அத்திப்பழம், மர வகையைச் சேர்ந்தது. இது தென்கிழக்காசியாவைத் தாயகமாகக் கொண்டது. நாட்டு அத்தி, வெள்ளை அத்தி, நல்ல அத்தி என பல வகை அத்தி மரங்கள் உண்டு. அத்தி அளவான உயரமுடைய, நடுத்தர மரமாகும்.
உலகில் தற்போது கிரீஸ், அல்ஜீரியா, மெராக்கோ, சிரியா, இத்தாலி, துருக்கி போன்ற நாடுகளில் பயிரிடப்படுகிறது. இந்தியாவில் மகாராஷ்டிரா, கர்நாடகா, பீகார், மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் பயிரிடப்படுகிறது.
அத்திப்பழம் எப்படி பயிரிடுவது…?
- அத்தியில் நாட்டு அத்தி, டிம்லா அத்தி, ஆப்கான் அத்தி, இஸ்ரேல் அத்தி போன்ற வகைகள் உள்ளன.
- தை மாதம் நடவிற்கு ஏற்ற பருவம் ஆகும்.
- அத்திமரமானது களிமண் நிலம் மற்றும் ஆற்றுப்படுக்கைகளில் நன்கு வளரும் தன்மை கொண்டது.
- சாகுபடிக்கு தேர்வு செய்த நிலத்தை நன்கு உழவு செய்ய வேண்டும். கடைசி உழவின் போது 10 டன் தொழுஉரம் கலந்து உழவு செய்ய வேண்டும்.
- விண் பதியன்கள் மற்றும் ஒட்டுக்கட்டுதல் மூலம் பயிர்ப் பெருக்கம் செய்யப்படுகிறது.
- தேர்வு செய்த பதியன்களை 5.7 மீட்டர் இடைவெளியில் நடவு செய்ய வேண்டும். மழை காலங்களில் நடவு செய்தால் வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.
- இது வறட்சியைத் தாங்கி வளர்வதால் இவற்றை மானாவாரியாக பயிர் செய்யலாம். இறவையாக பயிரிட்டு தண்ணீர் பாய்ச்சுவதால் அதிக மகசூல் கிடைக்கும்.
- நன்கு வளர்ந்த மரம் ஒன்றுக்கு 20 கிலோ காய்ந்த தொழு எருவும், 600 கிராம் தழைச்சத்து, 350 கிராம் சாம்பல் சத்து, 400 கிராம் மணிச்சத்து கொடுக்கக்கூடிய உரங்களை அளிக்கவேண்டும். இந்த உர அளவை பிரித்து இரண்டு தடவையாக கொடுக்க வேண்டும்.
- செடிகள் வளரும் வரை களை இல்லாமல் பராமரிக்க வேண்டும். பழ பறிப்பு முடிந்தவுடன் கவாத்து செய்ய வேண்டும்.
- இதில் நோய் தாக்குதல் குறைவு. அசுவினி பூச்சி தாக்குதல் மட்டும் காணப்படும்.
- அசுவினி பூச்சியை கட்டுப்படுத்த டைமெத்தோயேட் அல்லது மீதைல் டெமட்டான் 2 மில்லி மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவேண்டும்.
- நடவு செய்த 4வது ஆண்டு முதல் மகசூல் தரவுள்ளது. ஆனால் 8 ஆண்டிற்கு பிறகு நிரந்தர வருமானம் கிடைக்கும்.
- ஒரு மரத்தில் இருந்து 180 முதல் 360 கிலோ பழங்கள் கிடைக்கும்.
அத்திப்பழம் பயன்கள்:
- தினசரி 2 பழங்களை சாப்பிட்டு வந்தால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். உடலும் வளர்ச்சி அடைந்து பருமனடையும்.
- அத்திபழத்தில் இரும்புச்சத்து உள்ளது. கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் தாதுக்களும் நிறைந்து உள்ளதால் எலும்பு வளர்ச்சிக்கும், பலத்திற்கும் உதவுகிறது.
- உண்ட உணவை விரைவில் ஜீரணிக்கச் செய்து பித்தத்தை வியர்வையாக வெளியேற்றி உடலுக்குச் சுறுசுறுப்பைத் தரும்.
- வெண்புள்ளிகளைக் குணமாக்க அத்திப்பழத்தைப் பொடி செய்து பன்னீரில் கலந்து பூச வேண்டும்.
- உலர்ந்த அத்திப் பழங்களை தேனில் ஊற வைத்து சாப்பிட்டால் அளவற்ற போஷாக்கை பெறலாம். உலர்த்திப் பொடி செய்து ஒரு ஸ்பூன் வீதம் பாலில் கலந்தும் சாப்பிடலாம்.
