுத்தும். கண்கள் ஒளி பெறவும், முடி நரைக்காமல் இருக்கவும், மேனி எழில் பெறவும் கறிவேப்பிலை உதவுகின்றது.
- கறிவேப்பிலை சாறு ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களை பலப்படுத்தும். பத்திய உணவு சாப்பிடுபவர்கள் கறிவேப்பிலை சேர்த்துக்கொள்வது நல்லது.
- கறிவேப்பிலையை நன்கு அரைத்து அதனுடன் முட்டையின் வெள்ளை கருவை சேர்த்து தலைக்கு தேய்த்து குளித்தால் முடி நன்றாக வளரும்.
தயவு செய்து உங்களுடைய கருத்துக்களை கீழே உள்ள கமெண்ட் ஏரியாவில் பதிவிடவும். தவறுகளை சுட்டிக்காட்டி, உங்கள் கருத்துக்களை பரிமாறி இவ்வலைத்தளத்தை திறன்பட நடத்த உதவவும்.
Very useful information. Do Well
Thank You Saranya, Keep Watch my blog for more information about Agriculture.
Useful information
Thank You Vadivelan. Thanks for your support.
கருவேப்பிலைத் தண்டை முளைக்க வைக்க வழியுண்டா?
கருவேப்பிலை தண்டை நன்கு சத்துக்கள் நிறைந்த மண்ணில் நட்டு வைத்து அதன் மேற்புறம் காயாமல் இருக்க ஈரமான சாணத்தை வைக்கவும்.
Helo sir, I need karuvapillai nathu for 2 acre
Please advise wher is Avila ke
My location Sathyamangalam
Thanks
Rajesh