- சிறுநீர்ப்பைப் புண், சிறுநீர்ப் பையில் கல் தோன்றுதல், ஆஸ்துமா, வலிப்பு நோய், உடல் உளைச்சல், சோர்வு, அசதி, இளைப்பு போன்றவற்றை நீக்கவும் அத்திப் பழம் உதவுகிறது.
- அத்தி பழங்கள் ரத்தத்தை சுத்தம் செய்து, உடல் உஷ்ணத்தை குறைத்து மூல நோயை கட்டுப்படுத்தும் திறன் கொண்டது.
எனக்கு அத்தி மரம் உண்டு, நிறைய காய் காய்க்கிறது ஆனால் பழம் ஆவதற்கு முன்பு உதிர்ந்து விடுகிறது , காய்க்கு உள் வெற்றிடமாக உள்ளது. இது எதனால்
நன்கு வளர்ந்த மரம் ஒன்றுக்கு 20 கிலோ காய்ந்த தொழு எருவும், 600 கிராம் தழைச்சத்து, 350 கிராம் சாம்பல் சத்து, 400 கிராம் மணிச்சத்து கொடுக்கக்கூடிய உரங்களை அளிக்கவேண்டும். இந்த உர அளவை பிரித்து இரண்டு தடவையாக கொடுக்க வேண்டும்.
Hi friends
எங்கள் வீட்டில் நாற்பத்தி மூன்று கண்கள் உள்ளன இப்போது மூன்று ஆண்டுகள் முடிந்த நிலையில் காய்க்க ஆரம்பித்துள்ளது. காய் அதிகமாக உள்ளது பிஞ்சாக உள்ளபோதே குருவிகள் தின்று விடுகிறது தவறிய பழங்களில் சீனி எறும்புகள் மொய்க்கின்றன எடையும் குறைவாக உள்ளது என்ன செய்வது . இந்த மரத்திலிருந்து எவ்வாறு புதிய கன்றுகளை உருவாக்குவது.
என்னோட நம்பர்
9443788212
தங்களுடைய மொபைல் எண் கிடைக்குமா சகோதரரே
அய்யா, எனக்கு அத்தி மர நாற்று தர முடியுமா?
I need your contact number
friends,
Where i get seeds or plant?
Please visit your nearest Nursery.
I want u r phone number
8050815727
அத்திக்காய்களைச்சாப்பிடலாமா..?பழுப்பதற்குமுன் வெம்பிக்கொட்டிவிடுகின்றன
ஐயா . உங்கள்மீது சாந்தி சமாதானம் உண்டாகட்டும்
ஐயா இலங்கையில் அத்தி மரம் இல்லை எனவே எனக்கு அத்தி விதைகள் அனுப்ப முடியுமா எனது போன் இலக்கம் 0097474496536
சீமை ஆத்தியிள் பெரியா இழை உல்ல அத்தி எந்த ரகம்.
நாட்டு அத்தி மரம் காய்க்க எத்தனை ஆண்டுகள் ஆகும்.
நாட்டு அத்தி நடவு செய்த 4வது ஆண்டு முதல் மகசூல் தரவுள்ளது.
i need a plant. how i buy it ?
I need athi plant where can I get
I need contact number
8050815727
நண்பா எனக்கு இரண்டு அத்தி மரம் வளர்க்க வேண்டும் நெடுநாள் ஆசை உங்களால் முடிந்தால் உதவி செய்வோம் 9445344339
இது நம்முடைய குழு. இங்கு உங்கள் சந்தேகங்களை கேட்கலாம்
https://www.facebook.com/groups/agriculturetripiyarkaivivasayam
எனக்கு அத்தி செடி வேண்டும் அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்.plase tell me 9003807186
இது நம்முடைய குழு. இங்கு உங்கள் சந்தேகங்களை கேட்கலாம்
https://www.facebook.com/groups/agriculturetripiyarkaivivasayam
நல்ல தரமான அத்தி கன்றுகள் வாங்கவிரும்புகின்றேன்.மதுரை மாவட்டத்தில் எங்கு கிடைக்கும்?லாபம் தரும் அத்தியின் வகை என்ன?போன்ற தகவல்களை அளிக்கவும்.நன்றி
Dear friends.
Ennaku athi pazham feeds venum, help pannuga plz.
தரமான அத்தி கன்றுகள் தேவை.
தமிழகத்தில் எங்கு கிடைக்கும்?
தகவல் வழங்கவும்.
9894074840
அத்தி கன்று கிடைக்கும் 9786572163